Monday, September 13, 2010

"கேணிவனம்" - பாகம் 13 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 13

தாத்தா, தாஸ் தன்னிடம் கேட்ட அந்த சித்தரைப் பற்றி தொடர்ந்தார்...

'அந்த சித்தரோட பேரு என்னன்னு இன்னும் சரியா தெரியலப்பா... ஆனா, நாம தேடின மாதிரி, பிரம்மா கடவுளை உபாசகம் பண்ணிக்கிட்டு வாழ்ந்த ஒரு சித்தரோட சமாதி இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கு..' என்று கையில் ஒரு புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து கட்டிபிடித்தபடி சொன்னார்.

'எப்படி தெரிஞ்சுது தாத்தா..?'

'18ஆம் நூற்றாண்டுல, பூலித்தேவ ராசா காலத்து ஓலைச்சுவடிகள்ல சில சுவடிகள் சித்தர்களோட சமாதிகளை பத்தி சொல்லுது... அந்த சுவடிகளை அடிப்படையா வச்சி எழுதப்பட்ட  'சித்த சமாதிகள்'ங்கிற இந்த புத்தகத்துல, நாம தேடிக்கிட்டிருக்கிற சித்தரை பத்தின ஒரு குறிப்பும் கிடைச்சிருக்கு...' என்று தன் கையிலிருந்த, பழைய பைண்டிங் உடைந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தை தாஸிடம் காட்டினார்.

அவர் காட்டிய பக்கத்தில் கீழ்காணும் பாடல் இருந்தது...

வங்கமண் டலக்கரையிலே
முருக்குவனத்தி லொருதடாக முண்டு
அதனருகேய ழுகிடாமண் பிடியில்
பரசுரா மனீஸ்வர னடிகிடக்கிறான்
பிரம்ம சித்தனயனாண்ட
புரத்தே


'என்ன தாத்தா இது... இதுல பிரம்ம சித்தர்-னு போட்டிருக்கு... இதுதான் அவரோட பேரா இருக்குமோ..?'

'இருக்கலாம்... உனக்கு இந்த பாட்டுல சொல்லியிருக்கிற இடம் என்னன்னு தெரியுதா..?'

'வங்கமண்டலக்கரை-னா..? வங்காள விரிகுடா கரைதானே..?'

'ஆமா... வங்களா விரிகுடாவில - தொண்டை மண்டலப் பகுதி.. அதைத்தான், வங்கமண்டலக்கரை-னு சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்...'

'முருக்குவனத்தில் ஒரு தடாகம் உண்டு - அது எங்கேயிருக்குன்னு எப்படி தாத்தா கண்டுபிடிக்கிறது..?' என்று தாஸ் மிகவும் குழம்பவே, தாத்தா அவனுக்கு உதவும் விதத்தில் தனக்கு தெரிந்த தகவலை அவனுடன் பரிமாறிக் கொண்டார்...

'எனக்கு தெரிஞ்சு... முருக்கு மரத்துக்கு, பலாச மரம், புரசை மரம் அப்படின்னும் பெயரிருக்கு...'

'அப்படின்னா பலாசவனம்...  புரசைவனம்... புரசைவனம்..' என்று மீண்டும் மீண்டும் கூறவே தாஸுக்குள் ஒரு இடத்தை பற்றி பொறி தட்டியது...

'தாத்தா, எனக்கு ஒரு இடம் தோணுது.. ஆனா, அது எந்தளவுக்கு சாத்தியம்னுதான் தெரியல...'

'என்ன இடம்னு சொல்லுப்பா... இந்த பாட்டுல சொல்லியிருக்கிற குறிப்புக்கு பொறுந்துதான்னு பாப்போம்..'

'சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம்..! தொண்டை மண்டலத்துல என்னன்ன ஊர் வருது சொல்லுங்க.?'

'கரெக்டா எது எதுன்னு தெரியல... பொதுவா சொல்லனும்னா, காஞ்சிபுரம், ஆற்காடு, சென்னை... இப்படி சில இடங்கள் வருது..'

'ஆங்... சென்னை வருதுல்ல... அப்ப நான் சொல்ற இடமா கூட இருக்க வாய்ப்பிருக்கு தாத்தா..?'

'என்ன இடம்னு சொன்னாதானேப்பா தெரியும்..' என்று தாத்தா ஆர்வம் தாளாமல் கேட்க...

'சென்னையில புரசைவாக்கம்-னு ஒரு இடமிருக்கு... ஆனா பயங்கர பிஸி கமர்ஷியல் ஏரியா... ஒருவேளை... இந்த இடத்தைத்தான் இந்த பாட்டுல முருக்குவனம்-னு சொல்லியிருப்பாங்களோ..?'

'ஹா... ஹா...' என்று மெலிதாக சிரித்தபடி தாத்தா தொடர்ந்தார்

'நல்ல யூகம்தான்..! இருக்கலாம்..! சென்னை, இப்ப வேணும்னா, ஒரு ஹைடெக் ஊரா இருக்கலாம், ஆனா ஒரு காலத்துல அதுவும் ஒரு புனிதமான காடுதானே..! நீ சொல்ற மாதிரியே இருந்தாலும், பிரம்ம சித்தன்... அயனாண்டபுரத்தே-னு இன்னும் சில குறிப்புகளும் இந்த பாட்டுல இருக்கே..? இந்த குறிப்பு எப்படி பொருந்தும்...?' என்று தாத்தா மீண்டும் கேள்வியெழுப்ப... தாஸ் எங்கேயோ பார்த்துக் கொண்டு ஏதோ மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்... திடீரென்று ஏதோ தோன்றியவன்... 'யெஸ்...' என்று குதூகலத்துடன் எழுந்து...

'தாத்தா, கண்டுபிடிச்சுட்டேன்...' என்று கூற

'என்ன..?' என்று தாத்தா ஆர்வமாக அவனை பார்த்தபடி கேட்டார்

'தாத்தா... அயனாண்டபுரத்தே-னு இன்னொரு இடத்தையும் சொல்லியிருக்காங்கள்ல...'

'ஆமா..'

'அது... அயன் ஆண்ட புரம்.. அதாவது... அயன்புரம்... இப்போ சென்னையில இந்த ஏரியாவை அயனாவரம்-னு சொல்லுவாங்க... இந்த இடம் புரசைவாக்கத்துக்கு பக்கத்துலதான் இருக்கு... இப்போ பொருந்துதுல்ல..?'

'என்னமோ... எனக்கு சென்னைய அவ்வளவா தெரியாது... நீ சொல்றது இந்த குறிப்புக்கு கிட்டதட்ட ஒத்துப்போகுது... நீ எதுக்கும் அங்கே போய் கேட்டுப்பாரு...'

'என்னன்னு தாத்தா சொல்லி கேக்கிறது..?'

'அதான் இந்த பாட்டுல நடு இரண்டு வரியில, அழுகிடாமண்பிடியில் பரசுரா மனீஸ்வர னடிகிடக்கிறான்-னு தெளிவா சொல்லியிருக்கே... அதாவது... பரசுராம ஈசுவர அடியில கிடக்கிறான். இந்த பேருல ஏதாவது கோவில் இருந்ததுதா... இல்ல இருக்குதா...ன்னு விசாரிச்சேன்னா... தெரியப் போகுது..' என்று தாத்தா கூற...

'ஆமா தாத்தா, அப்போ, நான் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே சென்னைக்கு கிளம்புறேன்...' என்று கூறியதும், தாத்தாவின் முகம் மிகவும் வாடிப்போகிறது...

அவர் சுதாரித்துக் கொண்டு பெருமூச்சுவிட்டபடி, 'சரிப்பா..! உன் சௌகரியப்படியே செய். நான் வேற நேரம் காலம் தெரியாம உன்னை வந்து பாதி ராத்திரியில வந்து எழுப்பிட்டேன்.' என்று வருத்தபட்டார்.

'இதுல என்ன தாத்தா இருக்கு... ஒரு பயனுள்ள தகவல் கிடைச்சுதே இது பெரிய விஷயமில்லியா..?'

'சரிப்பா, அதான் கிடைச்சிடுச்சே... நீ தூங்கு... நீ நாளைக்கும் பிரயாணப்படவேண்டியவன்' என்று தான் கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை கட்டிபிடித்தபடி எடுத்துக் கொண்டு, தாத்தா தாஸின் அறையிலிருந்து வெளியேறினார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ் அவர் சென்றதும், கதவை தாழிட்டுக் கொண்டு, மீண்டும் வந்து படுக்கையில் பொத்தென்று விழுந்தான். விரைவில் உறங்கிப்போனான்.

-----------------------------------------------------------------------------------

காலை 7 மணி...

சென்னை போலீஸ் ஸ்டேஷனில், முன்னாள் இரவு அரெஸ்ட் செய்து, ஒரு அறையில் அமர்த்தப்பட்டிருந்த சந்தோஷ்... சரியாக தூங்காததினால் விழிகள் சிவந்து காணப்பட்டான்.

சந்தோஷ்-ற்கு சிறுவயதுமுதல் போலீஸ் என்றாலே மிகவும் பயம். இது இயல்பான பயம்தான்,  ஆனால், இதுவரை அவன் போலீஸ் ஸ்டேஷனில் இப்படி இரவை கழித்ததில்லை... இதுதான் முதல்முறை... அந்த சூழல் அவன் பயந்ததுபோல், எதுவும் இல்லைதான். ஆனாலும், அவனுக்குள் ஒருவித பயம் ஆக்கிரமித்திருந்ததை உணர்ந்தான்.

ஒரு கான்ஸ்டபிள் அவனுக்கு அருகில் இருந்த மேஜையில், டீ கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்தார்...

அதை எடுத்து பருக ஆரம்பித்தான். அந்த சூழலுக்கு மிகவும் இதமாக இருந்தது... டீ, அளவு மிகவும் கம்மியாக இருந்ததை எண்ணி உள்ளுக்குள் வருந்தினான். பசித்தது... ஆனால் யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்திருந்தான்.

தயங்கியபடி, அவனுக்கு டீ கொடுத்த கான்ஸ்டபிளிடம் 'சார்..?' என்றான்...

'என்னய்யா..?' என்று அவர் கடுப்பாக கேட்க...

'இன்ஸ்பெக்டர் எப்போ சார் வருவாரு...'

'இப்போதானய்யா 7 மணி ஆகுது...வருவாரு... எதுக்கு அவர் அவரை கேக்குறே..?'

'நான் நிரபராதி சார்.. அவர்கிட்ட சொல்லிட்டு கிளம்பிடுறேன் சார்...'

'அதெப்படிப்பா கிளம்ப முடியும்... அவன் உன் பேர்ல கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்திருக்கானே..?'

'யாரு சார், குணாவா...'

'பேரெல்லாம் தெரியாது.. நேத்திக்கு உன்னிய அரெஸ்ட் பண்ண சொன்னானே அவன்தான்...'

'என்னன்னு சார் கம்ப்ளைண்ட் எழுதியிருக்கான்...?'

'அதெல்லாம் உனக்கெதுக்குய்யா..?'

'சார்... ப்ளீஸ்... சொல்லுங்க சார்..' என்று கேட்க அவர் கடுப்பாக முன்னாள் இரவு சந்தோஷ் மீது குணா எழுதிக் கொடுத்த புகார் கடித்தத்தை எடுத்து அவனிடமே கொடுத்தார்...

'நீயே படிச்சிக்க...' என்று வீசி எறிய...

அதை எடுத்து சந்தோஷ் ஆவலாய் படித்தான்... கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. அதன் தமிழாக்கம்

'வணக்கம் ஐயா,

நான் குணசேகர், வயது 29,  நெ.14, G2, சீதாமேத்தா தெரு, தி-நகர், சென்னை-17 என்ற முகவரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கிறேன். நான் கே.ஸி.ஆர். இன்ஃபோடெக் என்ற பன்னாட்டு கணிணி நிறுவனத்தில், மென்பொருள் பரிசோதகனாக பணியாற்றி வருகிறேன்.

எனது வசீகரமான தோற்றத்தினாலும், சம்பளம் அதிகம் பெறுபவன் என்ற காரணத்தினாலும், அவ்வப்போது என்னை சில பெண்கள் காதலிப்பதாக சொல்வதுண்டு, அப்படி சில நாட்களுக்கு முன் லிஷா என்ற ஒரு பெண் என்னை காதலிப்பதாக என்னிடம் கூறினாள். நான் சமுதாயத்தில், மிகுந்த பொறுப்புடன் வாழ்பவன் என்பதாலும், பிறருக்கு தவறான உதாரணமாய் போய்விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தினாலும், அவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை... ஆனால், அவள் என்னை வீழ்த்துவதற்கு, சில கீழ்த்தரமான விஷயங்களை கையாண்டாள். அப்போதும, நான் எனது கொள்கையிலிருந்து தவறாமல் இருந்ததால், நாளடைவில் அவள் என்னை அணுகுவதை நிறுத்திவிட்டாள்.

இதற்குப்பின் ஒரு நாள், சந்தோஷ் என்ற ஒரு வாலிபன் எனக்கு அவ்வப்போது என் கைப்பேசியில் அழைத்து, எனக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தான். அவன் லிஷாவின் தற்போதைய காதலன் என்று எனக்கு பின்னர் தெரியவந்தது. இந்த சந்தோஷ், என்னையும் லிஷாவையும் இணைத்து சந்தேகப்பட்டுக் கொண்டு அவ்வப்போது என்னிடம் அவளைப் பற்றி அந்தரங்கமாக விசாரிப்பான். நான் எதனையோ முறை அவனுக்கு உண்மையை உணர்த்தியும், என்னை தொந்தரவு செய்ய வேண்டம் என்று எச்சரிக்கை விடுத்தும், அவன் இச்செயலை தொடர்ந்தவண்ணம் இருந்தான்.

நேற்று இரவு, என் வீட்டிற்குள் வந்து, நானும் லிஷாவும் சேர்ந்து வாழ்ந்ததை நிரூபிக்கும் ஆதாரம் என் வீட்டில் ஏதாவது கிடைக்குமா என்று தேடி என்னை மிரட்டி அடிக்கவும் செய்தான். இதனால் நான் மனதளவிலும், உடலளவிலும் பெருத்த வேதனைக்குட்பட்டவாயிருக்கிறேன். இதனால், அவனை காவல்துறை கைது செய்து அவன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

இவண்
குணசேகரன்...' என்று அக்கடிதம் முடிந்தது.

இதைப் படித்த சந்தோஷ் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தான்...

------------------------------------------------

கந்தன் கொள்ளை கிராமம்... தாத்தா வீட்டில்....

பகல் 11 மணிக்கு, தாஸும், லிஷாவும் காரில் ஏறிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாகயிருந்தனர்...

அப்போது, வீட்டு கேட்-ஐ திறந்துக் கொண்டு சுசீலாம்மா கையில் ஒரு நாட்டுக்கோழியை பிடித்தபடி உள்ளே நுழைந்தாள். காரில் தாஸும் லிஷாவும் அமர்ந்திருப்பதை பார்த்ததும்...

'என்ன தம்பி, நீங்க அசைவம் கேட்டீங்கன்னு, கோழிய கொண்டுவந்தேன்... சாப்பிட்டுட்டு அப்புறமா கிளம்பவேண்டியதுதானே..?' என்று உரிமையாக கேட்க...

'இல்ல சுசீலாம்மா... இன்னிக்கி நீங்க கொண்டு வந்த கோழிக்கு ஆயுசு கெட்டி... நான் அர்ஜெண்ட்டா சென்னைக்கு போயாகணும்... இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கிறேன்...' என்று கூறிவிட்டு... அருகில் நின்றிருந்த தாத்தாவிடம் திரும்பி...

'தாத்தா... நான் கண்டிப்பா சீக்கிரம் திரும்பி வந்து உங்க கூட தங்குறேன்... ப்ராமிஸ்... வருத்தபடாதீங்க ப்ளீஸ்...' என்று கெஞ்ச... அவர் தன் முகத்தில் சோகத்தை மறைத்துக் கொண்டு, சிரித்தபடி...

'எனக்கென்னப்பா கவலை... நான் நல்லாத்தான் இருக்கேன்... நீ சந்தோஷமா கிளம்பு... ஏதாச்சும் சந்தேகம்னா ஃபோன் பண்ணு... கிழவனை மறந்துடாதே...'

'மறப்பேனா..' என்று கூறியபடி அங்கிருந்து காரை கிளப்பினான்.

லிஷாவும் அனைவருக்கும் டாட்டா காட்டியபடி விடைபெற்றாள்.

சற்று நேரத்தில் அந்த இடத்தில், கார் கிளம்பிய புழுதியடங்கி, மீண்டும் அமைதி வந்து குடியேறியது...

ஹைவேயில் காரில்...

'என்ன தாஸ்... தாத்தாவும் பேரனுமா சேர்ந்து, நைட் பயங்கர ரிசர்ச் பண்ணியிருக்கீங்க போல...' என்று கேட்க...

'அதெல்லாம் ஒண்ணுமில்ல... அந்த சித்தர் சமாதி எங்கேயிருக்குன்னு தெரிஞ்சது அவ்ளோதான்... அவர் அந்த பழைய புக்-ஐ எடுத்துட்டு வந்து காட்டினதால எல்லாம் கிடைச்சுது..'

'இருந்தாலும், நீங்கதான் அயனாவரம்-னு கரெக்டா கெஸ் பண்ணீங்கன்னு உங்க தாத்தா சொன்னாரு..?'

'கெஸ் பண்ணது நானாயிருந்தாலும், அதுக்கு கரெக்டா முருக்குவனம்-னா புரசைக்காடுன்னு க்ளூவைச் சொன்னது தாத்தாதானே..?'

'க்ளூ பெருசா இல்ல சொல்யூஷன் பெருசா..?' என்று லிஷா அவனை மடக்க முயல...

'க்ளூதான் பெருசு... இப்ப உதாரணத்துக்கு... நீ கூகிள்ல தேட வேண்டிய விஷயத்துக்கு கரெக்டான கீ-வேர்டு (குறிச்சொல்) கொடுத்தாத்தானே அது உனக்கு ரிசல்ட் கரெக்டா கொடுக்கும்....'

'அதுசரி, உங்க தாத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே...' என்று தாஸை பார்த்தபடி சொல்ல

'அவருதாம்மா எனக்கெல்லாம்...'

'உங்களுக்கு உங்க தாத்தா பேரையே வச்சது கரெக்டா இருக்கு... அவரை மாதிரியேதான் நீங்களும்...' என்று சிரித்துக் கொள்ள

'தேங்க்யூ..' என்று தாஸ் அவள் கருத்தை பெருமையாக ஏற்றுக்கொள்கிறான்.

'ஆமா... அந்த சமாதி எந்த கோவில்ல இருக்குன்னு சொன்னீங்க..?'

'பரசுராம ஈசுவரன் கோவில்...! ப்ச் பிரச்சினை என்னன்னா... அந்த கோவில் இப்ப இருக்கா... இல்லை அதுக்கு மேல, ஷாப்பிங் காம்பளெக்ஸோ, அபார்ட்மெண்ட்டோ, இல்லை தியேட்டரோ கட்டிட்டாங்களான்னு தெரியல...' என்று கவலையாக ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டியிருக்க...

'இதுக்கு ஏன் கவலைப்படணும், இப்பவே செக் பண்ணி பாத்துட்டா போச்சு..' என்று லிஷா தனது செல்ஃபோனை எடுத்தாள்

'எப்படி..?' என்று தாஸ் ஆர்வமாய் கேட்க

'என் ஃபோன்ல GPRS இருக்கு... Google Map-ல செக் பண்ணி பாத்தா தெரிஞ்சிடப் போகுது..'  என்று கூறியபடி, தனது மொபைல் ஃபோனை எடுத்து, அதில் கூகிள் வலைப்பக்கத்தை திறந்து, மேப்ஸ் என்ற பாகத்தை க்ளிக் செய்து, அதில் 'பரசுராம ஈசுவர கோவில் - அயன்புரம்' என்று தட்டச்சினாள்.

அதில்...

(தொடரும்...)



Signature

21 comments:

வேங்கை said...

ஹரிஷ் குணா பயந்தவனு பார்த்தா பெரிய கேடி போல

நானும் கூகிள் மேப் ல அயனாவரம் பத்தி தேடி பார்க்குறேன் .

இந்த பாகம் - தோரணங்கள்

எஸ்.கே said...

வாவ்! சாதாரண சென்னை இடங்களை கதையோட அழகாக பொருத்தியிருக்கீங்க! கதை ரொம்ப அருமையா போகுது!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

Chitra said...

பாராட்டுக்கள்!

Gayathri said...

viruvirunnu poguthu

அருண் பிரசாத் said...

நல்லா பரபரனு போகுது சார். தொடருங்கள்...

இளந்தென்றல் said...

'என் ஃபோன்ல GPRS இருக்கு... Google Map-ல செக் பண்ணி பாத்தா தெரிஞ்சிடப் போகுது..' என்று கூறியபடி, தனது மொபைல் ஃபோனை எடுத்து, அதில் கூகிள் வலைப்பக்கத்தை திறந்து, மேப்ஸ் என்ற பாகத்தை க்ளிக் செய்து, அதில் 'பரசுராம ஈசுவர கோவில் - அயன்புரம்' என்று தட்டச்சினாள்.

அதில்...

We could not understand the location பரசுராம ஈசுவர கோவில் - அயன்புரம் என்று வந்தது. :)))

இளந்தென்றல் said...

ஆங்கிலத்தில் Parasurama Eswaran Koil Ayanavaram, என்று தேடினால் ரிசல்ட் கிடைக்கிறது

நாடோடி said...

நாங்க‌ளும் கூகுள் ப‌க்க‌த்தில் தேடிப் பார்க்கும் ஆர்வ‌த்தை கொண்டுவ‌ந்து விட்டீர்க‌ள். அதில் தான் உங்க‌ள் வெற்றி ஹ‌ரீஸ். சீக்கிர‌ம் அடுத்த‌ போஸ்ட் ரெடி ப‌ண்ணுங்க‌ள்.

Janaki. said...

VERY INTERSTING

Unknown said...

Neenga tamilla PhD pannirukingala?yepdi ipdiyellam?!!!

Madhavan Srinivasagopalan said...

எழுத்துநடையும், கதையும் சூப்பர். தொடர்ந்து எழுதவும்...

சைவகொத்துப்பரோட்டா said...

சரியான இடத்துல தொடரும்ன்னு போட்டுட்டீங்களே!!

Viji said...

இதைப் படித்த குணா அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தான்...

////////////////

Intha edathula Santhosh peru thaane varanum???

Plus Eppavum pola super intha vaaramum.

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்

//வங்கமண் டலக்கரையிலே
முருக்குவனத்தி லொருதடாக முண்டு
அதனருகேய ழுகிடாமண் பிடியில்
பரசுரா மனீஸ்வர னடிகிடக்கிறான்
பிரம்ம சித்தனயனாண்ட
புரத்தே//
உங்களுடைய தேடுதல் மிகவும் பிரம்மிக்க வைக்கிறது
நீங்க ஒரு கிரேட் ஹரீஷ்

DREAMER said...

வணக்கம் வேங்கை,
மதன் சார் அவர்களின் 'மனிதனுக்குள்ளே மிருகம்' புத்தகத்தில், மனிதனுக்குள் எந்நேரமும் உள்ளிருக்கும் மிருகம் விழித்துக் கொள்ளும் என்பதற்கு வாழ்ந்து மறைந்த சில கொடீரர்களின் ஆதாரங்களோடு விளக்கியிருப்பார். அந்த நிகழ்வுகள் கதைகளை தாண்டி கற்பனைக்கு அப்பார்ப்பட்டதாக சுவாரஸ்யமாக இருக்கும். அதே போலத்தான், குணாவின் கதாபாத்திரத்தை சந்தர்ப்பவாதியாவும், கொஞ்சம் வில்லத்தனம் கலந்தும் மாற்றவேண்டியிருக்கிறது. உங்கள் ஒரு வார்த்தை விமர்சனத்திற்கு நன்றி..!

வணக்கம் எஸ்.கே.,
ஆறு முறை வாழ்த்திய உங்கள் அன்புக்கு மிக்க நன்றி! சென்னையில் அந்த இடத்திற்கான குறிப்புகளுக்காகத்தான் இந்த பாகம் தாமதமானது. அதை ரசித்து நீங்கள் வாழ்த்தியதும், மனதில் நிறைவு..!

வணக்கம் சித்ரா,
பாராட்டுக்களுக்கு நன்றி!

வணக்கம் காயத்ரி,
தொடர்ந்து வந்து படித்து பாராட்டி வருவதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் அருண்பிரசாத்,
தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

வணக்கம் இளந்தென்றல்,
லிஷாவின் மொபைல் ரிசல்ட்-ஐ தேடும் முன், நீங்களே தேடிப்பார்த்ததற்கு நன்றி ..!

வணக்கம் நாடோடி நண்பரே,
படித்து முடித்த வாசகர்கள் ஒருமுறையாவது, கூகிளில் தேடிப்பார்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதினேன். ஆனால், அப்படி தேடுவார்களா இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. உங்களனைவரின் பதில்களைப் பார்க்கும்போது, பெரும்பாலான அன்பர்கள் தேடிப்பார்த்து என் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள் எனபதில் மகிழ்ச்சிதான்.! அடுத்த பாகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் போட்டுடறேன்.

வணக்கம் ஜனா,
தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!

வணக்கம் Gomy,
ஆஹா, நீங்க கேட்டதே எனக்கு PhD வாங்குனமாதிரி இருக்குங்க..!

வணக்கம் மாதவன்,
எழுத்து நடையையும் கதையையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா நண்பா,
அடுத்த பாகத்துக்காக சில இடங்களுக்கு நேர்ல விசிட் பண்ணி பாத்துட்டு எழுதலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான், அந்த பகுதிகளுக்கு முன்னாடியே தொடரும் போட்டுட்டேன்.

வணக்கம் விஜி,
நல்ல வேளை தவறை சுட்டிக்காட்டிட்டீங்க... ஏன்னு .தெரியல குணாவும் சந்தோஷூம் எனக்கு குழப்பமாவே இருக்கு... இது ரெண்டாவது தடவை இந்த மாதிரி, இவங்க பேரை swap பண்ணி போட்டுட்டேன். சுட்டியதற்கு நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்,
உண்மையிலேயே இந்த கதை எழுதும் போது ஏகப்பட்ட விஷயங்களை தெரிஞ்சிக்க முடியுது. தேடல் இன்னும் நிறைய இருக்குங்க... பாப்போம், இந்த கதைக்கு நல்ல ஆதரவு கிடைச்சதுன்னா, இதுபோன்ற நிறைய கதைகளை எழுதலாம்னு இருக்கேன். தொடர்ந்து படித்து பாராட்டி வருவதற்கு மிக்க நன்றி!

-
DREAMER

Unknown said...

இந்த பாகமும் அசத்தல் ஹரீஷ்..

///இந்த கதைக்கு நல்ல ஆதரவு கிடைச்சதுன்னா, இதுபோன்ற நிறைய கதைகளை எழுதலாம்னு இருக்கேன்.///

கண்டிப்பா.. இவ்வளவு நல்லா கதை எழுதறீங்க.. எங்களோட முழு ஆதரவு உங்களுக்கு இருக்கு..

VampireVaz said...

Great going as usual

DREAMER said...

வணக்கம் பதிவுலகில் பாபு,
உங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க! கண்டிப்பா இதே போன்ற மேலும் வித்தியாசமான நிறைய கதைகளை எழுதுகிறேன்.

வணக்கம் Vaz,
ThanX for regular visit..!

-
DREAMER

சீமான்கனி said...

கதை ரொம்ப அருமையா போகுது!
கூடவே நாமும்...ம்ம்ம்ம்ம்ம்ம்....

Ramesh said...

Payangaram. Unmailaye kenivanam irukkunnu ninakka vachittinga. Arumai

Sakthi Gomathi said...

Please publish the next section ASAP ... :)

Popular Posts