Thursday, May 06, 2010

மாயக்கரை - [சிறுகதை]


னநடமாட்டம் நிரம்பியிருந்த அந்த கல்யாண ஹாலுக்குள், ஒரே இரைச்சலாய் ஏதேதோ சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இந்த இரைச்சலிலும் இசைத்துப் பாடத்தெரிந்த  எங்களது ‘சுபராஜகீதம் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர், அசத்தலாய் இளையாராஜாவின் இன்னிசையை பாடிக்கொண்டிருந்தனர். நானும் இந்த ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவன்தான். பெயர் மாயக்கண்ணன். எனது வேலை, புல்லாங்குழல் இசைப்பது... கொஞ்சம் பாப்புலரான இந்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் சேர என் திறமை மட்டும் காரணமல்ல, என் கண்பார்வையின்மையும் ஒரு முக்கியக் காரணம். இந்த ஆர்கெஸ்ட்ராவின் ஓனர், T. கிருஷ்ணகுமார், அவருக்கு என் போன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை அதிகம். என்போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உண்மையில் நினைப்பவர்.

அனுதாபம் காட்டாமல் அன்பு செலுத்துவதில் வல்லவர். இன்று அவர் புண்ணியத்தில் என் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவரும் வாய்ப்பளிக்காமலிருந்திருந்தால், ஏதாவது ட்ரெயினிலோ அல்லது ரயில்வே ப்ளாட்ஃபாரத்திலோ புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்திருப்பேன்.

இதோ, இன்றைய ரிசப்ஷனின் கடைசிப் பாடலை ஆர்கெஸ்ட்ராவின் பிரத்யேக பாடகர் ஒருவர் பாடிக்கொண்டிருக்கிறார்.

'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா.. குக்கூ.. குக்கூ.. குக்கூ..'

இந்த பாடலில் பெரும்பாலான பகுதி புல்லாங்குழல் கூடவே வந்துக்கொண்டிருக்கும். எனவே என் பகுதியை ரசித்து வாசித்தேன்...

என் வாசிப்புக்கு அடுத்தவர் எப்படி ரசிக்கிறார்கள் என்று என்னால் பார்க்க முடியாவிட்டாலும், உணர முடியும். வாசிக்கும்போது, அந்த பேரிரைச்சலிலும், ஒரு அமைதி நிலவும், அப்படி அமைதி தெரிந்தால், ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். இப்போது அந்த அமைதியை என்னால் உணர முடிந்தது. உற்சாகம் பிறந்தது.

கைத்தட்டலுடன் பாடல் முடிந்தது.

ரசித்து கேட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி எங்களது ஆர்கெஸ்ட்ரா குழுவினர் மண்டபத்திலிருந்து கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மேடையிலிருந்து இறங்கும்போது, ஒரு சிலர் கைகொடுத்தனர், ஆணா, பெண்ணா என்று அறியமுடியாது அத்தனை ஸ்பரிசத்துக்கும், மனமார நன்றிகள் சொல்லிக்கொண்டு இறங்கும்போது, தவறி விழுந்தேன். நிறைய கைகள் என்னைத் தாங்கிப்பிடித்து, தூக்கி நிறுத்தியது.

ஆர்கெஸ்ட்ரா ஓனர் பதறி வந்து விசாரித்தார்...

'என்ன மாயா..? என்னாச்சு..?'

'தெரியாம விழுந்துட்டேன் சார்..?' என்றேன்.

'அட என்னப்பா... அடி ஏதும் இல்லியே..?'

'இல்லைங்க..?' என்றேன்.

'சரி, டேய், மாயாவை பத்திரமா கூட்டிட்டு போய் வண்டியில ஏத்துங்க... நான் போய் பேமண்ட் பாத்துட்டு வந்துர்றேன்... இன்னும் 15 நிமிஷத்துல எல்லா சாமானையும் ஏத்தி, வண்டி ரெடியா இருக்கணும்... சரியா..?' என்று மிரட்ட, ஆளுக்கொரு வேலையாய் அனைவரும் இறங்கி செய்தனர். என்னை இரண்டு பக்கமும் இரண்டு பேர் சூழ்ந்து பிடித்துக் கொண்டு பத்திரமாக அழைத்து சென்றனர்.

எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரு கூட்டத்தில் நாம் வந்து சேர்ந்தது, நான் என்றோ செய்த புண்ணியம்தான் என்று பெருமிதப்பட்டுக்கொண்டே போய் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

விடிவதற்குள் ஊர்திரும்ப வேண்டும். நாளை மாலையும் கச்சேரி உண்டு, ஏதோ கோவிலில் என்று நினைக்கிறேன்.

சொன்னபடி 15 நிமிடத்தில் ஓனர் வண்டிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் அனைவருக்கும் சம்பளக் கவர் கொடுத்தார்.
 
எனக்கான கவர் கொடுத்தார். அதில் கணம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக நான் வழக்கமாக வாங்கும் பணத்தைவிட, இந்தமுறை அதிகம் கொடுத்திருக்கிறார் என்று புரிந்தது.

வண்டி கிளப்பச்சொல்லிவிட்டு, ஓனர் தனது காரில் கிளம்பச்சென்றார். எங்கள் வண்டியும் கிளம்பியது.

இரவு ஏற்கனவே மணி 11ஐத் தாண்டிவிட்டதாக மண்டபத்தில் ட்ரம்மர் ஜோசப் சொன்னார். இப்போது எப்படியும் 12.30 இருக்கும் என்று தோன்றியது.

'டேய் ஜேசுதாஸ் வாய்ஸ் வழக்கமா ரிஷிதானே பாடுவான் இன்னிக்கு என்ன 'கல்யாண தேன்னிலா...' என்னை பாடச்சொல்லிட்டே..' என்று மணி என்ற பாடகர் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.

'இல்லண்ணா, மாஸ்டர்தான், இன்னிக்கி கொஞ்சம் சேன்ஞ் பண்ணி பாடச்சொன்னார்..'

'உடனே அவர்மேல பழியைப்போட்டுடு..'

'நெஜம்மா சொன்னாருண்ணா..?'
 
'பொய் சொல்லாத... எப்போ சொன்னாரு..?'
 

'ஹஸிலி ஃபிஸிலி பாட்டு போயிட்டிருக்கும்போது...'

இப்படி நண்பர்கள் வண்டியில் பேசிக்கொண்டு வர... இந்த செல்ல சண்டைகளைக் கேட்டபடி நான் அப்படியே தூங்கிப்போனேன்.

முழிப்பு வந்தபோது, வண்டி அமைதியாக போய்க்கொண்டிருந்தது. குறட்டைசத்தங்கள் மட்டும் விதவிதமாய் கேட்டுக்கொண்டிருக்க... நான் எப்படியும், 2 மணி நேரம் தூங்கியிருப்பேன் என்று தோன்றியது.

வண்டி திடீரென்று அங்குமிங்கும் வளைந்து நெளிந்து சடன் ப்ரேக் அடிக்கபட்டு நின்றது...

நான் பதறினேன்... 'என்ன டிரைவரண்ணே..? என்னாச்சு வண்டி S போடுது..?'

'ஒண்ணுமில்லப்பா... கொஞ்சமா கண்ணசந்துட்டேன்..'

'என்னங்கண்ணே..?' என்றேன் கொஞ்சலான மிரட்டலுடன்.

'இரு... வண்டிய ஒரு ஓரமா போடுறேன்... கொஞ்ச நேரம் தூங்குனாத்தான் வேலைக்காகும்... நானும் ஊருக்கு போய் தூங்கிக்கலாம்னு பாத்தா... பிரச்சினையாயிடும்போலருக்கு...'

'வேண்டாண்ணே... கொஞ்ச நேரம் தூங்கணும்போல இருந்துச்சுன்னா தூங்கிடுங்க..' என்றேன்.

வண்டியை ஓரமாக எங்கோ போய் நிறுத்திவிட்டார். மீண்டும் பயங்கர அமைதி...  நானும் தூங்க முயற்சித்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை...

வண்டியை விட்டு இறங்கினேன்...

சில்லென்ற காற்று, இதமாக வீசியது. தூரத்தில் அலைகள் சத்தம்... ஏதோ கடற்கரை சாலையில் பயணப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

யாரையாவது எழுப்பிக்கொண்டு, கடல்வரை செல்வோமா என்று தோன்றியது. யாரை எழுப்புவது என்று யோசித்துப் பார்க்க, அனைவரும் தூங்கிக்கொண்டிருப்பதை நினைத்ததும்...  வேண்டாம்... யாரையும் எழுப்ப வேண்டாம்... நாமே செல்வோம். என்று எனது புல்லாங்குழல் வைத்திருக்கும் ஜோல்னாப் பையை எடுத்து மாட்டிக்கொண்டு, அலைகள் சத்தம் வந்த திசையை நோக்கி, செருப்பை மாட்டாமல், வெறும் காலில் நடந்தேன்.

சற்று தூரத்தில், சில்லென்ற மணல் என் கால்களில் படர்ந்தது...

சிலிர்த்தது...

இன்னும் நடக்க நடக்க, அலைகளின் சத்தம் அருகே கேட்டுக்கொண்டே வந்தது. உள்ளுக்குள் பரவசம் பாய்ந்தது.

திடீரென்று காலில் கடல்நீர் பட்டதும் மீண்டும் சிலிர்த்துப்போனேன்....

'ஹ்ஹ்ஹா....'  என்று சிரித்துக்கொண்டேன்.

ஒரு 5 நிமிடம் அப்படியே நின்றேன்... கடலை அனுபவித்தேன்.

ஒரு பத்தடி பின்னால் வந்து மணலில் அமர்ந்தேன். கண்முன் தெரியும் காட்சி எப்படியிருக்கும் என்று யூகிக்க முயன்றேன்... நான் பிறவியிலிருந்தே கண்தெரியாதவன் என்பதால், காட்சிக்கு வடிவம் கொடுக்க முடியவில்லை.. எப்படியெல்லாமோ இருக்கும் என்று மட்டும் தோன்றியது.

மண்டபத்தில் சிலர் இன்று பௌர்ணமி என்று பேசிக்கொண்டார்கள், அப்படியென்றால் நிலா பெரியதாய் வானில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரி எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். பையிலிருந்து புல்லாங்குழல் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.
 
அமைதியான கடற்கரையில் நானும்.... தனிமையும்... எனது புல்லாங்குழலும்...

அந்த இசை.... அலை சத்தத்ததின் பின்னனி இசையோடு சேர்ந்து ஒரு ரம்யமான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

என்ன பாட்டு வாசிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த நேரம், என்னையுமறியாமல், என்னுள்ளிருந்து, ஒரு தனியான ராகம், இதுவரை நான் மனதளவிலும், சேர்த்துவைக்காத ஒரு புது மெட்டு வெளிவந்துக் கொண்டிருந்தது. எப்படி... ஏன்... என்று தெரியாமல் அந்த கடற்கரையோரம் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.

போதும் நிறுத்தினேன். அலைகளின் சத்தம், இன்னும் கொஞ்சம் வாசியேன் என்று என்னிடம் கெஞ்சி கேட்பது போல் தோன்றவே... மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் அதே பரவசம். இந்தமுறை வாசித்துக்கொண்டிருக்கும்போது, யாரோ என் பின்னால் வந்து நிற்பதை என்னால் உணர முடிந்தது. வாசிப்பதை நிறுத்திவிட்டு திரும்பினேன்...

'யாரது..?' என்று கேட்டேன்... அமைதி

'யாராவது இருக்கீங்களா..' என்று மீண்டும் கேட்டபடி கைகளால் துழாவிப் பார்க்க ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.. பதறியடித்த கைகளை பின்னுக்கிழுத்துக்கொண்டேன்...

'கேக்கறேன்ல..? யாரது..?' என்று கேட்க...

'ப்ப்ப்ர்ர்ர்ப்ப்ப்ர்ர்ர்' என்று குதிரை கணைக்கும் சத்தம் கேட்டது...

குதிரையா..? மீண்டும் கைகளை நீட்டி, ஆம்.. இம்முறை குதிரையின் முகத்தை தொட்டேன்... தடவிக்கொடுத்தேன்...

அதுவும் வாஞ்சையாக் என்மீது முகம் உரசியது...

'என்னடா... என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க... என் பாட்டு கேட்க வந்தியா..' என்று அதனுடன் பேசினேன்...

'ப்ப்ப்ர்ர்ர்ப்ப்ப்ர்ர்ர்' என்று மீண்டும் கணைத்துக் காட்டியது...

எனக்கு அந்த குதிரை மீது ஏறவேண்டும்போல் ஆசையாக இருந்தது. தடவித்தடவி முதுகையடைந்தேன். குதிரை நல்ல உயரம். கட்டுமஸ்தான தேகம். நல்ல ஜாதிக்குதிரை போல் தோன்றியது.

ஒரே எம்பு எட்டி குதித்து அந்த குதிரை மீது ஏறி அமர்ந்தேன். மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டேன்.

குதிரை ஓடாமல், மெல்ல நடந்துசென்றது. என்னை நம் ஆட்கள் தேடுவார்களே என்று எனக்குள் ஒரு சின்ன பயம் தோன்றியது. ஆனாலும் இந்த ரம்யமான சூழலை விட்டுவிட்டு திரும்ப மனம் வரவில்லை...

நான் குதிரை மீது அமர்ந்தபடியே எனது புல்லாங்குழலை எடுத்து எனக்குள் பிரவாகமெடுத்து ஓடும் இசையை புல்லாங்குழல் ஓட்டைகளில் வழியாக  வடித்தெடுத்துக்கொண்டிருந்தேன்.

குதிரை மெல்ல நடக்க நடக்க... அலைகள் சத்தம் அதிகமாகியது. அலைகள் சத்தத்திற்கேற்றபடி நானும் எனது இசையில் வேகம் கொடுத்தேன். இப்போது, அலைகள் சத்தம் என் முதுகுப்பக்கம் கேட்டது. குதிரை மேலும் நடந்துபோய்க்கொண்டிருக்க... அலைகள் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்து... ரொம்பவும் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. குதிரை நின்றது. நான் இசைப்பதை நிறுத்தினேன்.

இறங்கினேன்... குனிந்து தொட்டுப்பார்க்க, ஈரமான பாறைகள் புலப்பட்டது.

'ஏய்... என்னை எங்கே கொண்டுவந்திருக்கே நீ..' என்று குதிரையிடம் கேட்டேன்... அது முகத்தை மட்டும் என் கைகளில் படும்படி ஆட்டியது.

'என்னடா..? என்ன இடம் இது..' என்று மீண்டும் குதிரையிடம் கேட்டபடி முன்னேறினேன். இடத்தை தொட்டுத்தொட்டுப் பார்க்க, ஒரு கல்வெட்டு போன்ற பாறை தட்டுப்பட்டது. அதை தடவிப்பார்க்க அதில் ஏதோ எழுதியிருந்தது...

தடவிப்பார்த்து படிக்க நான் ஏற்கனவே பழகியிருந்ததால்.... படிக்க முயன்றேன்...

'ஆ..ஜா...னு..ப..வ... வி...ர....பு...த்...தி....ர....ஞ....சு....வே..ழ...வ..ம்...ச...' என்று ஏதோ நீண்டுக்கொண்டே போக, என்னால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை...

'என்ன இடம்ப்பா... இது..?' என்று குதிரையைப் பார்த்து கேட்க...

'இது என் இடம்தான்... பயப்படாதீரும்..' என்று திடீரென்று ஒரு பதில் குரல் வந்தது...

'யாருங்க... அது..?'

'நான்தான்... இது என் இடந்தான்..'

'நான்தான்னா... நீங்க யாருங்க... உங்க பேரு... என்ன..?'

'வேழவளவன்..'

'பேரு நல்லாயிருக்குங்க... என் பேரு மாயக்கண்ணன்..' என்றேன்.

'பொருத்தமான பேருய்யா...உம்ம பேரு..'

'நன்றிங்க..'

'நல்லா இசைக்கிறீரு... அதான்... சீலன்-ஐ விட்டு உம்ம கூட்டியாரச்சொன்னேன்.'

'சீலன் யாருங்க..'

'நீர் ஏறி வந்தீரே..'

'குதிரையா..?'

'ஆமாம்..'

'குதிரைக்கு நல்ல பேருங்க...'

'ஹாஹ்ஹா... கொஞ்சம் எனக்கோசம் இசையுமேன்... கேட்டுக்குறேன்..'

'வாசிக்கிறேன்... எனக்கு என்ன கொடுப்பீங்க..?' என்றேன் உரிமையோடு.

'ஹாஹ்ஹா... என்ன வேணும் உமக்கு..?'

'சும்மாதாங்கய்யா கேட்டேன்.. கம்பீரமான குரல்ல, அன்பா கேட்டீங்கள்ல.. அதுக்காகவே இசைக்கிறேங்க..' என்று கூறி மீண்டும் புல்லாங்குழல் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இம்முறை எனது சொந்த மெட்டுக்களுக்கு பதிலாக, இளையராஜாவின் பாடலை ரசனையோடு வாசித்தேன்.

சுமார் 15 நிமிடமாக வாசித்து முடிக்க, நிறுத்தினேன்.

'ஐயா... ரொம்ப நாளாச்சுய்யா இந்தமாதிரி ஒரு இசையைக்கேட்டு.... உமக்கு நான் ஏதாவது கொடுக்கணும்...' என்று அவர் பேசிக்கொண்டிருக்க, எனக்கு பின்னாலிருந்து குரல் கேட்டது...

'மாயக்கண்ணன்..?... மாயக்கண்ணன்...? மாயா..?' இது எனது குழுவின் மணி என்ற பாடகரின் குரல்தான், கூடவே ஏதோ மோட்டர் படகு ஓடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.

'நான் இங்கதான் இருக்கேன்...’ என்று கத்திவிட்டு, மீண்டும் அந்த வேழவளவனிடம் திரும்பி ‘ஐயா... என்னை என் நண்பருங்க தேடுறாங்க... நான் போய்ட்டுவரேங்க... எனக்கு பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..' என்று கூறிவிட்டு திரும்பி நடந்துக்கொண்டிருக்க...

'மாயக்கண்ணன்.. அப்படியே இருங்க... நடக்காதீங்க...' என்று என் நண்பரின் குரல் கட்டளையாக கேட்டது...

'ஏன்..? என்னாச்சு...?' என்று பதிலுக்கு கேட்டேன். ஆனால், மோட்டார் சத்தத்தில் அது அவருக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.... அவர் மீண்டும், 'மாயக்கண்ணன் முன்ன ஒரு அடிகூட எடுத்துவைக்காதீங்க... தண்ணியிருக்கு' என்று சத்தம் போட்டார்...

'தண்ணியா..?' நான் குழம்பினேன்... அப்படியே நின்றிருந்தேன்...

மோட்டார் சத்தம் என்னை நெருங்கும் சத்தம் கேட்டது... அருகில் வந்து அடங்கியது..

'என்ன மாயக்கண்ணன், சொல்லாமக்கொள்ளாம இப்படித்தான் கடலுக்குள்ள இறங்கி இப்படி பாறைமேல வந்து உக்காந்து புல்லாங்குழல் வாசிப்பீங்களா.. நீச்சல் தெரியுமா உங்களுக்கு..?' என்று கேள்விமேல் கேள்வி அடுக்கிக்கொண்டே போனார்...

'என்ன சொல்றீங்க... நான் எங்க நீந்திவந்தேன்... நான் பாட்டுக்கு, கரையில உக்காந்து புல்லாங்குழல் வாசிச்சிட்டு இருந்தேன். ஒரு குதிரை வந்தது... அதுல ஏறி உக்கார, அது இங்க கொண்டாந்து விட்டுருச்சு... ஆனா, தண்ணியில இறங்கவேயில்லியே..' என்று கூறினேன்... படகு கரைபக்கம் திரும்பி போய்க்கொண்டிருந்தது. படகுக்காரன் பேச்சை ஆரம்பித்தான்...

'என்னங்க சொல்றீங்க... நீங்க எங்க இருந்தீங்க தெரியுமா.. கடலுக்குள்ள கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்துல தெரியிற பாறையில நின்னுட்டிருந்தீங்க..' அதெப்படி தண்ணியில நனையாம அவ்வளவு தூரம்... சரி... அதுவும்... குதிரைமேல உக்காந்துபோயிருந்தாலும்... நனையாம எப்படி..?' என்று படகு ஓட்டியபடி குழம்பிக்கொண்டிருந்தான்..

'என்ன மாயக்கண்ணன், நாங்கள்லாம் பயந்துட்டோம். உங்களை காணாம, இந்த லோக்கல் மீனவரோட உதவியோட உங்களை தேடிக்கிட்டிருந்தோம். நல்ல வேளை, உங்க புல்லாங்குழல் இசையை கேட்டுத்தான் நீங்க இப்படி கடலுக்குள்ள நின்னுட்டிருக்கிறது தெரிஞ்சுது.. உடனே இவரோட படகை எடுத்துக்கிட்டு உள்ளே வந்துட்டேன். ஆனா, நீங்க எப்படி டிரஸ்நனையாம..?' என்று அவரும் குழம்பிக்கொண்டிருந்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை... அப்படியென்றால் அந்த வேழவளவன் யார்... அந்த சீலன் என்கிற குதிரை யார்... அந்த கல்வெட்டு என்ன... என்று யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தேன்.
 
அந்த மீனவரிடம்... 'நான் நின்னுட்டிருந்த பாறை ஏதும் விசேஷங்களா..? அங்க என்ன இருக்கு..?' என்றேன்

'அதுவா... அந்த பாறையில ஒரு சமாதிக்கோவில் இருக்கு.. யாரோ ராஜாவோட காலத்து சமாதிக்கோவிலாம்.. அப்போ, கடல் அலை ரொம்ப உள்ள இருந்துச்சாம்... அதனால அது கடற்கரை சமாதிக்கோவிலா கட்டியிருந்தாங்களாம். எங்கப்பாரு சொல்வாரு... இறந்துப்போற நம்ம தலைவருங்களுக்கு கரையோரம் சமாதி கட்ற மாதிரி அந்த காலத்துல யாரோ ராசாவுக்கு கட்டியிருக்காங்க... அங்கப்போய் நின்னுக்கிட்டு... என்னங்க நீங்க..' என்று கூற எனக்கு புரிந்துப்போயிற்று...

என் இசையை ஒரு இறந்துப்போன ஒரு ராஜாவின் ஆன்மா கேட்டதை நினைத்து பெருமை படுவதா, இல்லை, பயப்படுவதா என்று தெரியவில்லை... மீண்டும் வண்டிக்கு வந்தடைந்தேன். ஃபோனில் ஓனருக்கு ஒருவர் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்... அனைவரும் நலம் விசாரித்து முடித்து, டிரைவரும் தெம்பாக எழுந்து பேசிக்கொண்டிருக்க... மீண்டும் வண்டி கிளம்பியது...

எனக்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருக்க.. நன்றாக தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது...

தூங்கிப்போனேன்.

கனவில் அந்த ராஜா... சொன்ன வார்த்தைகள் வந்துப்போனது...

'அருமையான இசை...! உமக்கு பரிசு நிச்சயம் உண்டு..'

தூக்கம் கலைந்தது... ஊர் நெருங்கிவிட்டதை டிராஃபிக் சத்தங்களும், டீசல் வாசனையும் உணர்த்திக்கொண்டிருந்தது.... தூக்கம் கலைந்தாலும், வண்டியின் உலுக்கலில் கண்கள் திறக்க மனம் வராமல் தூங்குவதாக நடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்துக்குமேல் நடிப்பு அலுப்புதட்டவே, மெல்ல கண்களைத் திறந்தேன்.

முதல்முறையாக ஏதோ ஒரு உணர்வு.... கண்கள் கூசியது... கண்களிலிருந்து ஒருவிதமான எரிச்சலால் நீர் வழிந்தது... துடைத்துக்கொண்டு மீண்டும் பார்க்க முயன்றபோது... மீண்டும் ஒரு புது உணர்வு....

'உமக்கு பரிசு நிச்சயம் உண்டு..' என்று காதில் கேட்டது...

கண்களை கசக்கிக்கொண்டு, அகலமாய் கண்கள் திறந்துப்பார்த்தேன்.

முதல் முறையாக உலகம் தெரிந்தது..!

- நிறைவு -


Signature

33 comments:

பாலாஜி சங்கர் said...

நல்ல விருவிருப்பான நடை

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அருமையான கதை ட்ரீமர், மாயக் கண்ணனோடு பயணித்து, மாயக் கண்ணனோடு திரும்பி, மாயக் கண்ணனோடு உலகைப் பார்த்து, ஒரு கற்பனை உலகத்துக்கு பைசா செலவில்லாமல் அழைத்து சென்று விட்டீர்கள். நன்றி.

DREAMER said...

வாழ்த்துக்கு நன்றி பாலாஜி..!

வாங்க நாய்க்குட்டி மனசு,
மாயக்கண்ணனுடன் கற்பனை உலகை ரசித்து அனுபவித்து ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி!

-
DREAMER

சீமான்கனி said...

ஆஹா...அழகான கதை ஹரீஷ்...மாயகண்ணன் பக்கத்தில் இருந்து அனுபவங்களை பகிர்ந்த உணர்வு...சிறப்பாய் வந்திருக்கு முடிவு சிலிர்க்க வைத்து விட்டது...வாழ்த்துகள்...

DREAMER said...

வாங்க சீமான்கனி,
மாயக்கண்ணனோடு சேர்ந்து கதையை அனுபவித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

-
DREAMER

வேங்கை said...

ஹரிஷ் ரொம்ப நல்லா இருக்கு

கதையோடு நானும் அழகை ரசித்தேன்

நல்லா முடிவு அருமையான பரிசு ....

சிவாஜி சங்கர் said...

மாய யதார்த்த..
Magic realism
கற்பனைக்கு வாழ்த்துக்கள்..

:)

DREAMER said...

வாங்க வேங்கை,
அழகை ரசித்தமைக்கு நன்றி...

வாங்க சிவாஜி சங்கர்,
Magic Realism என்று புதுமாதிரியான வார்த்தையில் வர்ணித்தமைக்கு நன்றி நண்பா...

-
DREAMER

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருந்த‌து ஹ‌ரீஸ்..

Anand said...

It would be helpful if you post good things like this in English too for illiterate people like us dude :-)

DREAMER said...

நன்றி நாடோடி நண்பரே...!

Hi Anand,
ThanX for your suggestion..! Will translate the stories soon..!

-
DREAMER

மெல்லினமே மெல்லினமே said...

nalla irukku dreamer!

KVPS said...

இந்த கதையில எனக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு........

ரத்ததுக்கும், கொலைக்கும், பேய்க்கும் ஓய்வு தந்ததுக்கு பாராட்டுக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முதல் முறையாக உலகம் தெரிந்தது..!//

கடைசி வரி படிச்சப்ப ஒடம்பு சிலிர்த்து போச்சு... இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல... அழகான கதை...

DREAMER said...

வாங்க மெல்லினம்,
வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி..!

வாங்க கிருலா பிரபு(KVPS)
ரத்தவங்கியில ரத்தம் ஸ்டாக் இல்லியாம், பேய்ங்க எல்லாம் சம்மர் வெகேஷன் போயிருக்கு... அதான் ரத்தத்துக்கும், பேய்க்கும் ஓய்வு கொடுத்துட்டேன்... ஹா ஹா... ச்சும்மா... அடுத்த கதைகள் On the way..!

வாங்க அப்பாவி தங்கமணி,
கடைசி வரியை டைப் செய்து முடித்ததும், எனக்கும் ஒரு திருப்தி ஏற்பட்டது. கண்களை மூடிக்கொண்டேன்... உங்களுக்கு அந்த வரிகளும் கதையும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..!

-
DREAMER

பத்மா said...

fantacy நிஜமாகிறது .நடந்தால் எத்தனை சந்தோஷம் .நல்லா இருக்கு கற்பனை

DREAMER said...

நன்றி பத்மா,
உண்மைதான், ஊரில் எத்தனையோ மாயக்கண்ணன்கள் உள்ளனர், இதுபோல ஒருத்தருக்காவது நடந்தால் மிக நன்றாக இருக்கும்... கற்பனையை பாராட்டியதற்கு நன்றி..!

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ.. கதைனா இப்படித்தான் இருக்கனும்.. அப்படியே வாசகனை உள்ளிழுதுச் செல்லும் கதை அம்சம்.. அருமை அருமை..

DREAMER said...

வாங்க உழவன் நண்பரே,
கதைக்குள் சென்று ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

-
DREAMER

Unknown said...

Hi Dreamer,

This is the first time am reading ur blog........

MAYAKARAi is a EXCELLENT One :-)

Ananya Mahadevan said...

ரொம்ப ரொம்ப அருமையான கதை. கல்கியின் அமானுஷ்ய கதைகள் ஒண்ணு ரெண்டு படிச்சு இருக்கேன். அதை நினைவு படுத்தினாலும் ஒரு அருமையான படைப்பு. ஹார்ரர் கம் த்ரில்லர் மட்டுமில்லாமல் மெய் சிலிர்க்க வைக்கும் முடிவு!
”மாற்றுத்திறன்” என்ற சொற்பிரயோகம் மிக மிக மிக அருமை.

DREAMER said...

Hi Viji,
ThanX for the Visit & Appreciation... Do visit again...

வாங்க அநன்யா,
கதையை ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி..! எனக்கும் இந்த 'மாற்றுத்திறனாளி' என்கிற வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு..! யாரையும் புண்படுத்தாத வார்த்தை..! கலைஞருக்கு நன்றி!

-
DREAMER

Harinarayanan said...

ஹரீஷ்,
கதை பிரமாதம், கலக்கல், சூப்பர் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தக் கதையை படிச்சதுக்கப்புறம் எனக்கு ரெண்டு விஷயங்கள் தோணுது.

1.இந்தக் கதையை ஊரிலுள்ள மாயக்கண்ணன்கள் சில/பலருக்கு நம்மள மாதிரி யாராவது ஒருத்தர் படிச்சுக்காட்டினா எவ்வளவு நல்லா இருக்கும். நான் முயற்ச்சி பண்றேன்.

2. மக்கள் என்னைக்குமே நல்ல விஷயங்கள பாராட்டவே மாட்டாங்க. பின்ன பாருங்க, எத்தனையோ குப்பைகளுக்கு 40 ஓட்டுப் போட்டு தமிழிஷ் முகப்புப் பக்கத்துக்கு பதவி உயர்வு கொடுக்குறாங்க. இந்த அழகான, சமூக பார்வையுள்ள ஒரு கற்பனைக்கு 6 ஓட்டுக்கு மேல போட யாருக்குமே மனசு வரல! கூடிய சீக்கிரம் இது பிரசுரமாக வாழ்த்துக்கள்.

மக்களே....ஏன் இப்படி???

உங்க கதைகள்லேயே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை/கற்பனை இதுதாங்க ஹரீஷ். இதுமாதிரியான கற்பனைகளை இன்னும் நிறைய எதிர்ப்பார்க்குறேன் உங்ககிட்ட.
பத்மஹரி.
http://padmahari.wordpress.com

DREAMER said...

வாங்க ஹரி,
ஆஹா, என் கதைகள்லியே சிறந்த கதையா உங்களுக்கு இந்த மாயக்கரை பிடித்துப்போனதில் மிக்க மகிழ்ச்சி.

//இந்தக் கதையை ஊரிலுள்ள மாயக்கண்ணன்கள் சில/பலருக்கு நம்மள மாதிரி யாராவது ஒருத்தர் படிச்சுக்காட்டினா எவ்வளவு நல்லா இருக்கும். நான் முயற்ச்சி பண்றேன்.//
ஹரி, இது ரொம்பவும் நல்ல யோசனையா இருக்கு... நானும் இதுக்கான ஒரு சிறப்பு ஏற்பாடை கண்டிப்பா பண்றேன்.

//இதுமாதிரியான கற்பனைகளை இன்னும் நிறைய எதிர்ப்பார்க்குறேன் உங்ககிட்ட.//
இந்த கதையை முறியடித்து உங்க ஹிட்லிஸ்ட்டில் இடம்பெற மேலும் பல கதைகளை எழுத முயற்சிக்கிறேன்.

தொடர் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றிங்க ஹரி..!

-
DREAMER

Anonymous said...

Superb Mr. Hareesh..

Ragu

arul Sudarsanam said...

super sir, rendu storieyale naan unga fan aiten..

DREAMER said...

ThanQ Mr. Ragu... Please visit again..!

Welcome Arul Sudarsanam,
ரெண்டு ஸ்டோரியில் எனக்கு ஒரு ஃபேன் என்பதை விட ஒரு புது நண்பர் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..! தொடர்ந்து வாருங்கள்..! நேரம் கிடைக்கும்போது, மற்ற கதைகளையும் படித்துப் பார்த்து கருத்து தெரிவியுங்கள்!

-
DREAMER

Kiruthigan said...

அருமை

DREAMER said...

நன்றி கிருத்திகன்..!

guru said...

நல்ல விறு விறுப்பான கதை...
கதையில மாயக்கண்ணனோட நானும் பயணிச்ச மாதிரி இருந்தது..

ராகவ் said...

கதை மிக மிக அருமை,
இறுதியில் தான் நாம் கதை படித்துக்கொண்டு இருக்கிறோம் என்கின்ற நினைவே வந்தது. ஒரு படம் பார்த்தது போலவே இருந்தது.
நான் கடற்கரைக்கு சென்று வந்தது போன்றதொரு உணர்வு..

Anonymous said...

Wonderful. :))
-Vibin

Unknown said...

indru thaan padithen kathai miga arumai melum en manathinai nerudiya kathai kangal vazvil illaiyel eduvum illai en commentirkku bathil alithaal meendum thodarbukolla aarvathudan irukiren harish avargale nandri

Popular Posts