பதிவு போட்டு நீண்ண்ண்ண்......ட நாட்களாகிவிட்டது...
தாமதத்திற்கு அனைத்து அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, வலைப்பதிவுலகிற்கு ஒரு ரீ-என்ட்ரி பாஸ் வாங்கிக்கொண்டு உரிமையோடு உள்நுழைகிறேன்...
இந்த மாதம், தமிழ்நாட்டை குடும்பத்தோடு ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்தேன். அந்த சுற்றுலாவில் ஃபோட்டோவில் பதிவு செய்த சில சிறந்த தருணங்களை இதோ இங்கே உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
DETAILS
Camera : Kodak Z1012 ISDate : July 16 to 21, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9
↑ பாண்டிச்சேரியில் கடற்கரையோர சாலை ↑
↑ பாண்டிச்சேரி கடற்கரையோரம் ↑
↑ நிழல் விழாத கோபுரத்தின் நிழற்படம் ↑
(தஞ்சை பெரிய கோவில் கோபுரம்)
↑ தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்ட பிரதானவாயில் ↑
↑ பொன்னிற வெளிச்சத்தில் பிரகாரம் ↑
↑ நாயக்கர் மஹால் - படம் 1 ↑
↑ நாயக்கர் மஹால் - படம் 2 ↑
↑ நாயக்கர் மஹால் - படம் 3 ↑
↑ இவர் பெரிய FIGHTER-ஆம். நீண்ட பிரயத்தனத்துக்கு பிறகுதான் இவர் ↑ ஃபோட்டோவை எடுக்க முடிந்தது. ஃபோஸ் கொடுக்க ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிட்டார்.
↑ திருப்பரங்குன்றம் கோவில் வீதி ↑
↑ மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொற்றாமரைக்குளம் ↑
↑ கொடைக்கானல் மலைப்பாதையில் மேகத்துக்குள் பஸ் நுழைந்தபோது... ↑
↑ மேக மண்டலங்கள் தாண்டி கண்களுக்கு விருந்தளித்த வெள்ளி நீர்வீழ்ச்சி
இயற்கையில் மட்டும்தான் வீழ்ச்சியும் அழகு..! இல்லையா..?
↑ எப்போதும் ஃப்ரிட்ஜில் இருப்பதுபோல் சில்லென்று இருக்கும் தூண்பாறை
↑ பசுமைப் பள்ளத்தாக்கு..! Suicide Point என்றும் சொல்கிறார்கள். ↑
↑ Suicide Pointஐ உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த குட்டிக்கு இந்த சின்ன வயதில் அப்படி என்னத்தான் பிரச்சினையோ..! ↑
↑ Coaker's Walkனு இந்த இடத்துக்கு பெயர். இங்கு வாக்கிங் போனால் உடம்புக்கு நல்லதாம். ஆனால், இங்கு நடைபோட்டவர்கள் எல்லாரும், வேர்கடலை, ஐஸ்க்ரீம், சோளம் என்று ஏகத்துக்கும் கொரித்துக் கொண்டே நடக்கிறார்கள். அப்புறம் எப்படி உடம்புக்கு நல்லது..? (நான் ஒரே ஒரு ஐஸ்க்ரீம்தான்... ஹி ஹி..)
![]() | |||||||||||||||||||||||||
↑ KODAI LAKE, இங்கிருக்கும்போது நேரம் போவதே தெரியாதபடி அப்படி ஒரு அழகு... ↑ |
↑ சினிமாவில் படகில் வரும் அத்தனை பாடல்களும் நினைவுக்கு வந்த, மறக்க முடியாத தருணமிது... ↑
↑ மேகங்களினூடே எட்டிப்பார்த்து 'டாட்டா' சொல்லும் சிகரம்... மீண்டும் வரும்படி அன்புக்கட்டளையுமிட்டது... ↑
↑ வழக்கமாக முதலில் பிள்ளையார் கோவிலுக்கு போவார்கள்!
நாங்கள் திரும்பி வரும்போது உச்சிபிள்ளையார் கோவில் சென்றுவந்தோம். அருமையான இடம். கொடுத்து வைத்த திருச்சி..! ↑
காற்றில் டீஸல் கலந்த வாசனை, Sodium Hypo Chloride கலந்த METRO WATER தண்ணி, விட்டு விட்டு பெய்யும் மழை என்று சென்னை வாழ்க்கையை ஒரு 5 நாட்களுக்கு மறந்துவிட்டு சென்று வந்த இந்த தமிழ்நாடு சுற்றுலா உண்மையிலேயே மிகவும் உற்சாகமாகவும் மாறுதலாகவும் இருந்தது. ஆனாலும் சென்னை மாதிரி வருமா..?
கொடைக்கானலில் தூண்பாறை அருகிலிருந்த பூங்காவிலும், நாங்கள் தங்கியிருந்த விடுதியின் வெளியிலிருந்த ஒரு குட்டி பூங்காவிலும், பலவண்ணத்தில் விதவிதமான மலர்களை ஃபோட்டோ எடுக்க முடிந்தது. அதையும் விரைவில் பதிவிடுகிறேன்.
14 comments:
பகிர்விற்கு நன்றிகள்.. நல்ல நல்ல இனிமையான இடங்களைக் காண்பித்ததற்கு..
நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களை போட்டு விருந்து கொடுத்துடீங்க...ஓர் இரவு பட அனுபவங்களை பதிவில் எதிபார்த்து காத்திருக்கிறேன்...நன்றி வாழ்த்துகள்...
நீங்க professional போடோக்ராபரா? படங்கள் எடுத்த விதம அருமை. அப்படியே வால்பேப்பராக வைத்துக்கொள்ளலாம்போல் உள்ளது. hats off...
Suicide Point Monkey , Coaker's Walk, KODAI LAKE ஹரிஷ் இந்த 3 யும் கலக்கல் . மற்றதை விட . ( all are nice )
ரொம்ப நாள் ஆமாம் ஹரிஷ் ரொம்ப நாள்
re-entry க்கு வாழ்த்துக்கள்
எல்லா போட்டோக்களும் அருமை
எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த குட்டி குரங்குதான்:)
அடுத்த ரவுண்டு கலக்குங்க
நண்பரே புகைப்படங்கள் ஒவ்வொன்றும் புதுமை ! . இது எல்லாம் நீங்கள் எடுத்ததுதானா !? ஒரு புகைப்படத்தில் கூட உங்களைக் காணவில்லையே அதுதான் கேட்டேன் . பகிர்வுக்கு நன்றி
நன்றி மாதவன் சார்... மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி
நன்றி சீமான்கனி... 'ஓர் இரவு' பட அனுபவங்களைப் பற்றி சீக்கிரம் பதிவிடுகிறேன்...
நன்றி கரிகாலன்... Professionalல்லாம் கிடையாது... சும்மா ஒரு Hobby'யா எடுத்துக்கிட்டிருக்கேன்...
நன்றி வேங்கை... இனிமே ரெகுலரா பதிவிடுறேன்...
நன்றி ஜில்தண்ணி... கலக்கிடுவோம்...
நன்றி பனித்துளி சங்கர், ஆஹா... நான் எடுத்த புகைப்படம்தாங்க... ஃபேமலியோட எடுத்துக்கிட்டதை பொதுப்பதிவுல போட்டா போர் அடிக்குமேன்னு ஃபில்டர் பண்ணி பொதுவான புகைப்படங்களை மட்டும் போட்டிருக்கேன்...
-
DREAMER
வெல்கம் பேக் ஹரீஷ் :)
ஒண்ணு ரெண்டு தவிர எல்லா ஃபோட்டோஸுமே ரொம்ப புடிச்சிருந்தது :)
நானும் திருச்சி, மதுரைலாம் போகலாம்னு ப்ளான்
பண்ணேன்
பண்றேன்
பண்ணிகிட்டிருக்கேன்
பண்ணிகிட்டேஏஏஏஎயிருக்கேன் :))
hareesh... superb.. Kovai varalaya...Vaz
வாங்க ரகு,
ட்ரிப் ப்ளான் ப்ண்ணுங்க இல்லன்னா சொல்லுங்க... ஒண்ணா ஒரு ட்ரிப் போட்டுரலாம்...
ஹாய் VAS,
கோவைக்கு கடந்த 2 மாசத்துல மட்டும், 3 தடவை வந்துட்டேன். ஆனா, சுற்றுலாவுக்காக இல்ல... பிஸினஸ் விஷயமா...
-
DREAMER
ஹாய் ஹரிஷ்.. எனக்கு கால் செய்யவும் என் மொபைல் மெமரி போய்விட்டது.. அதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை.. சாரி
வெல்கம் பேக்... பேட்டோக்கள் அனைத்தும் நல்லா இருக்கு ஹரிஸ்..
நீங்க போட்டிருக்கற போட்டோஸே அந்த இடத்துக்கு போகத் தூண்டுது பாஸ்...
//இயற்கையில் மட்டும்தான் வீழ்ச்சியும் அழகு இல்லையா//
செம!
Post a Comment