கி.மு. (கிரகணத்துக்கு முன்)
எனக்கு பிடிச்ச 'வெர்டிகல் லிமிட்ஸ்' என்ற ஹாலிவுட் திரைப்படம் (தமிழில்) சுட்டி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதைத்தான் பாத்துட்டிருந்தேன். அந்த படத்தின் விளம்பர ப்ரேக்கில் சேனலை மாற்ற, சன் நியூஸ் சேனலில் 'சூரிய கிரகணம் லைவ் டெலிகாஸ்ட் ஃப்ரம் கன்னியாகுமரி' ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பேசிக்கொண்டிருந்த திரு. முத்து(முழுப்பெயர் கவனிக்கவில்லை) என்ற வானியல் நிபுணர் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும் பேசியதில் 'வெர்டிகல் லிமிட்ஸ்' க்ளைமேக்ஸை மிஸ் பண்ணிவிட்டேன். இது கி.மு.
கி.பி (கிரகணத்துக்கு பின்)
வேறு சேனல்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்த போது, ஹிந்த நியூஸ் சேனல்களில் மிகவும் மசாலாத்தனமாக விஞ்ஞானிகளையும், ஜோதிடர்களையும் மோத விட்டு (உண்மையிலேயே பலத்த வாக்குவாதம்) பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். இந்த வாதம் மேடையிலோ அல்லது ஸ்டுடியோவிலோ நடக்கவில்லை, கிரகணத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சில சிறப்பு தலங்களில் நடந்தது... பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் நடுவில் ஒருவர் மைக்கை வைத்துக் கொண்டு (காம்பேரர்) அவர்களின் சண்டைக்கு எண்ணையும் நெய்யும் ஊற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்க்கும்போது, சன் நியூஸ் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் உரையாடல் எவ்வ்வ்வளவோ சிறந்தது என்றுதான் தோன்றியது.
பாராட்டுக்கள், சன் நியூஸ்..
கங்கண சூரியகிரகணம்-னதும் எனக்கு ஞாபகம் வந்தது
இதுதான்...!!!
ஹி! ஹி!
பின்குறிப்பு : கங்கணாவின் தனி புகைப்படம் கிடைக்காததால், கங்கணாவை கட்டிக்கொண்டிருப்பவர் (கிரகண வெளிச்சத்தில்) இருட்டடிக்கப்பட்டுவிட்டார்...
4 comments:
ஆமா, நானும் பாக்குறேன், இப்பல்லாம் சமையல்லேயும், படத்துலயும் இருக்கற மசாலாவை விட ஹிந்தி நியூஸ் சேனல்ல அதிகமா இருக்கு. ரெண்டு நாள் முன்னாடிகூட 3 Idiots - 300 Crores in 3 Weeksனு போட்டுட்டிருந்தாங்க. படம் தயாரிச்சவங்ககூட இப்படி விளம்பரம் பண்ணலைன்னு நினைக்குறேன். அதான் படம் ஹிட் ஆயிடுச்சே, அப்புறம் ஏன்யா அதையே கட்டிக்கிட்டு அழறீங்க? MY NAME IS KHAN வரட்டும், அப்போ பாப்போம்!
அப்புறம் ஒரு ஆளு, இட்லியோ, ஹெட்லியோ....அந்தாளு ஃபோட்டோ எங்ககிட்டயிருக்குன்னு ஃப்ளாஷ் பண்ணிகிட்டிருக்காங்க. இருக்குதுன்னா, போலீஸுக்கு போகவேண்டியதுதானே. அதவிட்டுட்டு...என்ன பண்றது, ஹிந்திலயும் சில 'நக்கீரன்'கள் இருக்கறாங்க!
இந்த கிரகணத்தால கங்கணாவுக்கு எதுவும் பாதிப்பு இல்லையே? இந்த மாதிரி ஃபோட்டோலாம் பதிவுல போடும்போது இன்னும் கொஞ்சம் பெரிசா போட்டீங்கன்னா, நாளைக்கு வரலாறு உங்கள இன்னும் புகழ்ந்து பேசும். ஏன்னா, வரலாறு முக்கியம் மன்னா!
வாங்க குறும்பன் ரகு,
என்னடா 2 கமெண்ட்ஸ் இருக்கேன்னு பாத்தேன்... பாக்குறதுக்கு முன்னாடியே ஒண்ணு நீங்கன்னு தெரியும். அதாரு இன்னொருத்தருன்னு பாத்தேன்... அதுவும் நீங்கதான்... உங்க ஆதரவுக்கு மிக்க நன்றிகள்...
ஹிந்தி சேனல்ல வர்ற மசாலாவை என்னன்னு சொல்றது அது சாதாரண மசாலாயில்ல... கரம் மசாலா... நீங்க ராசி பலன்லாம் பாத்தீங்கன்னா இன்னும் காமெடியா இருக்கும்... லால் கித்தாப்(Red Book), அப்படின்னு ஒருத்தரு படிப்பாரு பாருங்க... என்னமோ லக்கிமேன்ல கார்த்திக்குக்கு கிடைச்ச புக் அவருக்கு கிடைச்சிட்ட மாதிரி பில்ட் அப் கொடுப்பாரு...
ஃபோட்டோவை பெரிசாவே போட்டிருக்கலாம்தான். இதே மந்த்ரா சூரியகிரகணம், நமீதா சூர்யகிரகணம், சமந்தா ஃபாக்ஸ் சூரிய கிரகணம் இப்படி இருந்தா போட்டிருக்கலாம்... கங்கணாதானேன்னு இந்த சைஸ் போட்டேன்.
சரி, அதவிடுங்க... அதென்ன பழமொழியவே மாத்துறீங்க..? வரலாறு முக்கியம் அமைச்சரே-தானே வரும்... அதை மாத்தி மன்னான்னு போட்டுருக்கீங்க.. உங்க தன்னடக்கத்துக்கு அளவேயில்லியா...
வருகைக்கு நன்றி!!!
//இதே மந்த்ரா சூரியகிரகணம், நமீதா சூர்யகிரகணம், சமந்தா ஃபாக்ஸ் சூரிய கிரகணம் இப்படி இருந்தா போட்டிருக்கலாம்... கங்கணாதானேன்னு இந்த சைஸ் போட்டேன்//
இதுல எதுவும் ட்ரிபிள் மீனிங் இல்லையே!
//வரலாறு முக்கியம் அமைச்சரே-தானே வரும்//
நீங்க எனக்கு மன்னர்தானே மன்னா:)
Post a Comment