ஒரு வழியாக 3 நாட்கள் பிடித்தது...
எதற்கா..?
நான் வந்து குடியேறிய இந்த வீட்டில் எல்லா விஷயங்களையும் செட்டில் செய்வதற்கு (பணத்தையும் சேர்த்துத்தான்).
நல்ல வீடு... என் போன்ற பேச்சுலர்களுக்கு இதுமாதிரியான தனி வீடு அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார்கள். என்னைப்பற்றி சொல்லவேயில்லியே..! நான் ரமேஷ்... கொரியர் ஆஃபீஸில் வேலை...
வேலை தேடி சென்னைக்கு வரும் என் போன்ற வாலிபர்களுக்கு கொரியர் வேலைதான் வெகு சுலபத்தில் கிடைக்கிறது. சில சினிமாக்ககளிலும் பார்த்திருக்கிறேன். கதாநாயகன் ஊரிலிருந்து வருவான் சின்ன வேலையில் சேருவான், விரைவில் கதாநாயகியை முதல் முறையாக பார்ப்பான்... உடனே காதல்... டூயட்...
இப்படித்தான் கதை போகும்.
சே! சே! என் விஷயத்தில் அப்படியெல்லாம் நடக்காது... என்றுதான் எண்ணியிருந்தேன்... அவளைப் பார்க்கும் வரை...
அவள்... பெயர் தெரியவில்லை... ஆனால், ஒரு சோகமான விஷயம் அவளுக்கு கல்யாணம் முடிந்திருக்கிறது. அதனாலென்ன! அழகாயிருக்கிறாளே! அவள் கணவன் கை கால் விழுந்துபோய் பக்கவாதம் வந்து அசிங்கமாக வீல்சேரில் அமர்ந்தபடி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பான். இவனுக்கு இவ்வளவு அழகான மனைவியா, என்று வயிறு எரிகிறது. என்ன செய்வது... விதி என்றுதான் வழக்கமாக சொல்லவேண்டும். ஆனால், அப்படியெல்லாம் நான் சொல்லி என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ளப் போவதில்லை... எனக்கான சேன்ஸை எதிர்பார்த்து எப்போதும் என் வீட்டு பால்கனியில் காத்திருக்கிறேன். எனது பால்கனியிலிருந்து பார்க்கும்போது, அவள் குடியிருக்கும் வீடு கிட்டதட்ட 60% சதவிகிதம் புலப்படுகிறது. நான் குடியேறிய வீட்டில் பெரும்பாலான நேரம் பால்கனியிலேயே செலவிடுகிறேன்.
புடவையில் ஒரு பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என்று தோன்றும். அவளுக்கு வெவ்வேறு மாடர்ன் டிரஸ்களை என் கற்பனையில் அணிவித்திருக்கிறேன். ம்ஹூம்.. அவளுக்கு புடவைதான் அழகு... நான் அடிப்படையில் கொஞ்சம் கூச்ச சுபாவம் என்பதால் அந்தரங்கமாக அவளது வர்ண்னையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை...
அவளும் என்னை பார்க்கிறாள். பார்வையா அது.. அய்யோ... அதில் 1000 இன்விடேஷன். எப்போது என்னை வந்து அடையப்போகிறாய் என்று சங்ககால பாடல்களில் சொல்வார்களே அப்படி ஒரு பசலை நோய் அவளுக்கு என்னை பார்க்கும்போது ஏற்படுவதை நான் டெலிபதியில் உணருகிறேன். சில சமயம் அவள் வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்க்கும்போது எனக்கு ஜூரம் வந்தது போல் ஆகிவிடும்.
அவளிடம் இதுவரை நான் பேசியதில்லையே தவிர எங்களுக்குள் அடிக்கடி ஒரு விளையாட்டு விளையாடுவோம். என்ன தெரியுமா..? நான் பால்கனியில் நிற்க, அவள் அவளது வீட்டு வாசலில் நின்று கொள்(ல்)வாள். இருவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொள்வோம். யார் பார்வையை முதலில் விலக்குகிறார்கள் என்பதுதான் அந்த கேம். ஒவ்வொருமுறையும் தோற்றவன் நான்தான். இந்த இடத்தில் அவள் பார்வையைப் பற்றி ஒரு கவிதை சொன்னால் நன்றாக இருக்கும்தான். ஆனால் எனக்கு கவிதை எழுத வராது... அதனால் மன்னியுங்கள்.
இந்த பார்வை மாற்றும் விளையாட்டு மட்டும் போதவில்லை... இன்று அவளிடம் முயற்சி செய்தே தீர்வது என்று முடிவெடுத்தேன். . அவள் கணவன் கைகால் விழுந்தவன்தானே, நான் வீட்டில் சென்று பேசினாலோ அல்லது வேறு ஏதாவது.. செய்தாலோ என்ன செய்துவிடப்போகிறான்..! எனவே எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டு வீட்டைப்பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.
மணி, மதியம் 3... உண்ட மயக்கத்தில் பலரும் மயங்கிக் கிடக்கக்கூடிய மதிய வேளையில், வேறு பசியுடன் நான் அவள் வீட்டுக் கதவை தட்டினேன். கதவு திறந்தாள், உள்ளே வரச்சொன்னாள். குரலின் இனிமையில் நான் மாண்டு மீண்டேன்.
உள்ளே அவள் கணவன் வீல்சேரில் அமர்ந்தபடி கண்களால் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விழி மட்டும் அசைந்து கொண்டிருந்தது. என்னையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். அவனுக்கு நாங்கள் செய்யவிருக்கும் தப்பு தெரிந்திருக்குமோ.. என்று எண்ணினேன். தெரியாமல் எப்படியிருக்கும், அவனும் ஒரு ஆண்மகன்தானே, என் நிலையில் அவன் இருந்தால் அவன் நிலையில் நானிருந்தால் என்னென்ன நினைப்போம் என்று யூகித்து கொள்ள, அவன் கண்டிப்பாக எங்களிருவரிடையே நடக்கவிருக்கும் விஷயங்களை கணித்தவனாகத்தான் தோன்றினான்.
அவள் கையில் ஏதோ ஒரு வெள்ளை திரவத்தை கொண்டு வந்து கொடுத்தாள்.. வாங்கி பருகினேன். சத்தியமாக சொல்கிறேன். இதுவரை நான் அதுபோன்ற ஒரு பாணத்தை பருகியதேயில்லை... என்னவென்று தெளிவாக சொல்லமுடியாதபடி வெகுருசியாக இருந்தது. நான் அவள் கணவனைப் பார்ப்பதை தவிர்த்தேன். ஏனென்று தெரியவில்லை அவனைப் பார்க்க எனக்கு பயமாக இருந்தது. என்னருகே சோஃபாவில் அமர்ந்துக் கொண்டிருந்த அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'உங்க பேரென்ன..?'
'ஆரியமாலா..' என்றாள்.
வித்தியாசமான பெயர், எனக்கு அவள் பெயர் கேட்டவுடனே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'காத்தவராயன்' என்ற படத்தில் சாமியார் வேடத்தில் ஆரியமாலா.. ஆரியமாலா... என்று ஜபிப்பது போல் பாடுவாரே.. அதுதான் ஞாபகம் வந்தது.
சில பாடல்கள் கேட்கும்போது, அன்று முழுவதும் மனதிற்குள் நமக்கே தெரியாமல் அதுபாட்டுக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும். அதுபோல எனக்கு ஆரியமாலா.. ஆரியமாலா... என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
அவள் எழுந்தாள். எதற்காக இருக்கும்.. அதற்காகத்தான் இருக்குமோ! என்று ஒரு தப்பு கற்பனை செய்தேன். ஆனால், அவள் என்னிடம் வராமல் நேரே வாசல் கதவுபக்கம் சென்றாள்.
நான் அவள் செல்வதைப் பார்த்தபடி வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் படங்களை பார்த்தேன். எல்லாம் அருமையான ஓவியங்கள் வீட்டின் சுண்ணாம்பு கலர் உட்பட பயங்கர ரம்யமாக இருந்தது. அவள் வாசற்கதவை தாழிட்டாள்.
திரும்பி கதவில் சாய்ந்தபடி என்னைப் பார்த்தாள்.
இப்போ நான் ரெடி என்பது போல் இருந்தது அந்தப் பார்வை...
நான் ஒருமுறை அவள் கணவைப் பார்த்தேன். பரிதாபமாக இருந்தது. எழுந்து நின்றேன்.
அவள் என்னை நெருங்கி வந்தாள்.
நானும் நெருங்கினேன்.
ஆரியமாலா... ஆரியமாலா.. ஆரியமாலா... ஆரியமாலா...
நெருக்கம், எங்கள் தேகங்களையும், தூரங்களையும் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
என்னோடு வெகுநாட்கள் பழகியவள் போல் எனக்காகவே இவ்வளவு நாட்கள் காத்துக்கொண்டிருந்தவள்போல் என்னை மிகவும் உரிமையோடு கட்டிக்கொண்டாள்.

உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்டோம். என் கண்களில் நீர் வழிந்தது...

என் உடம்பிற்குள் என்னவென்று தெரியாதபடி ஒருவித சக்தி பரவியது. அந்த சக்தியில் நான் எரிந்து கருகிவிடுவேனோ என்பது போல் இருந்தது.

எனக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அவள் கணவன் எழுந்து நிற்பது போல் ஒரு பிரம்மை... அப்படியே முத்தமிட்டுக் கொண்டே அவளையும் சேர்த்து திருப்பிக் கொண்டே பார்த்தேன். உண்மைதான், ஆரியமாலாவின் கணவன் எழுந்து நின்றுக் கொண்டிருந்தான்.
நான் என்னை சட்டென விடுவித்துக் கொண்டேன்.
ஐயோ.. இது என்ன, இவனுக்கு பக்கவாதமிருக்க எப்படி எழுந்து நிற்கிறான்..? என்று பார்த்தேன்.
அவனுக்கும் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. திரும்பி ஆரியமாலாவைப் பார்த்தேன். அவள் என்னை அதே மதனப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கணவன், புத்துயிர் பெற்றவனாக ஓடிச்சென்று கதவை தாழ்திறந்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அவன் ரோட்டில் ஓடும் கடைசி காட்சியை வீட்டு ஜன்னலிலிருந்து என்னால் பார்க்கமுடிந்தது. இவன் ஏன் இப்படி ஓடுகிறான். இவனுக்கு என்ன அப்படி ஒரு பிரச்சனை என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போதே என் உடம்பு கல் போல் கனக்க ஆரம்பித்தது. கைகால்கள் மூட்டுக்கள் எல்லாம் சேர்ந்து இறுகி கல் போல் ஆவதை உணர்ந்தேன். வலியும் வேதனையும் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தேன்.
ஆரியமாலா என்னை தூக்கிச் சென்று இதற்குமுன் அவள் கணவன் உட்கார்ந்திருந்த வீல்சேரில் என்னை அமர்த்தினாள்.
'என்னை மன்னிச்சிடு நரனே..! நான் தேவலோக கன்னி, சாபத்திற்குட்பட்டவள். என் சாப விமோசனப்படி நான் 1000 ஆடவர்களுக்கு முத்தமிட வேண்டும். நீ 237ஆவது ஆள். 1000 எண்ணிக்கையை தொடும்வரை எனக்கு மரணமுமில்லை, வயோதிகமுமில்லை... இப்படியே ஊர் ஊராக சென்று ஒவ்வொரு ஆடவராக பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்தவன் சிக்கும்வரை நீ இப்படித்தான் கல்லாக இருப்பாய். உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன். அடுத்தவன் வந்ததும் நீ போகலாம். பயப்படாதே உன்போல சபலர்கள் பூலோகத்தில் நிறைய உண்டு' என்று கூறியபடி அவள் என்னைக் கடந்து சென்றதை விழி மட்டும் அசைந்தபடி இருக்கும் என்னால் திரும்பி பார்க்க முடியவில்லை.
- முடிந்தது -

25 comments:
வாவ், பென்டாஸ்டிக், இந்த முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை, அருமை நண்பரே.
நன்றி நண்பா...
வாவ், ஹரீஷ், தயவுசெய்து கொஞ்ச நாள் Horrorக்கு லீவு குடுத்துட்டு இது மாதிரி நிறைய எழுதுங்க, சத்தியமா எதிர்பார்க்காத முடிவு:))
வாங்க ரகு,
கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி கொஞ்ச நாளைக்கு Horrorக்கு லீவு கொடுக்கணும்தான் நினைச்சிட்டிருக்கேன். ஆனா நம்மையும் மீறிய ஒரு சக்தி ஆ(வி)ட்டிப்படைச்சிடுமோன்னு பயமாயிருக்கு...
அடுத்து எழுதிட்டிருக்கிற untitled கதை நோ ஹாரர்னு தெரியுது...
தினேஷை இந்த கதையை ஃப்ரீயா இருக்கும்போது படிச்சிப் பார்க்க சொல்லுங்க.. அவரோட கமெண்டுகளையும் ஆவலாய் எதிர்ப்பார்க்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரகு.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
செம..பாஸ்ட் கதை..முடிவு எதிர்ப்பார்க்கவில்லை...
சபல பட்டா இப்படிதான் ஆகும்!!
வாங்க ஜெட்லி, வருக்கைக்கும் வாசிப்புக்கும் நன்றி...
-
ட்ரீமர்
கதை ரெம்ப நல்லா இருக்கு..முடிவு எதிர்பார்க்காதது..
NAAN ROMBA RASICHCHU PADICHCHA KATHAIYILA ITHUVUM ONNU
நல்ல திருப்பம் முடிவுல... வாழ்த்துக்கள்...
நன்றி நாடோடி...
நன்றி bahurudeen... ரொம்ப சந்தோஷம்...
-
ட்ரீமர்
நல்லாயிருக்கு ஷரிஷ் :)
நம்ம மூணு எழுத்து நண்பர் தொடர்ந்து நீங்க எழுதறதை வாசிக்கறார் ஹரீஷ். ஆனா ஐந்து எழுத்து பெயருடைய ஆறுமுகனின் இம்சையினாலும், சூழ்நிலை காரணமாவும் அவரால பின்னூட்டமிட முடியல. ஆனா கருத்துகளை என்னோட பகிர்ந்துக்கறார்:)
வாங்க D. R. Ashok,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ரகு,
நீங்க சொன்ன கிசுகிசு புரியுது. நண்பர் தொடர்ந்து படிக்கிறார்னு தெரிஞ்சது சந்தோஷமாயிருக்கு. நான் விசாரிச்சதா சொல்லுங்க... அவரையும் ப்லாக் எழுதச் சொல்லுங்க... மாசத்தக்கு ஒரு இடுகையிட்டாலும் பரவாயில்ல ஆனா அவரும் எழுதுனா நல்லாயிருக்கும்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
ஆகா ! நல்ல கதை. எதிர்பார்க்காத முடிவு.
நன்றி திரு. க. இராமசாமி...
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பரே.
கதை நன்றாக உள்ளது.
நன்றி மலர்விழி...
excellent!
ThanX Matangi Mawley...
எதிர் பாக்காத முடிவு இருக்கும்னு எதிர் பாத்தேன் ஆனால், இது ரொம்ப எதிர பார்க்காதது..
விறு விருப்பான கதை ஓட்டம்
நன்றி வேங்கை... நீங்க படிக்கும்போது, கதை நல்லாயிருக்கணும்ங்கிற உங்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யத்தான் இந்த எதிர்பாக்காத முடிவு... வருகைக்கும், வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
தொடர்ந்து வாங்க...
-
ஹரீஷ் நாராயண்
This story is very different and unexpected end.. Gud.. keep going...
-SweetVoice (SV)
Hello SweetVoice,
Thanx for the visit & appreciation..!
-
DREAMER
Great narration Hareesh.. ( Climax did reminds me of Skeleton Key though :))....
Post a Comment