Monday, September 06, 2010

"கேணிவனம்" - பாகம் 11 - [தொடர்கதை]



பாகம் - 11

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில்... CTH ரோட்டில்.... ஒரு கார் சீறிக்கொண்டிருந்தது. உள்ளே.... தாஸ் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் லிஷா அமர்ந்திருந்தாள்.

'இன்னும் எவ்வளவு தூரம் போகணும்...'

'ஆல்மோஸ்ட் தேர்... ஏன் லிஷா? சந்தோஷ் இல்லாம போரடிக்குதா..?'

'அப்படியில்ல... சும்மாதான் கேட்டேன்..' என்று பேசியவள், சற்று தயங்கி...

'உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா..?'

'என்ன லிஷா..?'

'நேத்து, நீங்க சந்தோஷ்கிட்ட பேசும்போது இந்த வார்ம்ஹோல் எங்கேயிருக்குன்னு வெளிநாட்டுக்கு சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க..?'

'ஆமா..?'

'அப்ப ஏன், நம்ம நாட்டு விஞ்ஞானிங்ககிட்ட சொல்லக்கூடாது..? சொன்னீங்கன்னா, உங்க பேருகூட ஃபேமஸ் ஆகுமில்லியா..?'

'சொல்லலாம்... ஆனா உடனே, அந்த ஸ்பாட்-ஐ மிலிட்டரிக்காரங்க சீஸ் பண்ணிடுவாங்க... அப்புறம் அது மிலிட்டரி சீக்ரெட் ஏரியாவாயிடும்..'

'அதனாலென்ன..?'

'அப்புறம் அந்த கேணிவனத்தை பத்தி, நம்மளால முழுசா தெரிஞ்சுக்க முடியாம போயிடும்... அட்லீஸ்ட் அதைபத்தி முழுசா தெரிஞ்சிக்கிற வரைக்குமாவது, இந்த சீக்ரெட்டை வெளியே சொல்லாம இருக்கணும்... எனக்கு என் பேரு ஃபேமஸ் ஆகுறதைவிட, அந்த கேணிவனத்தோட ரகசியங்களை தெரிஞ்சுக்கனும்னுதான் அதிகம் விருப்பப்படுறேன்' என்று தாஸ் கூற, லிஷாவின் செல்ஃபோன் ஒலித்தது.

SANDY என்று டிஸ்ப்ளேயில் தெரிந்தது...

ஃபோனை எடுத்த லிஷா சந்தோஷிடம் மிகவும் ஆர்வமாக, 'ஹே.. சேண்டி (Sandy)' என்று கொஞ்சினாள்...

'ஹே லிஷா டார்லிங்... என்னைவிட்டுட்டு ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பிட்டீங்க... எனக்கு நீ இல்லாம எவ்வளவு போரடிக்குது தெரியுமா..?'

'எனக்கும்தாண்டா...' என்று அவளும் பரிதாபமாக கூற, தாஸ் இதை புரிந்து கொண்டு வண்டி ஓட்டியபடி மெலிதாக சிரித்துக் கொண்டான்.

'சரி பாஸ்கிட்ட ஃபோனைக்கொடு..'

'ஹே தாஸ் வண்டி ஓட்டுறாருல்ல...! வண்டி ஓட்டும்போது ஃபோன் பேசுறதும் தப்பு, வண்டி ஓட்டுறவங்களுக்கு, தெரிஞ்சே ஃபோன் பண்றதும் தப்பு... என்கிட்ட சொல்லு நானே சொல்லிடுறேன்..' என்று லிஷா கேட்க...

'சரி, நான் இந்த குணாவை தேடி அவன் ஆஃபீசுக்கு வந்தேன்... ஆனா, அவன் இன்னிக்கு ஆஃபீஸுக்கு வரலியாம்... இன்ஃபாக்ட், மும்பை போயிட்டு வந்ததுலருந்து, இன்னும் ஆஃபீசுக்கே வராததாலே இவங்கல்லாம் ரொம்பவும் அப்செட்டா இருக்காங்க... எங்கே போனான்னே தெரியல... ஆளு என்னமோ பண்ணிட்டிருக்கான்னு மட்டும் தெரியுது... என்ன பண்றான்னுதான் தெரியல... அப்புறம் ஒரு மேட்டர்... இந்த ஆஃபீஸ்ல, H.R. டிபார்ட்மெண்ட்ல, சாந்தினி-ன்னு ஒருத்தியிருக்கா, அந்த பொண்ணு, என்னோட ஸ்கூல்மேட்தான்... ஆளு சூப்பரா இருப்பா... அவளைப்பாத்து, பேசி, ஞாபகப்படுத்தி அப்படி இப்படின்னு கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.' என்றதும்...

லிஷா கோபமாக... 'டேய்... சேண்டி..?' என்று அவனை மிரட்ட...

'ஹே... என்னை சந்தேகப்படாதேமா... அவகிட்ட பேசி அந்த குணாவோட வீட்டு அட்ரஸை கேட்டிருக்கேன்..! எம்ப்ளாயிஸ் டீடெய்ல்ஸ் வெளியில கொடுக்க, அவங்க கம்பெனி பாலிஸி ஒத்துக்காதுன்னு சொன்னா..! ஆனா, எப்படியாவது ட்ரை பண்ணி, இன்னிக்கி ஈவ்னிங்குக்குள்ள தர்றேன்னு சொல்லியிருக்கா...  அதான் இங்கேயே வெயிட் பண்ணிட்டிருக்கேன். இன்னிக்கு மதியம் இதே ஆஃபீஸ் ஃபுட்கோர்ட்ல, சாந்தினிகூடதான் லஞ்ச் சாப்பிடப்போறேன்... உண்மையை மறைக்காம உங்கிட்ட சொல்லிட்டேன். வேற ஏதாவது தகவல் இருந்தா சொல்றேன்.. இந்த குணாவைப்பத்தின தகவல்-ஐ பாஸ்கிட்ட சொல்லிடு... ஐ மிஸ் யூ டார்லிங்' என்று கூறிமுடித்து ஃபோனில் ஒரு முத்தம் கொடுத்தான்...

'ஐ மிஸ் யு டூ-டா...' என்று லிஷா சிரித்தபடி ஃபோனை கட் செய்து, தாஸிடம் விஷயத்தை கூறினாள்....

தாஸ் அதை கேட்டு குணாவைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் இருக்க...

'கந்தன் கொள்ளை' என்ற போர்டு அவர்களை வரவேற்றது...

லிஷா அந்த போர்டை படித்தபடி... 'கந்தன் கொள்ளை... வாவ்... உங்க கிராமத்தோட பேரு அருமையா இருக்கு தாஸ்..' என்று அந்த போர்டு, காரைக்கடந்து போவதை பார்த்தபடி சொன்னாள்...

தாஸ், அந்த பலகையை தாண்டி இடதுபக்கமாக காரை திருப்பினான். சீரான மண்ரோட்டில் 2 கி.மீ உள்ளே நுழைந்ததும், வயல்களுக்கு நடுவே ஒரு தனி வீடு, அவர்களை வரவேற்றது.

'வாவ்.... ப்யூட்டிஃபுல் ஹவுஸ்..' என்று லிஷா மீண்டும் குழந்தையாய் அந்த வீட்டை ரசித்தாள்.

'ஆமா... இவ்ளோ அழகான ஒரு சூழலை விட்டுட்டு... ப்ச்... சிட்டில இருக்கேன்பாரு...' என்று தாஸ் அலுத்துக் கொண்டான்.

கார் வீட்டின் உள்ளே நுழைந்தது...

காம்பவுண்டு பில்லரில், 'தசரதன் சக்கரவர்த்தி..' என்று ஒரு பெயர்ப்பலகை இருந்தது...

'என்ன உங்க பேரு போட்டிருக்கு..?'

'என் தாத்தா பேரும் தசரதன்தான்... அவர் பேரைத்தான் எனக்கு வச்சியிருக்காங்க..' என்று தாஸ் கூறியபடி வண்டியை உள்ளே நுழைத்து நிறுத்தினான்.

இருவரும் இறங்கி அந்த வீட்டை அண்ணாந்து பார்க்க... மாடியில் பால்கணி வழியாக ஒரு வயதானவர் எட்டிப்பார்த்தார்...

'ஹே... தாஸ்... மை யங் ஃப்ரெண்டு..' என்று அவர் கையசைத்தபடி... 'இருப்பா கீழே வர்றேன்..' என்று கூறி விறுவிறுவென்று பால்கணியிலிருந்து உள்ளே நுழைந்து மறைந்தார்.

'தாஆத்ததாஆ.... பாத்து வாங்க... மெதுவா ஒண்ணும் அவசரமில்ல...' என்று கத்தியபடி அவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.

'வா லிஷா...' என்று கூற, லிஷாவும் கையில் ஒரு சின்ன பையுடன் உள்ளே நுழைந்தாள்.

வீடு பிரம்மாண்டமாக இருந்தது. உயர்ந்த சீலிங்... பெரிய ஜன்னல்கள் உயரத்தில் அதிகம் இருந்தன... அவற்றில் வெட்டிவேரால் நெய்யப்பட்ட பாய்வகை திரைச்சீலைகள் ஜன்னலை மூடியிருந்தது. இதனால், உள்ளே ஹாலில் வெட்டி வேரின் வாசம் மிகவும் மிதமாக வீசிக் லிஷாவின் பயணக் களைப்பை மறக்கடித்துக் கொண்டிருந்தது. எந்த ரூம் ஃப்ரெஷ்னருக்கும் இப்படி ஒரு தன்மை இருந்ததில்லையே என்று ரசித்தாள்.

தாஸின் ஆஃபீசில் இருந்தது போலவே, சில அரிய வகை சிற்பங்களும், சில அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்களும், மெடாலியன்களும் சுவற்றிலும், வாயிலிலும் தொங்கிக் கொண்டிருந்தது.

தாஸை இப்படி ரசனைக்குள்ளாகும்படி கெடுத்தது இவர் தாத்தாதான் போல... என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

தாத்தா படியிறங்கிக் கொண்டிருந்தார்... வெள்ளை வேஷ்டியும், வெள்ளை பைஜாமாவுமாக மிகவும் கம்பீரமாக இருந்தார். கைத்தடியெல்லாமில்லாமல் தெம்பாகவே நடந்தார். கண்ணாடி அணிந்திருந்தார். லிஷா அவரை ஆர்வமாக பார்த்தாள். அவர் படியிலிருந்து இறங்கி  வந்து தாஸை கட்டிக்கொண்டார்...

'எப்படிப்பா இருக்கே..?'

'பர்ஃபெக்ட் தாத்தா... எனக்கென்ன...'

'இது..?' என்று லிஷாவைப் பார்த்து கேட்க...

'இவ லிஷா... என் அஸிஸ்டெண்ட்... ரொம்ப ஸ்மார்ட்டான பொண்ணு... என் கதைக்கு தேவையான எந்த ஒரு தகவல் கேட்டாலும், அதை எப்படியாவது கலெக்ட் பண்ணி தந்துடுவா... இவ ஹெல்ப் இல்லன்னா... நான் புத்தகம் எழுதுறது ரொம்பவும் கஷ்டம்..' என்று கூறிவிட்டு... 'தாத்தா... நீங்க பேசிக்கிட்டிருங்க... நான் போய் கொஞ்சம் ரிஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடுறேன்... வந்ததும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..' என்று கூறி முடித்து, அவன் படியில் ஏறிப்போகிறான்...

தாத்தா லிஷாவிடம் திரும்பி...

'என்னம்மா பிரயாணம்லாம் சௌகரியமா இருந்துதா..?'

'இருந்தது சார்...'

'சாரெல்லாம் எதுக்கு... உனக்கும் மாடியில ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்..! சந்தோஷ் வரலியா..?' என்று கேட்க... லிஷா குழப்பத்துடன்

'சந்தோஷ் உங்களுக்கெப்படி தெரியும்..?'

'தெரியும்மா... தாஸ் ஃபோன்ல சொல்லியிருக்கான்... அவன்தானே உன் லவ்வர்..?'

'அந்தளவுக்கு சொல்லிட்டாரா..?'

'எப்ப கல்யாணம்..?'

'கூடிய சீக்கிரம்..! உங்களை வந்து இன்வைட் பண்றேன்..' என்று வெட்கப்பட்டாள்...

'நீ வெட்கப்படுறதிலியே... அந்த பையன் மேல உனக்கு எவ்வளவு காதல்னு தெரியுது... வாழ்த்துக்கள்-ம்மா... சரி... சரி... நீயும் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடு... அப்புறமா..! சாப்டுக்கிட்டே பேசலாம்.. மேல.. இடதுபக்கம் ரெண்டாவது ரூம் யூஸ் பண்ணிக்கோம்மா... ' எனறு தாத்தா கூற, லிஷாவும் படியேறி சென்றாள்.

-----------------------------------

சற்று நேரத்தில் மூவரும் டைனிங் ஹாலுக்கு வந்தனர்.

தாஸ் வேஷ்டி சட்டை அணிந்திருந்து வித்தியாசமாக வந்திருந்தான். லிஷா அவனை பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டாள்.

'என்ன லிஷா, எங்க தாத்தா கூட எனக்கு இந்த கெட்-அப்-ல இருந்தாதான் சௌகரியமா இருக்கு...'

'ஐயோ தாஸ், நான் உங்களை எதுவுமே சொல்லலியே..! நான் சந்தோஷ் இங்கே வந்திருந்தான்னா எப்படி இருந்திருப்பான்னு யோசிச்சி சிரிச்சேன்... ப்ளீஸ் டோன்ட் மைண்ட்..' என்று கூறினாள்.

அந்த டைனிங் ஹாலில், தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு உயரும் வட்ட வடிவ டைனிங் டேபிளும், அதற்கு கீழே சப்பணமிட்டு அமர்ந்து உண்ணும்படியாக பாயும் விரித்திருந்தது. மூவரும் அந்த டேபிளைச் சுற்றி சப்பணமிட்டபடி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வாழையிலை விரிக்கப்பட்டிருக்க... அங்கிருந்த பாத்திரங்களும், மண்ணினாலும், பித்தளையினாலும், செப்பினாலும்தான் இருந்தது. லிஷாவுக்கு இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. அவள் அந்த சூழலை மிகவும் ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.

'தாத்தா..! சாப்பாடு சூப்பர்..! சுசீலாம்மா சமையல் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தாத்தா..?' என்று தாஸ், சமையல் செய்த பெண்மணியை புகழ்ந்து கொண்டிருந்தான்.

'சுசீலா...? கேட்டியாம்மா..? உன்னைத்தான் சொல்றான்..' என்று தாத்தா உரக்க கூற...

'ஆங்... இதோ வந்துட்டேம்ப்பா..?' என்று  உள்ளே கிச்சனிலிருந்து ஒரு நடுத்தர வயது பெண்மணியின் குரல் வந்தது...

'சுசீலாம்மா இங்கேதான் இருக்காங்களா..?' என்று கூறியபடி, சாப்பாட்டு கையுடன் எழுந்து சென்று, கிச்சனிலிருக்கும் அந்த பெண்மணியை தாஸ் சந்திக்க சென்றான்.

தாத்தா, சுசிலாவைப் பற்றி லிஷாவிடம் கூறினார்...

'சுசீலாதான், எங்க வீட்ல ரெகுலர் சமையல்... தாஸ், ஸ்கூலுக்கு போற காலத்துலருந்து சமைச்சி போடுறா... என் சொந்த மக மாதிரி... தாஸ் சிட்டிக்கு போனதுலருந்து, இவதான் எனக்கு ஒரே ஆறுதல்...'

உள்ளே கிச்சனில்

தாஸ் சுசீலாம்மாவைப் பார்த்தபடி ஆர்வமாக சென்று 'எப்படிம்மா இருக்கீங்க...?' என்று கூறி அவள் காலில் விழுகிறான்

'அய்யோ என்னப்பா இதெல்லாம்... நான் நல்லாயிருக்கேன் தம்பி..! நீ எப்படியிருக்கே..?'

'உங்க சமையல் மாதிரியே சூப்பரா இருக்கேன்..'

'என்னப்பா இது... சாப்பிடுற கையோட எழுந்து வந்திருக்கியே.. வா வந்து உக்காந்து நல்லா சாப்பிடு..' என்று அவனை அழைத்து வந்து மீண்டும், டைனிங் டேபிளில் உட்கார வைத்தாள்...

தாஸ் மீண்டும் சாப்பிட்டபடி, 'என்ன சுசீலாம்மா... ஏதாவது நான்-வெஜிடேரியன் ஐட்டம் செய்யக்கூடாதா..?' என்றதும், அவள் தாத்தாவிடம் புகார் செய்தாள்

'அப்பா... கேட்டீங்களா... உங்க பேரனுக்கு அசைவம் வேணுமாம்..'

'விடும்மா... அவனும் என்னை மாதிரி, 45 வயசுக்கு மேல அசைவ சாப்பாட்டையெல்லாம் விட்டுடுவேன்னு சொல்லியிருக்கான்ல..? பாவம், நாளைக்கு ஏதாவது அசைவம் சமைச்சிடு..' என்று கூறுகிறார்

'ஆமா.. நாளைக்கு லன்ச் சாப்டுட்டு கிளம்பிடுவோம்..' என்று சட்டென்று தாஸ் கூற... தாத்தா முகம் வாடுகிறது...

'தாத்தா..? ரொம்ப நாள் உங்ககூட தங்கமுடியாத நிலையில நான் இப்போ இருக்கேன்... நான் இங்கே வந்ததே உங்களை பாத்து, சில தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டு போலாம்னுதான்..' என்று கூற தாத்தா.. முகத்தை சகஜமாக்கிக்கொண்டு....

'ஹ்ம்ம்.... இந்த கிழவன்கிட்டருந்து உனக்கு என்ன வேணும்.. கேளு..! தெரிஞ்சா சொல்றேன்..' என்றதும்... தாஸ் சற்று மௌனமாய் இருந்தான். சுசிலாம்மா மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்துவிட... தாஸ் சுதாரித்துக் கொண்டு பேச்சை தொடங்கினான்.

'தாத்தா, நான் ஒரு 4 நாளைக்கு முன்னாடி நான் பாம்பேக்கு ட்ரெயின்ல போயிட்டிருந்தேன்...' என்று நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்...

---------------------------------------------

அதே நேரம்... குணா...

மிஸ்ட்ரி டிவி சேனலின் ஆஃபீஸில்... ஒரு கண்ணாடி பெட்டி போன்ற தனியறையில் குணா அமர்ந்திருந்தான். அந்த அறையிலிருந்த கண்ணாடி வழியாக வெளியில் சேனலில் பணிபுரியும் ஸ்டாஃப்கள் அங்குமிங்கும் மிகவும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பதை பார்த்து பார்த்து சலித்தபடி அமர்ந்திருந்தான்.

சே..! இந்த அறைக்குள் வந்து அரை மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. இப்பபடி காக்க வைக்கிறார்களே..? குணா... காத்திருக்காதே..! போதும் பொறுமை...  10 வரை எண்ணிப்பார்... யாரும் அறைக்குள் நுழையாவிட்டால், எழுந்து சென்று, இவர்களது காம்படேடிவ் சேனலான 'ட்ரீம் டிவி'க்கு போய்விடு. 1... 2.... 3.... 4.... 5... 6... 7....

உள்ளே ஒருவன் நுழைந்தான்.

'ஹாய்... வெரி சாரி மிஸ்டர் குணா... ஒரு சின்ன மீட்டிங் போயிட்டிருந்தது... அதான் லேட்..!' என்று கைநீட்ட... குணா வேண்டா வெறுப்பாக அவனுடன் கைகுலுக்கினான்.

'ஐ அம் இளங்கோவன்...'

'நைஸ் மீட்டிங்'

'நீங்கதானே நேத்து நைட் ஃபோன் பண்ணியிருந்தீங்க... ஏதோ கேணி... வனம்... னு ஒரு கோவில்..? எங்கேயிருக்குன்னு சொன்னீங்க..?'

'சொல்றேன்... ஆனா ஒரு கண்டிஷன்... உங்க ப்ரோக்ராம்ல, நான் இந்த கோவிலுக்கு உங்க டிவி ஆளுங்களை கூட்டிக்கிட்டு போறமாதிரிதான் ஷூட் பண்ணனும், இதுக்கு ஓகேன்னா... நான் எல்லாத்தையும் சொல்றேன்..' என்று குணா தீர்க்கமாக கூற... இளங்கோவன் சிறிது யோசித்துவிட்டு...

'சரி.. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.. நீங்க அந்த கோவில் எங்கே இருக்குன்னு சொன்னீங்க..?'

'சரியா தெரியாது... நான் ட்ரெயின்ல பாம்பேக்கு போகும்போது, ட்ரெயின் காலையில 11 மணிக்கு சிக்னல்ல நின்னுச்சு... அப்போ நான் பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள சும்மா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்னு போனேன்... அப்போ... ட்ரெயின் மிஸ் பண்ணிட்டேன். உள்ளே சுத்தி சுத்தி வந்ததுல, இந்த கோவிலைப் பாத்தேன்..' என்று கூற, அந்த இளங்கோவன், குணாவை சிறிது நேரம் பார்வையால் அளந்தான்...

'என்ன இளங்கோவன்..? நான் பொய் சொல்றேனோன்னு பாக்குறீங்களா..?'

'இல்ல... இல்ல... அந்த கோவில்ல என்ன இருக்குன்னு சொன்னீங்க..?' என்று கேட்டபடி... தன் கையிலிருந்த நோட்பேடில், குணா சொல்வதனைத்தையும் இளங்கோவன் குறித்துக் கொண்டிருந்தான்...

-----------------------------------

'கந்தன் கொள்ளை' கிராமத்தில், தாத்தாவின் அறையில், நடந்த அனைத்தையும் கூறிமுடித்திருந்த தாஸ், அவன் கொண்டு வந்திருந்த லேப்-டாப்பில், ஓவியத்தையும், கிணற்றுக்குள் எழுதியிருந்த பாடலின் புகைப்படத்தையும் தாத்தாவுக்கு காட்டிக் கொண்டிருந்தான். லிஷாவும் அருகில் அமர்ந்திருந்தாள்.

தாத்தா அந்த பாடலை வாய்விட்டு சத்தமில்லாமல் முணுமுணுத்தக் கொண்டிருந்துவிட்டு தாஸிடம் திரும்பி...

'சந்தேகமேயில்லப்பா இது சித்தர் பாடல்தான்...' என்று தீர்மானமாக கூற...

'நானும் அப்படித்தான் நினைச்சேன் தாத்தா... மொத்தம் 18 சித்தர்ங்க இருக்கிறாங்கல்ல..? இதுல இது எந்த சித்தரோட பாட்டுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது..?'

'என்னது சித்தருங்க வெறும் 18ன்னு யார் சொன்னது... சித்தருங்க இத்தனை பேருதான் இருக்காங்கன்னு எந்த ஒரு கணக்குமில்ல... இருக்கிற அத்தனை சித்தர்கள்ல, இந்த 18 பேரு ரொம்பவும் குறிப்பிட்டு சொல்லக்கூடியளவுக்கு முக்கியமானவங்க...'

'அப்ப நிறைய சித்தருங்க இருக்காங்களா..?' என்று லிஷா கேட்க...

'ஆமா... உதாரணத்துக்கு, அந்த காலத்துல மன்னர்கள் எத்தனையோ பேர் இருந்தும், மூவேந்தர்கள்னு சேர, சோழ, பாண்டிய மன்னர்களை குறிப்பிட்டு சொல்றோம்... ஆனா, இவங்களுக்கு கீழே எத்தனையோ குறுநில மன்னர்கள் தமிழ் நாட்ல இருந்தாங்க இல்லியா..? அதே மாதிரிதான், எத்தனையோ பெயர் தெரியாத சித்தர்கள் அந்த காலத்துல வாழ்ந்திருக்காங்க... நீ இந்திரா சௌந்தர்ராஜன்-னோட நாவல்கள்லாம் படிக்கிறதில்லியா..? ஒரு நல்ல எழுத்தாளன்-னா மத்தவங்களோட புத்தகத்தையும் ரசிக்க தெரிஞ்சிருக்கனும்ப்பா... சித்தர்கள் பற்றி எத்தனையோ தனி நூல் வந்தாலும், அவர் கதையோட சேத்து, சித்தர்கள் பத்தின பல அரிய தகவல்களை சொல்லியிருக்காரு... ஃப்ரீயா இருக்கும்போது தவறாம படி..' என்று தாத்தா, தாஸுக்கு அன்புக்கட்டளையிட

'சரி தாத்தா...' என்று தாஸ் அதை ஏற்றுக் கொண்டான்.

லிஷா தொடர்ந்தாள்...

'அப்புறம், இந்த ஓவியத்துல, நாடி, விநாடி, தற்பரை-ன்னு நிறைய எழுதியிருக்காங்க...? இதெல்லாம் காலசாஸ்திரத்தோட டைம் யூனிட்ஸ்னு தாஸ் சொன்னாரு...?' என்றவள் கேட்க...

'ஆமாம்மா... கரெக்டாத்தான் சொல்லியிருக்கான்..! ஏன் கேக்குறே..?'

'இல்ல... தமிழ் மொழியில இருக்கிற இந்த டைம் யூனிட்ஸை வச்சிக்கிட்டு, எப்படி டைம் செட் பண்ணி டைம் டிராவல் பண்ண முடியும். ஏன் கேக்குறேன்னா..? தமிழ்ல இருக்கிற இந்த யூனிட்ஸ் எந்தளவுக்கு பர்ஃபெக்டா இருக்கும்னு தெரியல...?'

'ஏம்மா லிஷா, தமிழ்ல இருக்கிற யூனிட்ஸ்ல உனக்கு அந்தளவுக்கு சந்தேகமா..? உன்னை ஒண்ணு கேக்கலாமா..?'

'கேளுங்க..?'

'கோடிக்கு அப்புறம் பணத்துக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா..?'

'பணம் எத்தனை கோடியிருக்கோ, அத்தனை கோடின்னு சொல்லுவாங்க... இல்லியா..?'

'ஹ்ம்ம்... கோடிகூட ஒரு ஆரம்பம்தான்... அதுக்கப்பறும், 10 கோடியை - அற்புதம்னு சொல்லுவாங்க... 10 அற்புத்தை - நிகற்புதம்-னு சொல்லுவாங்க... அதே மாதிரி ஒவ்வொரு பத்துக்கும்... கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், சமுத்திரம்... இப்படி எவ்வளோ இருக்கும்மா...' என்று தாத்தா கூற, லிஷா ஆச்சர்யமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா... நம்ம டைம் யூனிட்ஸ்-ம் அதே மாதிரிதான்... செகண்ட்ஸ்-ஐ அடிப்படையா வச்சி மணியை கால்குலேட் பண்றதெல்லாம் இப்போதான்... அப்போல்லாம், கண் இமைக்கிறதுதான் கணக்கு....' என்றதும், தாஸும், லிஷாவும் தாத்தாவை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

'இன்னைக்கும், பல பேரு பேசும்போது, 'கண்ணிமைக்கிற நேரத்துல நடந்துடுச்சி'ன்னு சொல்றதை கேள்விப்பட்டிருப்பீங்க..'

'ஆமா..?'

'அது அந்த காலத்து கால்குலேஷனை நாம நினைவுக்கூறுகிற வாக்கியம்தான்....' என்று கூற இருவரும் இன்னும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தனர்...

'நம்ம ஊருல, எந்த ஒரு விஷயத்திலயும், ஏதாவது ஒரு கடவுளை சம்மந்தப்படுத்திதான் பண்ணுவாங்க... அந்த மாதிரி, இந்த கண் இமைக்கிற கணக்கை, பிரம்மா கடவுளை வச்சி எழுதியிருக்காங்க... அவரோட கண் இமைக்கிறதைத்தான் கால்குலேஷனுக்கு யூஸ் பண்ணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க...'

'தாத்தா... குறிப்பா, பிரம்மா கடவுள் ஏன்..?'

'அவர்தானே, படைக்கும் கடவுள், அதனால இருக்கலாம்...'

'ஓ... சரி..'

'கண்ணிமை, நொடி, கைநொடி, விநாடி, நாழிகை, ஓரை, முகூர்த்தம்... இப்படி இந்த டேபிள் நீண்டுகிட்டே போகுது... கடைசியா 60 ஆண்டு ஒரு வட்டம்-னு சொல்லுவாங்க..' என்றதும், தாஸ் குதூகலமானான். உடனே லிஷாவிடம் திரும்பி...

'லிஷா, நான் சொல்லலை, அந்த பார்டர்ல இருக்கிற ஒவ்வொரு பொஸிஷன்சும், ஒவ்வொரு ஆண்டைக்குறிக்குதுன்னு...? 60 ஆண்டுக்கு, 60 பொஸிஷன் டிராயிங்..' என்று கூறும்போது... தாஸின் செல்ஃபோன் ஒலித்தது.

ரிங்டோன்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
அவன் யாருக்காக கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்...

டிஸ்ப்ளேயில், 'ப்ரொஃபெஸர் கணேஷ்ராம்' என்று காட்டியது... தாஸ் மிகவும் ஆர்வமாக ஃபோனை எடுத்தான்...

'ஹலோ சார்..?'

'என்னய்யா... இங்க லைப்ரரியில ஆளில்ல போலருக்கு..?'

'இல்ல சார்... எங்க தாத்தாவை பாக்க அவர் ஊருக்கு வந்திருக்கேன்... ஏதாவது தகவல் கிடைச்சுதா சார்..?'

'எப்படி கிடைக்காம போகும்... நேத்திக்கு நைட்டு முழுக்க கண்முழிச்சி தேடியிருக்கேனேய்யா...'

'என்ன சார் தெரிஞ்சுது..?'

'முதல்ல பெயிண்டிங்-ல இருக்கிற மூலநாயகன் எந்த கடவுள்-னு தெரிஞ்சுதுய்யா...

'எந்த கடவுள் சார்..?'

'பிரம்மா..!'

'நினைச்சேன் சார்... இங்க எங்க தாத்தா பெயிண்டிங்-ஐ பாக்காமலேயே இந்த விஷயத்தை இப்பத்தான் indirectஆ சொன்னாரு...'

'உன் தாத்தாவாச்சே... பின்ன எப்படி இருப்பாரு..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் தெரிஞ்சது..?'

'என்னது சார்..?'

'பெயிண்டிங்-ல கடவுள், அரசன்... 2 பேருக்குத்தான் இம்பார்டென்ஸ் கொடுத்திருக்காங்கன்னு சொல்லியிருந்தேன்ல...?

'ஆமா சார்..?'

'அது தப்பு, வலதுபக்கம் பெயிண்டிங் சிதைஞ்சியிருக்கிற இடத்துல, ஒருத்தர் உக்காந்திருக்கிற பொஸிஷன்ல ஒரு பாதம் தெரியுது.. சோ, 3ஆவதா ஒருத்தருக்கும் இம்பார்ட்டென்ஸ் கொடுத்திருக்காங்க..?'

'யாரு சார் அது..?'

(தொடரும்...)



Signature

19 comments:

எஸ்.கே said...

மிக நன்றாக செல்கிறது. வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

தொடரட்டும், காத்திருக்கிறேன்.

நாடோடி said...

ஹ‌ரீஸ் உங்க‌ளின் உழைப்புக்கு ஒரு ராய‌ல் ச‌ல்யூட்.. அதிக‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் க‌தை ப‌ய‌ணிக்கிற‌து... தொட‌ர்கிறேன்.. நீங்க‌ளும் சீக்கிர‌ம் அடுத்த‌ பாக‌த்தை தொட‌ருங்க‌ள்..

Sam Riyas said...

மிக‌வும் அருமை ஹ‌ரிஷ்....
ஒவ்வொரு ப‌த்திக்குள்ளும் ஓராயிர‌ம் த‌க‌வ‌ல்க‌ள்...
திரைக்க‌தையாக்க‌ முய‌லுங்க‌ள்...

உங்க‌ள் ந‌ண்ப‌ன் என்ப‌தில் பெருமை கொள்கிறேன்...

சாம்

Unknown said...

INTERESTING!!!

Unknown said...

தமிழ், காலம், ஓவியம்னு நிறைய விசயங்களை ஆராய்ஞ்சு எழுதறீங்க..

ஒவ்வொரு வரிகள்லையும் உங்க உழைப்பு தெரியுதுங்க..

ரொம்ப நல்லா போகுது.. வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

செம்ம இன்ட்ரஸ்டிங்...ஹரீஷ் ஜி...எவ்ளோ தகவல் கலெக்ட் பண்ணி இருக்கிங்க???யப்பா...'யாரு சார் அது...?'தொடர்வேன்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

oh...who is that 3rd person? sema suspense... again saying this everytime...so much details.. great job... great going... next part soon please?

Gayathri said...

rombha swarasiyamaa poguthu...super

VampireVaz said...

running out of accolades pal!

DREAMER said...

வணக்கம் எஸ்.கே.,
வாழ்த்துக்கு நன்றி

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா நண்பா,
தொடர்ந்து வந்து படிப்பதற்கு மிக்க நன்றி!

வணக்கம் நாடோடி நண்பரே,
உங்கள் ராயல் சல்யூட்டுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்!

வணக்கம் SAM,
கண்டிப்பாக கூடியவிரைவில் திரைக்கதையாக மாற்றிவிடலாம்... இசையில் உங்கள் நேர்த்தியை பார்த்து, நான்தான் ஏற்கனவே உங்கள் நண்பனாக இருப்பதில் பெருமை பட்டுக்கொண்டிருக்கிறேன்.

வணக்கம் Gomy,
ThanX for regular reading...

வணக்கம் பதிவுலகில் பாபு,
உழைப்பை உணர்ந்து வாழ்தியமைக்கு மிக்க நன்றி!

வணக்கம் சீமான்கனி,
தகவல்களை வியந்து படித்து வாழ்த்தியமைக்கு நன்றி! அந்த நபர் யார் என்று புதன் அல்லது வியாழன் சொல்லிவிடுகிறேன்..!

வணக்கம் அப்பாவி தங்கமணி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அடுத்த பாகத்தை இன்னும் 2 நாட்களில் போட்டுவிடுகிறேன்.

வணக்கம் காயத்ரி,
கதையின் சுவாரஸ்யத்தை ரசித்து படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

வணக்கம் Vaz,
தொடர்ந்து படித்து ஊக்கமளித்து வருவதற்கு மிக்க நன்றி நண்பா..!

-
DREAMER

வேங்கை said...

ஹரிஷ்

எனக்கு கடைசியா தான் சுவாரஸ்யம் வேகம் வந்தது

ஒருவேளை நீங்க சொன்ன விபரம் எனக்கு தெரிஞ்சதுனால இருக்கலாம்

ஆனாலும் சரியான பாதைல அழகா கதை போகுது

இந்த பாகம் - நேர்கோடு

Chitra said...

தொடருங்கள். வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

என்ன சார், எவ்வளவு புது தகவல் திரட்டி கொடுத்து இருக்கீங்க! ஒரு Phd பண்ணி இருப்பீங்க போல.... நல்லா போகுது... தொடருங்கள்

Ramesh said...

Indha episodela neenga solliyirukkara thagaval yenakku yerkanave theriyum. Namma nattoda niraya arpudha visayangala namakku madhikka theriyalannu adikkadi ninapen. Indha episode manasukku romba sandhosama irundhadhunga.

DREAMER said...

வணக்கம் வேங்கை,
இந்த தகவல்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருப்பதில் மகிழ்ச்சி! கதையின் இந்த பாகத்தை, 'நேர்க்கோடு' என்று விமர்சித்ததற்கு மிக்க நன்றி!

வணக்கம் சித்ரா,
வாழ்த்துக்கு நன்றி! தொடர்கிறேன்..!

வணக்கம் அருண்பிரசாத்,
நமது நாட்டின் பண்டைய கலாச்சாரங்களையும், நமது நிபுணத்தன்மையையும் முடிந்தவரை எனது கதைகளில் எடுத்துரைக்க முயல்கிறேன். வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
உங்களுக்கும் இந்த தகவல்கள் ஏற்கனவே தெரிந்திருந்ததில் மகிழ்ச்சி..! உண்மைதான், நமது நாட்டின் அற்புத விஷயங்களை நமது மக்கள் அதிகமாக தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டியதில்லை..! இதையெல்லாம் எடுத்துரைக்க, 'கதைசொல்லுதல்' என்ற எனக்கு தெரிந்த முறையில் முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

-
DREAMER

Anisha Yunus said...

Hello Hareesh.

I have been reading your stories for a long time. But this one is really making me addicted again for your stories. Not just for the way it is planned and written, but the amount of knowledge you share through it. I feel ashamed of being a Tamilian and not knowing so much things about the language I relish...Truly this knowledge of yours is a gifted thing. Keep it up. Looking forward for more episodes. :)

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஸ்
//'ஹ்ம்ம்... கோடிகூட ஒரு ஆரம்பம்தான்... அதுக்கப்பறும், 10 கோடியை - அற்புதம்னு சொல்லுவாங்க... 10 அற்புத்தை - நிகற்புதம்-னு சொல்லுவாங்க... அதே மாதிரி ஒவ்வொரு பத்துக்கும்... கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், சமுத்திரம்... இப்படி எவ்வளோ இருக்கும்மா...' என்று தாத்தா கூற, லிஷா ஆச்சர்யமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்//

ஒவ்வொரு தகவலும் ஆச்சர்யமாகவும் சுவாரஷ்யமாக உள்ளது விருப்பங்கள் அதிகரித்து விரைந்து காண ஆவல்

DREAMER said...

Hello அன்னு,
Happy to know that you read my stories for a very long time. And I'm really happy to share all the knowledges I know through my stories. I believe that Life is full of knowing & sharing knowledge. Our language has more thing to learn, and i'm sure it will teach us anything we seek for... Through this story "KENIVANAM" i'm trying to dig our precious past with proper blend of fiction. And I'm also trying to relate this story to our ancient Science & Technologies used in early days.ThanX for following the story..!

வணக்கம் தினேஷ் குமார்,
தகவல்கள் தேடலில் நானும் உங்களைப் போல்தான் மலைத்துப் போகிறேன். இந்த தகவல்களை பகிர்வதற்காகவே இன்னும் நிறைய கதைகள் எழுத ஆவல் எழுகிறது... தொடர்ந்து படித்து வாழ்த்து தெரிவித்து வருவதற்கு மிக்க நன்றி..!

-
DREAMER

Popular Posts