Monday, May 17, 2010

பேநா நண்பன் - [சிறுகதை]

2ஆம் ஷிப்ட் முடித்துவிட்டு கிளம்ப கொஞ்சம் லேட்டாகிவிட்டது, அதனால் வழக்கமாக போக வேண்டிய ட்ரெய்னை மிஸ் பண்ணிவிட்டேன்.... இப்போது வரப்போகிற ட்ரெயின்தான் லாஸ்ட் ட்ரெய்ன்... நல்ல வேளை இதையாவது தவற விடாமல் வந்து சேர்ந்தேனே.... என்று என்னை நானே பாராட்டிக் கொண்டிருந்த வேளையில் தூரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் என் கடைசி ட்ரெய்னின் ஹெட்லைட் தெரிந்தது...

ட்ரெய்ன் ஹார்ன், மகாபாரதச் சங்கு போல ஒலித்தது....

பயங்கர காலியாக இருந்த அந்த ட்ரெய்ன் எந்த அவசரமுமில்லாமல் ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றது...

ஏறினேன்...

உள்ளே யாருமில்லை....

அந்த காலி கம்பார்ட்மெண்ட் சற்றே பயமுறுத்தலாக இருந்தாலும்... ஒரு பக்கம், கவர்மெண்ட் நமக்கென்று தனியாக ஒரு ட்ரெய்ன் விட்டிருப்பதை எண்ணி கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டேன்....

அடுத்த ஸ்டேஷன் வந்தது.... என் ஸ்டேஷன் வர இன்னும் குறைந்தது 20 நிமிடாவது ஆகும் என்பதால் ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தேன்....

வந்துநின்ற ஸ்டேஷனில் ஒருவன் மட்டும் ஏறினான்... சுற்றும் முற்றும் பார்த்தான்.... ஏனோ என் எதிரில் வந்து உக்காந்தான்.... சே..! இவ்வளவு இடம் இருந்தும் இங்கேயே வந்து உக்காந்து நம்ம ப்ரைவசிய கெடுக்கிறானே என்று கொஞ்சம் கோபம் வந்தது...

நான் என் ஆஃபீஸ் பையிலிருந்து இன்றைய DC பேப்பர்-ஐ எடுத்து சு டோ கு புதிரிருந்த பக்கத்தை திருப்பினேன்...

சு டோ கு ஒன்றின் விடையைக் கண்களால் கணித்தேன்.... ஆனால் அதை பேப்பரில் எழுத என்னிடம் பேனா இல்லை.... என் எதிரில் உக்காந்திருப்பவனிடம் பேனா இருந்தது....
கேட்கலாமா... வேண்டாமா....?

ஏதோ ஒருவித ஈகோ என்னை தடுத்தது... ஆனால் நான் அவன் சட்டைப் பாக்கெட்டிலிருக்கும் பேனாவையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டான்...

அவனே பேனாவை எடுத்துக் கொடுத்தான்....

'இந்தாங்க சார்... யூஸ் பண்ணிக்கோங்க....' என்று பேனாவை என்னிடம் ஈகோயில்லாமல் கொடுத்தான்

அசடு வழிந்துக் கொண்டே 'தேங்க்ஸ்...' என்றேன்...
அது இங்க் பேனா என்பதை கையில் வாங்கியதும் தெரிந்துக் கொண்டேன். இப்பவும் இங்க் பேனா உபயோகிப்பவர்கள் இருக்கிறார்களா என்று என்னுள் நானே கேட்டு வியந்துக்கொண்டேன்.

ட்ரெய்ன் படுவேகமாக போய்க்கொண்டிருந்தது...

அந்த இங்க்பேனாவின் மூடி மிக அழுத்தமாக மூடப்பட்டிருந்தது.... அதை திறக்க முயற்சி செய்து முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்....

'கொடுங்க சார் நானே ஓபன் பண்ணித் தர்றேன்....' என்று அவனே கேட்டான்

'நோ.. நோ... நானே பண்ணிக்கிறேன்....' மறுபடியும் என் ஈகோதான்...

பலமனைத்தையும் பிரயோகித்து... ஒரு வழியாக திறந்துவிட்டேன்....

அந்த நேரம் பார்த்து ட்ரெய்னின் வேகம் காரணமாக காற்று பலமாக வீசியது... என் மடியிலிருந்த அந்த சு டோ கு பேப்பர் திசைக்கொரு பக்கம் பறந்தது.... அதை பிடிப்பதற்காக என் கைகளை பலத்த வேகமாக அசைக்க... ட்ரெய்ன் ஏதோ காரணமாக 'சடன் பிரேக்'கடித்து நின்றது....

ஒரு சின்ன நிசப்தம்...

என் கைகள் பேப்ரை பிடித்திருந்தது... ஆனால்.... ஆனால்....

பேப்ரை விலக்கி பார்த்ததும்.... அய்யோ....

என் கையிலிருந்த பேனாவின் கூர்முனை... என் எதிரில் உக்காந்திருந்தவனின் தொண்டையில் ஆழமாக இறங்கியிருந்தது... அவன் வார்த்தை ஏதும் வராமல் கண்களை விரித்துக் கொண்டு திணறியபடி 'ஹக் ஹக்' என்று விழிகளை அகலவிரித்தபடி என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்...

அடக்கடவுளே.... அந்தப் பேனாவை அவன் தொண்டையிலிருந்து எடுக்க முயற்சி செய்தபோது, அவன் தொண்டைக்குழியிலிருந்து இரத்தம்... அவன் சட்டை முழுவதும்.... பேனாவை எடுக்காமல் அப்படியே விட்டபடி ட்ரெயின் வாசலுக்கு வந்தடைந்தேன். திரும்பி பார்த்தேன். அவன் சீட்டில் படுத்தபடி துடித்துக் கொண்டிருந்தான்.

சே... இப்படியா நடக்க வேண்டும்....

வெளியே திடீரென்று சங்கு ஒன்று சத்தமாய் ஒலித்தது... இல்லையில்லை அது சங்கு இல்லை ட்ரெய்ன் ஹார்ன் சத்தம்....

பதட்டத்தில் என் மூளை தப்பாக வேலை செய்கிறது....

அடுத்து என்ன செய்வது... அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட வேண்டும்...

அடுத்த ஸ்டேஷன் வந்தது...
இறங்கினேன்...

ஒருவன் அதே கம்பார்ட்மெண்டில் ஏறினான்...

என்னைத் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே ஏறினான்... என் உள்ளே வேறு பயம் தொற்ற ஆரம்பித்தது... ஒரு வேளை இவன் என்னை நாளை போலீசில் அடையாளம் காட்டிவிட்டால் என்ன செய்வது..?

ஓடிப்போய் மீண்டும் ட்ரெய்னில் ஏறினேன்.... நான் நினைத்தது போலவே அவன் துடித்துக்கொண்டிருந்தவனின் தொண்டையிலிருந்து பேனாவை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்.... எடுத்ததும், காயம்பட்டவன் சரிந்து விட்டான்... அடக்கடவுளே இறந்துவிட்டான்!

இவன் பேனாவுடன் திரும்பி என்னிடம் வந்தான்....

'டேய்..! நீதானே இவனைக் கொண்ணே...? உண்மையைச் சொல்லுடா..?' என்று என்னை மிரட்டினான்.

எனக்குள் திடீரென்று ஒரு வேகம்... கொஞ்சமும் யோசிக்காமல் அவனை பிடித்து ட்ரெய்னுக்கு வெளியே தள்ளி விட்டேன்... ஓடுகின்ற ட்ரெய்னில் இருந்து விழுந்த அவன் உடல் துண்டு துண்டாய் சிதறியது....
'ஆஆஆஆஆஆஆஆஆஆஆ.......' என்று அவன் அலறிய சத்தம் மலைப்பள்ளத்தாக்கில் கேட்பதுபோல் கேட்டு அடங்கியது.
சே... ஒரே இரவில் நான் இப்படி 2 கொலைகள் செய்வேன் என்று சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை....

2 வாரங்களுக்குப் பிறகு...

அதே ஸ்டேஷன்...

இரண்டு வாராம மிகவும் சிரமப்பட்டு ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.... மீண்டும் ஆஃபீசில் இன்று லேட் ஆனதால் இன்று அதே ட்ரெய்னை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது...

வழக்கம் போல் ட்ரெய்ன் காலியாக வந்தது...

ஏறினேன்... அதே சீட்டில் ஜன்னல் பக்கம் இல்லாமல், நடுப்பக்கம் உட்கார்ந்தேன்... உள்ளே ஒரு இனம் புரியாத நடுக்கம்...

அடுத்த ஸ்டேஷன்.... யாரும் ஏறவில்லை... ட்ரெய்ன் மெதுவாக ஊர்ந்து அந்த ஸ்டேஷனை தாண்டியது....

என் தோளில் ஒரு கை விழுந்தது...
ஆஆஆஆ... அலறியடித்துத் திரும்பினேன்.... அவன்தான்... அவனேதான்... எனக்கு பேனா கொடுத்தவன்தான்.... அய்யோ பேயாக வந்திருக்கிறான்....

கத்தலாமா வேண்டாமா என்று நான் நினைக்கும்போது அவனே பேசினான்....

'பயப்படாதீங்க பாஸ்.... நான்தான்...' என்று சிரித்தபடி என்னெதிரில் வந்து உட்கார்ந்தான்.
'எனக்கும் ஒண்ணும் ஆகல.... ஜஸ்ட் ஒரு சின்ன இன்ஜூரி... இதோ பாருங்க பேண்டேஜ் போட்டிருக்கேன்... இன்னும் 2 நாள்ல சரியாயிடும்...' என்று அவன் தன் கழுத்தைக் காட்ட, அங்கே ஒரு பேண்டேஜ் மட்டும் ஒட்டப்பட்டிருந்தது...

நிம்மதி பெருமூச்சு விட்டேன்....

'ஆமா..! என் பேனா உங்ககிட்டத்தான் இருக்கா..?' என்று கேட்டான்...

அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது... அய்யோ... நான் இவனைக் கொன்றதை போலீசில் சொல்லிவிடுவான் என்று நினைத்து அநியாயமாக இன்னொருவனை ட்ரெயினிலிருந்து தள்ளி துண்டு துண்டாக சிதறடித்து சாகடித்தேனே...!
முகத்தில் மிரட்சி காட்டாமல் 'சாரி சார் அது எங்கேயோ மிஸ் ஆயிடுச்சி...' என்றேன்....

'பரவாயில்லை பாஸ் விடுங்க..' என்றவன்... வந்து நின்ற அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட்டான்....

மீண்டும் தனியாக ட்ரெய்னில் போய்க் கொண்டிருந்தேன்....

என் காலடியில் ஏதோ இருந்தது எடுத்தேன்... பேனாவின் மூடி... அதே பேனாவின் மூடி.... இதன் பேனாவை கடைசியாக எங்கே பார்த்தோம்... என்று நினைவுக்கூர்ந்தேன்.


அன்று நான் ட்ரெயினிலிருந்து தள்ளிவிட்டவன், தன் கையோடு அந்தப் பேனாவை கடைசியாக கையில் வைத்திருந்ததை நினைக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பய அமிலம் உழன்று என்னை கலவரப்படுத்தியது...

அப்போது திடீரென்று...

'டேய்...' என்று கர்ஜனையான ஒரு குரல்....

ட்ரெயின் ஜன்னலுக்கு வெளியே கேட்டது... எட்டிப்பார்த்தேன்....

அய்யோ... நான் ட்ரெய்னிலிருந்து தள்ளிவிட்டவன்தான்... இப்போது பார்க்க முகம் அழுகி... அகோரமாய்...

ஓடும் இரயிலில் ஜன்னலுக்கு வெளியே கம்பிகளைப்பிடித்தபடி, அடிப்பட்ட இரத்தக்காயங்களுடன் என்னைப் பார்த்து கோரைப் பற்களுடன் முறைத்துக் கொண்டிருந்தான்....

அவனின் கைகளில் 3 விரல்கள்தானிருந்தது... கையில்... அதே பேனாவை பிடித்துக் கொண்டு, கூர்முனையை என்பக்கம் திருப்பி,  குத்துவதற்கு என்னை நோக்கி கையை ஓங்கினான்...

ச்ச்ச்சக்க்க்க்க்க்...!?!


என் தொண்டைக்குழியில் அந்தப்பேனா கச்சிதமாக இறங்கியது.

ஆஆஆஆஆஆ...

- முடிவு -


Signature

21 comments:

வினையூக்கி said...

Terrific !!! Excellent.

க ரா said...

ஏன் பாஸு. இப்படில்லாம் பச்ச புள்ளைங்க பயந்துற போகூது. பாத்து எழுதுங்க பாஸு.

சீமான்கனி said...

திரில்...திரில்...திரில்...கடைசி வரை கொஞ்சம் கூட குறையாமல் இருந்துச்சு...சூப்பர்....கதை ஹரிஷ்....வாழ்த்துகள்..

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரே திகில் மயமா இருக்கு ஹரீஷ்!!

Ananya Mahadevan said...

very scary!!! phew!
Harish ennoda latest post padinga.. ungalai pathi 'romba visheshama' mention panni irukken!

நாடோடி said...

க‌தை ந‌ல்ல‌ ஸ்பீடா திரில்லா போச்சு ஹ‌ரீஷ்..

அருண் பிரசாத் said...

அருமையான த்ரில்லர்! கடைசி வரை பயம்!! கதையும் சூப்பர், படமும் பிரஸ்ட் கிளாஸ்.கலகறிங்க. சரி, நகுலன் என்ன ஆனார் சார்? ரெண்டு பதிவுக்கு மேல் வரவில்லை!

Raghu said...

செம த்ரில் ஹ‌ரீஷ்...வார்த்தை பிர‌யோக‌ங்க‌ளைவிட‌ த்ரில்லை மெயின்டெயின் ப‌ண்ற‌துல‌ பின்னி எடுக்க‌றீங்க‌...ரிய‌லி சூப்ப‌ர்ப்!

இதை நான் ஏற்க‌ன‌வே படிச்சிருக்கேன் ;)

Madhavan Srinivasagopalan said...

Three characters in the story, I number them 1,2,3 in the chronological order they appear. The 2nd one comes back is logical..(may be small injury on the throat.).. but, the 3rd person's visit again & the murder of the 1st is not logical..

Or is that I missed something in between..?

எல் கே said...

cant u write normal stories. ellame thrillerthan

arul Sudarsanam said...

wow!! Good story man. naan appadiye shock aiten

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐயோ... செமையா பயபடுத்தறீங்க சார்... அந்த படம் ரெம்பவே பயமா இருக்கு... நல்ல கொண்டு போய் இருக்கீங்க... கதை பெயருக்கு ஏத்த மாதிரி...வழக்கம் போல சூப்பர்

DREAMER said...

நன்றி வினையூக்கி...

வாங்க இராமசாமி கண்ணன், புள்ளைங்க இப்பெல்லாம் அவ்வளவு சீக்கிரம் பயப்படுறதில்லீங்க...

நன்றி சீமான்கனி, திரில்-ஐ ரசித்து பாராட்டியதற்கு...

நன்றி சைவகொத்துப்பரோட்டா, வருகைக்கும் வாசிப்புக்கும்...

நன்றி அநன்யா, உங்க லேட்டஸ்ட் ப்ளாக்-ஐ இப்பவே படிக்கிறேன்...

நன்றி நாடோடி நண்பரே... வருகைக்கும் வாசிப்புக்கும்...

DREAMER said...

நன்றி அருண் பிரசாத்... கதையை வாசித்துப் பாராட்டியதற்கு... நகுலன் கதைகள் சீக்கிரமே மறுபடியும் போஸ்ட் பண்றேன்... ஞாபகமா கேட்டதற்கு மிக்க நன்றி!

வாங்க ரகு,
நாம 'ஜஸ்ட் லுக்' மெமரீஸ்-லருந்து எடுத்துப் போட்டதுதான். கொஞ்சம் கரெக்ஷன்ஸ் இருந்தது. வருகைக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வாங்க Madhavan Sir,
The 3rd Person's revisit is actually his Ghost... No Logics for Ghosts right...

வாங்க LK,
Normal Stories are bit tough for me... But I feel Thriller stories are my Home Pitch... ThanX for showing interest... Will try to write some normal stories in future...

Welcome Arul Sudarsanam,
கதை படித்து ஷாக் ஆனதற்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்...!

வாங்க அப்பாவி தங்கமணி,
ஹாரர் ஸ்டோரி பிரியை நீங்கள் என்பதால், உங்களிடமிருந்து ஹாரர் அங்கீகாரம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!

வேங்கை said...

ஹரிஷ் கதைல ஒரு எதிர்பார்ப்பு missing ( climax la )

ஆனால் வழக்கம் போல பின்னிடீங்க கதையோட்டம்-ல

DREAMER said...

நன்றி வேங்கை... அடுத்த கதையில இன்னும் அமர்க்களப்படுத்திடலாம்..!

-
DREAMER

Anonymous said...

wow.. Finished reading all your posts.. Really you are so creative and all the fictions are amazing.. Have marked your blog in my bookmark.. that means expecting your posts everyday.. Good luck again.. By the way I couldn't find any details about your film in the net.. Any clues??.. Maaya.. Colombo

Matangi Mawley said...

thriller padiththu niraya varudangal aaki vittna.. nalla ezhuththu.. enakku mikavum pidiththirunthathu!

keep writing..

DREAMER said...

Welcome Anonymous,
Happy that you read all stories... And about my Film, Genre is Horror (you'd have guessed it by now)... I'll post more details about my film very soon... ThanX for showing interest.

வாங்க மாதங்கி,
இந்தக்கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி, இன்னும் நிறைய இருக்கு..! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

அனு said...

Hi Dreamer,
கதை எங்கயும் தேங்காம சூப்பரா போச்சு.. நல்லா எழுதுறீங்க..

ஒரே ஸ்ட்ரேச்-ல எல்லா கதையையும் படிச்சு முடிச்சாச்சு.. இந்த மாதிரி thriller posts நிறைய பாத்ததில்ல... நல்ல முயற்சி.. Keep it up..
Expecting a lot in the future...

DREAMER said...

நன்றி அனு,
ஒரே ஸ்ட்ரெச்சில் அத்தனை கதையையும் படிச்சிட்டீங்களா..? ரொம்ப நன்றிங்க..!

-
DREAMER

Popular Posts