Showing posts with label Kodak. Show all posts
Showing posts with label Kodak. Show all posts

Saturday, July 31, 2010

சுற்றுலா 2010 - [ஆல்பம்]


பதிவு போட்டு நீண்ண்ண்ண்......ட நாட்களாகிவிட்டது...

தாமதத்திற்கு அனைத்து அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, வலைப்பதிவுலகிற்கு ஒரு ரீ-என்ட்ரி பாஸ் வாங்கிக்கொண்டு உரிமையோடு உள்நுழைகிறேன்...

இந்த மாதம், தமிழ்நாட்டை குடும்பத்தோடு ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்தேன். அந்த சுற்றுலாவில் ஃபோட்டோவில் பதிவு செய்த சில சிறந்த தருணங்களை இதோ இங்கே உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்.

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : July 16 to 21, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9





↑  பாண்டிச்சேரியில் கடற்கரையோர சாலை   ↑

  பாண்டிச்சேரி கடற்கரையோரம் 


↑  நிழல் விழாத கோபுரத்தின் நிழற்படம் 
(தஞ்சை பெரிய கோவில் கோபுரம்)


↑  தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்ட பிரதானவாயில் 


↑  பொன்னிற வெளிச்சத்தில் பிரகாரம் 


↑  நாயக்கர் மஹால் - படம் 1 

↑  நாயக்கர் மஹால் - படம் 2 

↑  நாயக்கர் மஹால் - படம் 3 



↑  இவர் பெரிய FIGHTER-ஆம்.  நீண்ட பிரயத்தனத்துக்கு பிறகுதான் இவர்   ஃபோட்டோவை எடுக்க முடிந்தது. ஃபோஸ் கொடுக்க ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிட்டார்.




↑  திருப்பரங்குன்றம் கோவில் வீதி 



↑  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொற்றாமரைக்குளம் 



↑  கொடைக்கானல் மலைப்பாதையில் மேகத்துக்குள் பஸ் நுழைந்தபோது... 

↑  மேக மண்டலங்கள் தாண்டி கண்களுக்கு விருந்தளித்த வெள்ளி நீர்வீழ்ச்சி
இயற்கையில் மட்டும்தான் வீழ்ச்சியும் அழகு..! இல்லையா..?


↑  எப்போதும் ஃப்ரிட்ஜில் இருப்பதுபோல் சில்லென்று இருக்கும் தூண்பாறை

↑  பசுமைப் பள்ளத்தாக்கு..! Suicide Point என்றும் சொல்கிறார்கள். 

↑  Suicide Pointஐ உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த குட்டிக்கு இந்த சின்ன வயதில் அப்படி என்னத்தான் பிரச்சினையோ..! 


↑  Coaker's Walkனு இந்த இடத்துக்கு பெயர். இங்கு வாக்கிங் போனால் உடம்புக்கு நல்லதாம். ஆனால், இங்கு நடைபோட்டவர்கள் எல்லாரும், வேர்கடலை, ஐஸ்க்ரீம், சோளம் என்று ஏகத்துக்கும் கொரித்துக் கொண்டே நடக்கிறார்கள். அப்புறம் எப்படி உடம்புக்கு நல்லது..? (நான் ஒரே ஒரு ஐஸ்க்ரீம்தான்... ஹி ஹி..)


↑  KODAI LAKE, இங்கிருக்கும்போது நேரம் போவதே தெரியாதபடி அப்படி ஒரு அழகு... 

















↑  சினிமாவில் படகில் வரும் அத்தனை பாடல்களும் நினைவுக்கு வந்த, மறக்க முடியாத தருணமிது... 


↑  மேகங்களினூடே எட்டிப்பார்த்து 'டாட்டா' சொல்லும் சிகரம்... மீண்டும் வரும்படி அன்புக்கட்டளையுமிட்டது... 

↑  வழக்கமாக முதலில் பிள்ளையார் கோவிலுக்கு போவார்கள்!
நாங்கள் திரும்பி வரும்போது உச்சிபிள்ளையார் கோவில் சென்றுவந்தோம். அருமையான இடம். கொடுத்து வைத்த திருச்சி..! 

காற்றில் டீஸல் கலந்த வாசனை, Sodium Hypo Chloride கலந்த METRO WATER தண்ணி, விட்டு விட்டு பெய்யும் மழை என்று சென்னை வாழ்க்கையை ஒரு 5 நாட்களுக்கு மறந்துவிட்டு சென்று வந்த இந்த தமிழ்நாடு சுற்றுலா உண்மையிலேயே மிகவும் உற்சாகமாகவும் மாறுதலாகவும் இருந்தது. ஆனாலும் சென்னை மாதிரி வருமா..?

கொடைக்கானலில் தூண்பாறை அருகிலிருந்த பூங்காவிலும், நாங்கள் தங்கியிருந்த விடுதியின் வெளியிலிருந்த ஒரு குட்டி பூங்காவிலும்,  பலவண்ணத்தில் விதவிதமான மலர்களை ஃபோட்டோ எடுக்க முடிந்தது. அதையும் விரைவில் பதிவிடுகிறேன்.


Signature

Sunday, May 23, 2010

லைலா ஓ லைலா... [ஆல்பம்]


தமிழ்நாட்டை இரண்டே நாளில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய லைலா புயல் மழையில், நனைந்தும் நனையாமலும் கேமிராவில் க்ளிக்கியது...

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 19, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9, 4:3

மண்ணில் பட்டுத் தெரிக்கும் தெய்வநீர்..!


  மழைநீரின் நடனம்..! 


  வரிசையாய் குதித்து தற்கொலை செய்யும் மழைத்துளிகள் 


  மழைத்துளிகளின் மெல்லிய கோட்டோவியம் 


↑  பச்சைத்தண்ணியில் குளிக்கும் பச்சைத்தாவரங்கள் 

  மழையில் உருவான திடீர் குட்டித்தெப்பம் 


  மெல்லிய சாரல் கோடுகள் 



  சுட்டபுண்ணை மழைநீரில் ஆற்றிக்கொண்டிருக்கும் செங்கல்! 



  மேலும் சில மழைக்கோடுகள் 



  நிர்வாணக்குளியலால் வெட்கப்பட்டு திரும்பி நின்றபடி..! 


↑  மே மாதக்குளியலில் முட்செடி 




  நெருங்கி வா என்று மேகங்களை கைநீட்டி அழைக்கும் தென்னைகள்..! 


Signature

Wednesday, May 12, 2010

பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டுவரும் - [ஆல்பம்]

மாநகரம் மறந்து புறநகருக்கு குடிபெயர்ந்த சில பறவைகளை, கேமிராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்...

DETAILS
Camera : Kodak Z1012 IS
MP : 7.5
Aspect Ratio : 16:9

↑  1. மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்..! 


↑  2. உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல... 

↑  3. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... 

↑  4. அழகு... நீ நடந்தால் நடையழகு..! 

↑  5. மஞ்சள் முகமே வருக... 

↑  6. பறந்தாலும் விடமாட்டேன்..! 

↑  7. நீலநிறம்... வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்... காரணம் சொல் கண்ணே..?


இவங்களைப் பார்க்கும்போது ஞாபகம் வந்த பாடலை கேப்ஷனாக போட்டிருக்கிறேன். உங்களுக்கும ஏதாவது பாடல் ஞாபகம் வந்தா சொல்லுங்களேன்..?

Signature

Sunday, May 02, 2010

பயணத்தில் க்ளிக்கியது - 2 [ஆல்பம்]


றவினர் திருமணத்துக்காக சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வழியில் க்ளிக்கிய புகைப்படங்களில் சிலவற்றை, இங்கு பகிர்ந்துள்ளேன்.

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 01&02, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9

பயணம் இனிதே ஆரம்பம்


வழியில்... விழியில் மாட்டியது


திருமலை அடிவாரம்


மலைப்பாதை துவக்கம்

சபாஷ் போட வைத்த, சாலை மற்றும் காடு பராமரிப்பு


வெயிலில் வாடும் திருமலைக்காடு


தொலைநோக்குப் பார்வை 1


தொலைநோக்குப் பார்வை 2


நீலம் காட்டியபடி சரியும் சாலையோரக் காடு


இறங்கும் வழியில் ஒரு (நீரில்லா) பாலம்


திருப்பதி நகரம், கழுகுப்பார்வையில்


கடவுளின் கைவினைப் பாறைகள்
(சென்னை திரும்பும் வழியில்)


வழியில் - மலைக்க வைக்கும் மலை முகடு
(சென்னை திரும்பும் வழியில்)


சமயச்சின்னம் தாங்கிய ஒரு சங்குப்பாறை


கடந்து வந்த மலை


யணம்..! தொடரும்..!


Signature

Popular Posts