Tuesday, July 19, 2011

'அம்புலி 3D' படக்குழுவினர்களுக்காக 'ஓர் இரவு' சிறப்புக் காட்சி

எங்கள் குழுவின் முதல் படமான 'ஓர் இரவு' திரைப்படத்தை 'அம்புலி 3D' டீம் பார்ப்பதற்காக பிரத்யேக காட்சி ஒன்றை சென்ற வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு, தேவி ஸ்ரீ தேவி ப்ரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தோம்.↑ 'ஓர் இரவு' இயக்குனர்கள்
ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்


'அம்புலி 3D' குழுவினரில் சுமார் 60% ஆட்கள் வந்திருந்து சிறப்பித்தனர். மீதமிருந்த நண்பர்கள் தத்தம் பணியில் வெளியூர்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.

படத்தை பார்த்து பாராட்டியதோடு பலரும் 'ஏன் இந்த படத்துக்கு நீங்கள் சரியாக பப்ளிசிட்டி செய்யவில்லை..! ஏன் A சென்டர் தியேட்டர்களில் திரையிடவில்லை' என்று ஏகத்துக்கும் திட்டி தீர்த்தனர். கண்டிப்பாக 'ஓர் இரவு' படத்தை ரீ-ரிலீஸ் செய்யும்படி அறிவுறுத்தி சென்றனர்.
↑  டான்ஸ் மாஸ்டர் தினா அவர்களுடன்


↑  ஸ்டண்ட் மாஸ்டர் T.ரமேஷ் அவர்களுடன்


↑  திரு. டேனியல் ப்ரொடக்ஷன் மேனேஜர் சக்தி அவர்களுடன்


↑  அண்ணன் தேனி முருகன் & ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் சந்தனபாண்டியன் அவர்களுடன்


↑  கோகுல் மற்றும் நண்பர்கள்


↑  உமா ரியாஸ்↑  மேக்கப் சசி (நடுவில் இருப்பவர்) அவர்களுடன்↑  காஸ்ட்யூமர் பாபு (குழந்தையுடன்)


↑  லைட் டிபார்ட்மெண்ட் ஷக்தி (ப்ரௌன் ஷர்ட்)


குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட IOB-ல் பணிபுரியும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், படத்தை பார்த்த அடுத்த நாள் எனக்கும் ஹரிக்கும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு நீண்ட நேரம் பேசி பாராட்டி கொண்டிருந்தார். படத்தை பார்த்து பயந்த அவரது இன்ஜினியரிங் படிக்கும் மகன், இரவு 1.30 மணியளவில் கதவு தட்டி அப்பா அம்மாவுக்கு நடுவில் படுத்து கொண்டதாக கூறினார். இப்படம் சரியான ஆடியன்சுக்கு போய் சேர்ந்திருந்தால் இது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும், எப்படியாவது ரீரிலீசுக்கு முயலுங்கள் என்று வற்புறுத்தினார். 70களில் அன்னக்கிளி படத்தை முதலில் ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிறகு அந்த படத்தையும் இசையையும் கொண்டாடியதை உதாரணம் கூறினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாங்களும் அந்த எண்ணத்தில் (ரீ-ரிலீஸ்) இருப்பதால்தான் இப்படம் குறித்த எந்த உரிமையையும் இன்னும் எவ்விடத்திலும் வியாபாரப்படுத்தாமல் வைத்திருக்கிறோம்.

↑  IOB ஸ்டாஃப் நண்பர்கள்


↑ மற்றும் நண்பர்களின் குடும்ப நபர்கள்


இந்த பிரத்யேக காட்சி, 'அம்புலி 3D'படப்பிடிப்பில் உடன் பணியாற்றிய அத்தனை நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் ஒரு get togetherஆக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி..!


Signature

8 comments:

Raghu said...

// மீதமிருந்த நண்பர்கள் தத்தம் பணியில் வெளியூர்களில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்//

தத்தம் பாணியில்-னு படிச்சுட்டேன் :)

ரீரிலீஸின்போது கண்டிப்பா பாக்கறேன் ஹரீஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓர் இரவு நல்ல படம்தான். கண்டிப்பாக ரீ-ரிலீஸ் பண்ணவும். அம்புலிக்காக waiting

Madhavan Srinivasagopalan said...

All the BEST..

ரீ-ரிலீஸ் -- means ?

DREAMER said...

வணக்கம் ரகு,
நான்கூட ஸ்பெல்லிங் மி ஸ்டேக் பண்ணிட்டேனோன்னு பயந்துட்டேன்.

வணக்கம் ரமேஷ்,
நல்ல படம் என்று கூறியதற்கு மிக்க நன்றி..! உங்களை போன்ற நண்பர்களின் நம்பிக்கையால்தான் ரீ-ரிலீஸ் முடிவை எடுத்துள்ளோம்.

வணக்கம் மாதவன்,
ரீ-ரிலீஸ் என்பது படத்தை மறுவெளியீடு செய்வது. Re-Release...

-
DREAMER

ஆர்வா said...

ஹரீஷ் சார்... மொதல்ல பிடிங்க ஒரு பொக்கே.... செமையான படம். கலக்கிட்டீங்க போங்க.. ரொம்ப நாளாவே இந்தப்படத்தை பார்த்திடணும்னு ஆசைப்பட்டுக்கிட்டே இருந்தேன். அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டீர்கள். இந்தப்படம் பார்க்கணும்னு எத்தனை இடம் அலைந்திருப்பேன். ஆனால் அந்த தேடலுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டீர்கள். ஓர் இரவு என்று பெயர் வைத்துவிட்டு பல இரவில் தூக்கம் வர விடாமல் பயம்காட்டி விட்டீர்கள். ஒரு சின்ன பட்ஜெட்டில் இத்தனை க்ரியேட்டிவிட்டியுடனும், நேர்த்தியுடனும் ஒரு படைப்பை கொடுக்க முடியும் என்றால் பட்ஜெட் சிக்கல் இல்லாமல் இருந்தால்? புரொடியூஸர்களே இதோ இங்கே சில அறிமுக அதிசயங்கள் இருக்கிறார்கள். இவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். மறுபடியும் படத்தை தியேட்டரில் காண ஆவலாய் இருக்கிறோம். இன்னும் என் வீட்டில் உள்ளவர்களுக்கும் காட்ட வேண்டும். ரீரிலிஸ் தேதி அறிவித்த உடன் முதல் புக்கிங் என்னுடையதாகத்தான் இருக்கும்.. வாழ்த்துக்கள் ஓர் இரவின் மறுபதிப்பிற்கும், அம்புலியின் புதுபிரவேசத்திற்கும்....

Selvamani said...

hareesh ji, nanga epo orr iravu padatha paakka mudiyum??

DREAMER said...

வணக்கம் கவிதை காதலன்,
நீங்க கவிதை காதலன் மட்டுமல்ல... நல்ல கலையை காதலிப்பவர் உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது. நீங்கள் மட்டுமல்லாது, உங்களது நண்பர்களையும் அழைத்து வந்து காட்சியை சிறப்பித்ததற்கு நன்றி. கண்டிப்பாக இந்த படம், நல்ல ரசிகர்களுக்கு சென்றடையும் பொருட்டு நாங்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் பக்க பலம் உங்களை போன்ற நண்பர்களின் விமர்சனங்கள்தான். கேபிளாரும் வேறு சில பதிவுலக நண்பர்களும் இதே போல்தான், படம் ரிலீஸானபோது சிறந்த முறையில் விமர்சித்திருந்தனர்.

ஆக்கங்கள் என்றும் வீண்போவதில்லை..! தாகம் பெரிதென்பதால்... தாமதமும் சம்மதமே..!

வணக்கம் செல்வமணி,
இம்முறை திரையிடப்பட்டது 'அம்புலி' குழுவுக்கான பிரத்யேக காட்சி என்பதால் உங்களைப் போன்ற பல நண்பர்களை அழைக்க முடியாமற் போயிற்று..! அடுத்த முறை பதிவுலக நண்பர்களுக்கென்று ஒரு பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது..! அம்புலி வெளியீட்டிற்கு பிறகு அதை கண்டிப்பாக மேற்கொள்கிறேன். அப்போது நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்.

-
DREAMER

ஸ்வீட் ராஸ்கல் said...

முதல்ல மன்னிக்கனும் ஹரீஷ் சார்.கமெண்ட் லேட்டா போடுறதுக்கு.ஹரீஷ் சார் கலக்கிடீங்க.உங்களுக்கு தனியா ஒரு பொக்கே ஷாப்பையே கொடுக்கலாம்.அசத்தியிருக்கீங்க.நான் கவிதை காதலனின் நண்பன்.படம் பார்த்து விட்டு வெளியே வந்து உஙகளை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் உங்கள் எடை என்னை சற்று யோசிக்க வைத்து விட்டது.வாய்ப்பே இல்லை சார் இப்படி ஒரு படம் தமிழில் பார்த்ததே இல்லை.படம் முடித்து வெளியே வந்த பிறகும் கை உதரளும்,இதயத்தின் வேகமான துடிப்பும் நிற்க்கவே இல்லை.பயத்தில் உறைந்து போய் இருந்தேன்.இரவெல்லம் தூக்கமே இல்லை.இன்னொரு முறை மன்னிக்கவும் இந்த படத்தை அன்று தவறவிட்டதற்க்கு.ஆனால் பிரத்யேக காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து இப்படி ஒரு பயத்தில் மூழ்கவைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.சீக்கிரமே ரீ-ரிலிஸ் செய்யுங்கள்.அனைவரையும் கூட்டி போய் காட்டி தமிழில் இப்படி ஒரு படம் பார்த்து இருப்பீர்களா என்று பெருமை பேசிக்கொள்ள வேண்டும்.தமிழ் சினிமா தவிக்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் சீக்கிரம் இடம் பிடிப்பீர்கள்.சிவப்பு கம்பள வரவேற்ப்பு உங்களுக்கும்,உங்கள் teamக்கும் காத்துகொண்டிருக்கிறது.வாழ்துக்கள் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்க்கும்,சர்வதேச விருதை வாங்கியதற்க்கும் உங்களுக்கும்,உங்கள் குழுவுக்கும்.All the best sir அம்புலி அற்புதமாக வர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

Popular Posts