Monday, June 07, 2010

'ஓர் இரவு' - திகில் திரைப்படம் - JUNE 11 முதல்...

அன்பு நண்பர்களே..!

இந்த வலைப்பூவில் இதுவரை திகில் கதைகளை எழுதி, உங்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்தேன். இனி வெள்ளித்திரையிலும் கதைகூறும் முதல்முயற்சியாய், 'ஓர் இரவு' என்ற திகில்  திரைப்படத்தை, என் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இயக்கியுள்ளேன். இப்படம் வருகிற ஜூன் 11ஆம் தேதி, வெளிவருகிறது..!



இப்படத்தின் ட்ரெயிலர் இதோ...





இப்படத்தின் கதாநாயகன், ஏற்கனவே நீங்கள் என் கதைகளில் படித்த நகுலன் பொன்னுசாமி என்கிற அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்தான்..! இனி, அவர் பணியை வெள்ளித்திரையிலும் கண்டு ரசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

நன்றி



Signature

53 comments:

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் நண்பரே....

க ரா said...

வாழ்த்துக்கள்.

Mohan said...

மென் மேலும் பல திரைப்படங்களை இயக்க வாழ்த்துகள்!

Anisha Yunus said...

wow. congrats bro. i ve read all your stories. i am a fan of such stories. wish to see them live soon, God willing,

Congrats once again.

விஸ்வாமித்திரன் said...

ALL THE BEST FOR A GRAND SUCCESS

இளந்தென்றல் said...

vaazhthukkal.

Ananya Mahadevan said...

ஹரீஷ்,
ட்ரெயிலரே மிரட்டலா இருக்கு! வியூ பாயிண்ட் மெத்தட் பற்றி தெரிஞ்சுக்கறதுக்காகவே பார்ப்பேன். மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
அன்புடன்
அநன்யா..

அகல்விளக்கு said...

ட்ரைலர் அருமை நண்பரே...
படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்...

Cable சங்கர் said...

ஆல் த பெஸ்ட்...

பத்மா said...

all the best dreamer

அனு said...

உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் dreamer...

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் ஹ‌ரீஸ்.... க‌ண்டிப்பாக‌ உங்க‌ள் உழைப்புக்கு ப‌ல‌ன் கிடைக்கும்..

rangarajan said...

wav..Its different.. I will definitely see it.. All the best for you to succeed.

மாயாவி said...

உங்கள் படைப்பின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
நானும் ஒரு திகில் கதைஎழுதியிருக்கிறேன்..
கொஞ்சம் வந்து பாருங்களேன்...

சீமான்கனி said...

மிக்க மகிழ்ச்சி ஹரீஷ்....வாழ்த்துக்களும்...ட்ரெயிலரே மிரட்டலா இருக்கு!ஆவலுடன்...இருக்கிறேன்...

Raghu said...

உங்க‌ளுக்கும், குழுவின‌ருக்கும் வாழ்த்துக‌ள் ஹ‌ரீஷ் :)

அப்ப‌டியே எந்தெந்த‌ தியேட்ட‌ர்ல‌, எத்த‌னை ம‌ணி ஷோன்னு கொஞ்ச‌ம் விவ‌ர‌மா குடுத்தீங்க‌ன்னா நிறைய‌ பேர் தெரிஞ்சுக்க‌லாம்

DREAMER said...

நன்றி LK...

நன்றி அகல்விளக்கு...

நன்றி இராமசாமி கண்ணன்...

நன்றி மோஹன்...

நன்றி அன்னு, நீங்கள்லாம் திகில் கதைகளை ஆதரிச்சதாலதான், இன்னும் நிறைய எழுத ஆவல் வருது..!

நன்றி விஸ்வாமித்ரன் - உங்க பேருல படத்துல ஒரு கதாபாத்திரம் இருக்குங்க...

நன்றி அநன்யா, வியூபாய்ண்ட் வீடியோவில, ஒரு வீடியோ கேம் ஆடுற எஃபெக்ட் இருக்கும்...

நன்றி அகல்விளக்கு...

நன்றி கேபிள்ஜி... உங்கள் வாழ்த்து தெம்பளிக்குது..!

நன்றி பத்மா...

நன்றி அப்பாவி தங்கமணி, முதல் படம் என்பதால் அதிக நாடுகளில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு குறைவுதான். இருந்தாலும் முயற்சி பண்றேன்...

நன்றி அனு...

நன்றி நாடோடி நண்பரே...

நன்றி ரங்கராஜன்...

நன்றி மாயாவி...

நன்றி தேசாந்திரி-பழமை விரும்பி, கண்டிப்பா உங்க கதையைப் படிக்கிறேன்...

நன்றி சீமான்கனி...

நன்றி ரகு, தியேட்டர் புக்கிங் போயிட்டிருக்கு... எல்லா தியேட்டரும் முடிவானதும் போட்டுடறேன்... ஆலோசனைக்கு நன்றி!

ரிலீஸ் வேலைகள் முழுவீச்சில் நடந்துக் கொண்டிருப்பதால் விரிவான பதில்களை போட முடியவில்லை... மன்னிக்கவும்..!

-
DREAMER

வினையூக்கி said...

அருமை அருமை வாழ்த்துகள்

Anonymous said...

அற்புதம். பார்த்து உறைந்துவிட்டேன்.

ஜெட்லி... said...

கண்டிப்பா பாப்பேன் ஹரிஷ்....

வேங்கை said...

முதல் படம் வெற்றி பெற
வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை வாழ்த்துகள்

DREAMER said...

நன்றி வினையூக்கி...

நன்றி சுதந்திரா.co.cc

நன்றி அருண் பிரசாத்...

நன்றி ஜெட்லி...

நன்றி வேங்கை...

நன்றி உலவு.காம்

-
DREAMER

Anonymous said...

Hi Hareesh..

Merattareenga...

Best Wishes...

Ragu. G.J

guru said...

வாவ் மிரட்டலா இருக்கு...
படம் பார்க்கனும்னு ஆவலா இருக்குது...
வாழ்த்துக்கள்...

DREAMER said...

நன்றி Ragu G.J..

நன்றி Guru,கண்டிப்பா பாருங்க..

-
DREAMER

jillthanni said...

கலக்குங்க த்ரில்லிங்கா ரசிக்கிறோம்
வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

இனிய வாழ்த்துகள் நண்பரேஇ உங்கள் எண்ணம் ஈடேறி, மகிழ்ச்சி பெருக இவளின் வாழ்த்துகள்
மாயா.. இலங்கை

எல் கே said...

waiting for theater list ? also are u releasing it in abroad??

Harinarayanan said...

"தலைவா, நம்ம நண்பர் ஹரீஷ், தன்னோட கனவு பலிச்சி, வெள்ளித்திரையில கலக்க வர்றாரு.....நாம எல்லாரும் அந்த திகில் மிரட்டல திரையறங்குல போய் பார்த்து பட்டயக் கெளப்பனும்....ரெடியா?"
ஹரீஷ் என்ன சொல்றதுன்னே தெரியல, அப்படியே மலைச்சுப் போய்ட்டேன் பதிவையும், ட்ரெலரையும் பார்த்துட்டு! ஆமா, படத்துல நீங்களும் ஒரு ரோல் பண்றீயலோ?!

இது ஆரம்பந்தான்.....இனிமேதான் பூகம்பம் அப்படீங்கிறமாதிரி சும்மா டர்ராக்குது ட்ரெய்லர்! ஏங்க, எங்க ஊருலேயும் ரிலீஸ் பண்ணக்கூடாதா? (ஆமா, அமெரிக்காவுலேயே ரிலீஸ் பண்றாரான்னு தெரியல, இதுல தம்மாத்தூண்டு ஜப்பான்ல ரிலீஸ் பண்ணுவாங்களாக்கும்?!)
ஹரீஷ், எது எப்படியோ....உங்க முதல் படம் தமிழ் நாட்டு Box office சும்மா பட்டையக் கெளப்ப என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க மொத்த குழுவினருக்கும்!ஆனா, நான் உங்க படத்தைப் பார்க்கத்தான் சில மாதங்களாகும் போலிருக்கு! கலக்குங்க!!
http://padmahari.wordpress.com
By the way, நான் ஸ்டெம் செல் தொடர் ஆரம்பிச்சிட்டேன். உங்க மறுமொழிக்காக வெயிட்டுங்கு.....நன்றி!

Anonymous said...

வாழ்த்துகள் அண்ணே...உங்கள் முயற்சி வெற்றி பெற...

எல் கே said...

its getting releasedin balaabirami and albert

தயாஜி said...

வாழ்த்துகள் தோழரே....

geethappriyan said...

அன்பின் ஹரீஷ்,
இன்று தான் உங்க தளம் பார்த்தேன்.
மிக நல்ல தரமான ட்ரெய்லர்,படமும் பட்டையை கிளப்பும் என்று நம்புகிறேன்.மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.இங்கு ரிலீசானதும் பார்த்துவிட்டு விமர்சனமும் போட்டுவிடுகிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னிக்கு படம் பாத்துட்டு சொல்றேன் தலை வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

Kiruthigan said...

Cable சங்கர் சார் விமர்சனம் பார்த்தேன்..
உங்க கதைகள் போலவே அருமையா படமும் வந்திருக்கும்..
எங்கூருல தியேட்டர்ல போடமாட்டாங்க..
பாயிண்ட ஆஃப் வியு முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
சீக்கிரம் படம் பாத்துட ரை பண்றேன்..
தொடரட்டும் உங்கள் சாதனைகள்..

butterfly Surya said...

வாழ்த்துகள் நண்பரே..

நாளை படம் பார்க்க போறேன். நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துகள் நண்பரே.

மரா said...

ஆல் தி பெஸ்ட்...

Anonymous said...

Waiting to watch the movie in abroad

Anonymous said...

Title koncham fashion aa vechirukkalam. So what padam thaan mukiyam.

குடந்தை அன்புமணி said...

தங்கள் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றியை அடையட்டும். வாழ்த்துகள்! (முதன் முறையாக இப்போதுதான் உங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன். நான் தவற விட்ட பட்டியலில் உங்கள் வலைத்தளமும் அடங்கும். இனி தவறவிடமாட்டேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் நல்லா இருக்கு பாஸ். ஆனால் நகுலன் சாகும்போது கொஞ்சம் தெளிவு படித்தி இருக்கலாம். ஒரே லைட் வெளிச்சம், கேமரா மூவ் அப்டின்னு கொஞ்சம் குறிகள் உண்டு. ஆனால் பார்க்க வேண்டிய படம்.

குசும்பன் said...

வாழ்த்துக்கள் இன்று உங்களுடைய 100வது பாலோயராக ஆகிட்டேன், உங்க படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

Unknown said...

Vazhthukkal Harish, today i watched the movie along with my friend in Bala Abirami.

Good Job.

Kudos to music director, editor and the casting team.

DREAMER said...

நன்றி ஜில்தண்ணி,

நன்றி மாயா..! இலங்கையிலிருந்து வாழ்த்திய நல்ல உள்ளத்துக்கு மிக்க நன்றி!

வாங்க LK... Theaters ரொம்ப limitஆத்தான் (தமிழ்நாட்டில் 23 தியேட்டர்ஸ்) கிடைச்சிருக்கு. சென்னையில் பால அபிராமி பகல் 12.30 மணி, இரவு 10 மணி, ஆல்பர்ட் இரவு 10 மணி, அம்பத்தூர் முருகன் பகல் 11.30 மணி, இரவு 10 மணி. படத்தில் பாட்டு இல்லை, ஃபைட் இல்லை, எல்லோரும் புதுமுகங்கள் என்பதால், மிகவும் சில தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது..! மேலும், தமிழ் ரசிகர்களுக்கு இது போன்ற Docu-Fiction படம் கொஞ்சம் புதிது என்பதால் ஜீரணிக்க சில நாட்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..! ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளை கூட்ட முடியும் (ஓரளவுக்கு) என்ற நம்பிக்கை உள்ளது..! பார்க்கலாம்.. எல்லாம் மக்கள் கையில்தான்..! (இது அரசியல் டைலாக் இல்லைங்க..)

நன்றி ஹரி..! ட்ரெயிலரை இரசித்ததற்கு நன்றி! நானும் ஒரு சின்ன ரோல் பண்ணியிருக்கேன்..! உங்க ஊரிலயும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்துக்கிட்டிருக்கு..! முதல்ல தமிழ்நாட்ல ரிலீஸ் பண்ணிட்டுத்தான் அடுத்த ஊர்களுக்கு..! உங்களது ஸ்டெம்ஸெல் தொடருக்கு வாழ்த்துக்கள்! எனக்கு ஒரு ஸ்க்ரிப்டுக்காக ஸ்டெம்செல் பற்றிய நிறைய விவரங்கள் தேவையிருக்கு..! இனி கவலையில்ல..! உங்க தொடருல படிச்சி தெரிஞ்சிக்கலாம்..!

நன்றி ஷஸ்னி...

நன்றி ஒருவார்த்தை..! உங்க விமர்சனமும் படிச்சேன்..! நேர்மையாகவும் உரிமையாகவும் நீங்கள் சுட்டிக்காட்டியள்ள விஷயங்களை கண்டிப்பாக எனது அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் கவனத்துடன் செயல்படுத்துகிறேன்..! படத்தை பார்த்து ரசித்தமைக்கு மிக்க நன்றி!

நன்றி தயாஜி வெள்ளைரோஜா தோழரே..!

வாங்க கீதப்ப்ரியன்... உங்கள் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

வாங்க நல்லவன் (ரொம்ப ) ரமேஷ்..! படம் பார்த்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றிங்க!

நன்றி Anonymous...

-
DREAMER

DREAMER said...

வாங்க Coolboy கிருத்திகன்..! கேபிள்ஜிக்கு படம் பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..! நான் எல்லாப் படங்களுக்கும் அவர் விமர்சனம் பார்ப்பது வழக்கம். நம்ம படம் அவருக்கு பிடிக்குமோ..! பிடிக்காதோ..! என்ற பயம் இருந்தது..! நல்லவேளை அவருக்கு பிடித்துவிட்டது (க்ளைமேக்ஸ் தவிர)...

வாங்க Butterfly Surya..! நாளைக்கு பாத்துட்டு கருத்துக்களை சொல்லுங்க..! காத்துக்கிட்டிருக்கேன்..!

வாங்க நண்டு @நொரண்டு -ஈரோடு நண்பரே..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வாங்க மயில்ராவணன், ஆல் தி பெஸ்ட்டுக்கு - நன்றி!

Welcome Anonymous, will release soon in abroad..!

Title Fashionஆக வைத்திருக்கலாம்..! இது அறிஞர் அண்ணாவின் அன்றைய ட்ரெண்ட் செட்டிங் க்ரைம் த்ரில்லர் என்பதால் இந்த டைட்டில் எங்கள் குழுவில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மக்களில் சிலர் இதை வேறுவிதமான படத்துக்கான டைட்டிலாக நினைக்கிறார்கள். அறிஞர் அண்ணாவின் டைட்டிலுக்கே இந்த கதியா என்று ஆச்சர்யப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது...

வாங்க குடந்தை அன்புமணி, எனக்கும் இந்த பதிவின் மூலமாக உங்கள் வலைதளத்துக்கு இணைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி... நேரம் கிடைச்சதும் மொத்தமா படிச்சிடுறேன்..!

வாங்க குசும்பன், எனது 100ஆவது ஃபாலோவரா..! நீங்க சொன்னதுக்கப்புறம்தான் நம்பரைப் பார்த்தேன்..! அட..! நமக்கும் இத்தனை நண்பர்களா என்று பெருமிதமாக இருக்கிறது..! வாருங்கள்! வலையுலக பகிர்வுகளில் இன்னும் அமர்க்களப்படுத்தலாம்..!

வாங்க Mohan, //Good Job// குட்டி விமர்சனத்துக்கு நன்றி! தங்கள் வாழ்த்துக்களை எனது திரைப்படக்குழுவினருக்கு தெரிவித்து விடுகிறேன்..!

-
DREAMER

அன்புடன் நான் said...

ஓர் இரவு விமர்சனம் படித்தேன், முன்னோட்ட காட்சியும் பார்த்தேன்.... ஓர் இரவு ... ஓர் மிரட்டலான அழகியல் கலை வடிவம்.
உங்கமுயற்சி வெற்றிபெறவும்... மேலும் படைப்புகளை கொடுக்கவும்... என் வாழ்த்துக்கள்.
இந்த கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள்.
உங்க கலை தாகத்திற்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

படம் நல்ல போகுதா ஹரீஷ்? எங்களை போன்ற நல்ல நண்பர்களின் வாழ்த்து உங்களை மிக உயர்ந்த இடத்தில் கொண்டு வைக்கும். அலுவலக பணி மாற்றம் காரணத்தால் கொஞ்சம் பின் தங்கி விட்டேன்.
வாழ்த்துக்கள்.

தகாரா said...

boss naan roumba eadhir partha padam, but kovai la eangayum podala ,miss paniten boss..

prabhadamu said...

வாழ்த்துக்கள் நண்பரே....

Popular Posts