Thursday, November 11, 2010

"கேணிவனம்" - பாகம் 27 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12         பாகம் - 13          பாகம் - 14         பாகம் - 15  
பாகம் - 16        பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
பாகம் - 21          பாகம் - 22        பாகம் - 23          பாகம்-24          பாகம்-25
பாகம் - 26

--------------------------------------------------------------------
பாகம் - 27

12ஆம் நூற்றாண்டில் நடந்தது...

தான் வந்தடைந்திருக்கும் வனப்பிரதேசம் வித்தியாசமாகவிருப்பதை கண்டு சுற்றிலும் தெரியும் வானவனாந்திரங்களை கண்ணிமைக்காமல் தாஸ் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக அமர்ந்திருப்பதைவிட பாதசாரியாய் நடந்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன் எழுந்து நடக்கலானான்.  காற்றில் சந்தனவாசம் கலந்து வந்தது. சுற்றிலும் சந்தன மரங்கள். தான் சந்தனக்காட்டில் நடந்து கொண்டிருப்பதையுணர்ந்தான். தோளில் அவன் மாட்டியிருந்த ஹேண்டிகேமிரா அப்படியே இருந்தது. அதைக் கண்டதும் அதை எடுத்து இயக்கினான். சந்தனக்காட்டை, காட்சிப்பதிவில் கடத்திக் கொண்டான்.

காலம் நடந்தவற்றை மறக்கடிக்கும் அரிய மருந்து... ஆனால், காலம் முந்தி வந்திருக்கும் தாஸூக்கு அம்மருந்து செயலாற்றவில்லை... தனது சிநேகிதன் சந்தோஷூம், காவலர் வாசுவும், உபாத்தியாயர் கணேஷ்ராமும் 21ஆம் நூற்றாண்டில் இறந்துபோனதை அவ்வப்போது நினைகூர்ந்து அதையெண்ணி வருந்தலானான்.

இருப்பினும், தான் வந்தடைந்திருக்கும் பகுதி முற்றிலும் மாறுபட்ட ஒரு விநோத லோகமாக அவனுக்கு புதுவானுபவத்தை கொடுத்துக்கொண்டிருந்தது...

சில காததூரம் நடையாய் நடந்து கடந்து வந்து கொண்டிருந்தான். சூரியன் இருக்கும் திசையை அவ்வப்போது ஊர்ஜிதப்படுத்தியபடி நடக்கலானான். நீண்டதூரம் நடந்துவிட்டபடியால் அவனது நாக்கு நீர் வேண்டி தவித்தது. தூரத்தில் ஓடை ஏதாவது புலப்படுகிறதா என்று தேடியபடியிருக்க,  அந்தரத்தில் கொக்கு இனங்கள் எதிர்ப்புறமாய் பறந்து வருவதை கண்டான். அப்படியென்றால் எதிர்புறமாய் எங்கோ நீர்பிரவாகம் இருப்பது திண்ணம் என்று எண்ணியபடி முன்னேறினான்.

அவன் கணிப்பு உண்மைதான், எதிரில் சற்றே தூரத்தில் அழகிய நீர்பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது... நீரின்றி அமையாது உலகு... என்ற வள்ளுவன் வாக்கை சிலாகித்தபடி அவன் முன்னேறி, அப்பிரவாகத்தில் இறங்கி, குளித்து, களைப்பகற்றி நீருண்டு புத்துணர்ச்சி பெற்றவனாய் எழுந்துவந்தான். யாருக்கு கிடைக்கும் இப்படி தான் வாழுங்காலத்துக்கு 1000 வருடம் பழமையான நீரில் குளிக்கும் பிராப்தம்...

களைப்பகன்று மீண்டும் நடையைத் தொடரவெண்ணிய தாஸூக்கு பயங்கரமாக பசித்தது... புசிக்கவேதாங்கிலும் கிடைக்கிறதாவென்று அங்குமிங்கும் தேடியவனுக்கு தூரத்தில் ஒரு மான் தெரிந்தது...

சௌந்தர்யமான மான்..! இதற்குமுன்பு தனது காலக்கட்டத்தில் கிண்டி பிரதான சாலையில் ராஜ்பவன் கட்டிடத்திற்கருகில் மானொன்று ஓடிப்போனதை வேடிக்கையாய் ஊர்தியில் அமர்ந்தபடி பார்த்து சிலாகித்தது நினைவுக்கு வந்தது... மானை தூரத்திலிருந்தபடி ஹேண்டிகேமிராவில் காட்சிப்பதிவு செய்துக்கொண்டான். அதனிடத்தில் சென்று வாஞ்சையாக அதை தடவிக்கொடுக்க தோன்றவே. அதை சமீபித்தான். ஆனால், அந்த மான் அங்குமிங்கும் ஓடி அவன் கையில் சிக்க மறுத்தது, அதை எப்படியாவது பிடித்துவிடும் வாஞ்சையெழவே, தாஸ் அதை துரத்தி போகலானான். மான் அந்த வனாந்திரத்துக்கு பழக்கப்பட்டதெனவே அது சாமர்த்தியமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து ஓடும் தாஸ், அந்த காட்டுபிரதேசத்தில் கண்மண் தெரியாமல் ஓடினான்.

ஒரு கட்டத்தில் தான் கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருப்பதையுணர்ந்து நிற்க எண்ணியபோது, திடீரென வோரிடத்தில் விழுந்து வழுக்கிக்கொண்டு போனான். அப்படியவன் போய்க்கொண்டிருக்கும் பகுதியானது தாழ்வான சரிவுப்பகுதியென்றறிந்து ஐயமுற்றான். தன் கட்டுப்பாட்டையிழந்து குழைந்திருந்த மண்தரையில் ஊன்றிப்பிடிக்க கைகளை அங்குமிங்கும் காற்றில் வீசிப்பார்த்தான். பலனில்லை, எந்தவொரு காட்டுச்செடியும் அவன் கைக்குள் சிக்கவில்லை... அப்போது காணவெண்ணாத ஒரு காட்சியை அவன் கண்கள் கண்டது... அது... அந்த தாழ்வுப்பகுதி முடியுமிடத்தில், ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு..!

ஐயோ...ஓஓஓஓ.... என்று அவன் பயத்தைக்கூட்டி அலற, உடம்பின் அத்தனை பகுதியும் சில்லிட... அந்த பள்ளத்தில் விழுந்தான்.
 
விழுந்ததும் உடனே தரை தட்டுப்பட்டது. அவன் நினைத்ததுபோல் அதுவொன்றும் பள்ளத்தாக்கல்ல, மிகச்சிறியதொரு சரிவுதான்.

அவன் விழுந்த இடம் ஒரு பூவனம். அவன் இதுவரை நுகர்ந்திராத அரிய நறுமணங்களை கொடுக்கும் மலர்களை கொண்ட பூவனம். இதை பள்ளம் என்று அலறியதையெண்ணி வெட்கினான்.

அந்த பூவனத்தை காட்சிப்பதிவு செய்துக் கொண்டிருந்தான், அப்போது தூரத்தில் ஏதோ ஒரு கோவில் இருப்பது தெரிந்தது. அதை நெருங்கலானான். அந்த கோவில், பூவனத்திற்கு மையத்தில் அமைந்திருந்தது தெரிந்தது.

ஆம்... அவன் எண்ணியது சரிதான். அது... கேணிவனக் கோவில்தான். உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது.

அந்த கோவிலின் அமைதியான சூழலும், அதற்கு காட்டுக்குயில்களின் பின்னனி இசையும் இது சொர்கலோகமோ என்று எண்ணவைத்தது.

21ஆம் நூற்றாண்டில் இதே கோவிலை பாழடைந்த நிலையில் கண்டதை ஒப்பிட்டு பார்த்தான். தான் இதற்கு முன்(?) 21ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலில் தங்கியபோது மேலே கூரைமீது வரைந்திருந்த ஓவியம் இருக்கிறதாவென்று பார்த்தான். அதே ஓவியம், மிகவும் புதிதாக இருந்தது. அந்த ஓவியத்தை தெளிவாக கேமிராவில் பதிவு செய்து கொண்டான். அந்த ஓவியத்தில் அழிந்திருந்த பகுதி இப்போது புதிதாயிருந்ததால், அதில் இருந்த சித்தரின் முகத்தை பார்த்தான். அவர் முகம் மிகவும் சாந்தமாயிருந்தது.

உள்ளே கோவிலுக்குள் பிரம்மதேவனின் கருவறைச்சிலை தேஜஸாகவிருந்தது. தூபதீபங்கள் ஏற்றப்பட்டு மிகவும் பக்திபரவசமாகவிருந்தது.

தனது ஹேண்டிகேமிராவில் கோவிலை சுற்றி சுற்றி முழுவதுமாக பதிவு செய்துக் கொண்டான்.

கோவிலுக்குள் தீபம் எரிகிறதென்றால், யாரோ இக்கோவிலை பூஜித்து போயிருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக மீண்டும் இங்கே வரக்கூடும். கொஞ்சம் இங்கே காத்திருந்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் அந்த கோவில் மண்டபத்தில் அமர்ந்தான்.

மெல்ல தூணில் சாய்ந்தான், அந்த தூபதீபங்களின் நறுமணமும், பூவனத்திலிருந்து வரும் பூக்களின் வாசமும் சேர்ந்து விரைவில் உறங்கிப்போனான்.

.
.
.

மெல்ல தூக்கம் கலைந்தது. ஆனால் கண்விழிக்க மனம் வரவில்லை...! உடம்பு வலியாய் வலித்தது. அவன் மேற்கொண்டது என்ன சாதாரண பிரயாணமா? கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பிரயாணமல்லவா..!

யாரோ தன் தலையை அன்பாக வருடிக்கொடுப்பது தெரிந்தது. அந்த வருடலுக்குப்பின் அவன் புத்துணர்ச்சியாய் உணர்ந்தான்.

யாரது என்று கண்விழித்துப் பார்க்க, தான் ஒரு வயதான தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.

அய்யோ..! என்று பதறியெழுந்தான்.

அந்த வயோதிகர், ஓவியத்தில் இருக்கும் சித்தர்-ன் உருவத்தோடு ஒத்திருந்தார். அவரேதான்..! நேரில் பார்க்க இன்னும் சாந்தமாய் தெரிந்தார்..! முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஒரு சின்னஞ்சிறிய துண்டு மட்டுமே உடுத்தியிருந்தார்.. நெற்றியில் விபூதிக்கீற்றும், நடுவே சந்தனமும் குங்குமும் அச்சுபிசகாமல் வரைந்ததுபோலிருந்தது.

தாஸ் பதறியதைக் கண்டு சித்தர் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்.

'ஏன் தாஸ், இப்படி பதறுகிறாய்..?' என்று சிரித்தார்

'என் பேரு உங்களுக்கெப்படி..?'

'தெரியும்..! சொல்... ஏன் இப்படி பதற்றம்..?' என்றார்.'

'முன்னபின்ன தெரியாத, உங்க மடியில படுத்துட்டேன். மன்னிச்சிக்குங்க..' என்றான்

'குழந்தைபோல் உறங்கிக்கொண்டிருந்த உன்னை, நான்தான், என் மடியில் கிடத்திக்கொண்டேன். யாராயிருந்தால் என்ன, அன்பிருந்தால் யாரும் அன்னையாகலாமில்லையா..? அன்னையாகிவிட்டால், மடியிலென்ன, மனதிலுமிடம் கிடைக்கும்' என்று கூறினார்.

அவர் பேசும் தமிழும், அதிலிருக்கும் கருத்தும் மிகப்பழமையாக அவனுக்கு தோன்றியது.

'இது கேணிவனக்கோவில்தானே..?' என்று சந்தேகத்துடன் தாஸ் கேட்டான்.

'ஹ்ம்ம்...! தெரிந்தே கேட்கும் கேள்வி..?' என்று அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார்.

'நீங்கதான் பிரம்மசித்தரா..?' என்றான்

'சித்தனா..! அது மிகப்பெரிய நிலை, நான் சித்தனல்ல... சித்து பயில்பவன். அவ்வளவுதான்.'

'அப்படின்னா, இந்த கேணிவனத்தை செஞ்சது நீங்கதானா..?' என்று கேட்க, அந்த பெரியவர் அவனை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தார்.

'ஐயா..! நான் இங்க ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். நீங்க சில உண்மைகளை மறைக்காம சொல்லணும்..?'

'சில உண்மைகளென்ன, நான் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசியறியாதவன்.' என்றார்.

உடனே, தாஸ், தன்னுடன் கொண்டுவந்திருந்த ஹேண்டிகேமிராவை எடுத்து இயக்கினான். சித்தர் அந்த கேமிராவை வித்தியாசமாக பார்த்தார். தாஸ் அவரிடம் பேட்டிக்காண தயாரானான்.

'ஐயா உங்க பேரென்ன..?'

'சடகோபன்...'

'இ..இந்த கேணிவனத்தை உருவாக்கினது நீங்கதானா..?'

'வனத்தை நான் உருவாக்கவில்லை..! கேணியை மட்டும்தான் உருவாக்கினேன். காலப்போக்கில் மக்கள் கேணிவனம் என்று தம் வசதிக்கு சேர்த்துப் பேசிகொண்டார்கள்...'

'சரி, கேணியை ஏன் உருவாக்குனீங்க..?'

'உலகில் அமைதியை நிலைநாட்டும் ஒரு சிறு கருவியாக இதை உருவாக்கியுள்ளேன்.'

'இதை எப்படி செஞ்சீங்க..?'

'சொன்னால் சத்தியமாக உனக்கு புரியாதப்பா..?'

'பரவாயில்லை சொல்லுங்களேன்..?'

'இடமில்லாத பாத்திரத்தில் நீரிரைப்பது வீண்...' என்றார்.

'சரி, இந்த கேணியை எப்போ உருவாக்கினீங்க..?' என்றான்.

'சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கினேன்..' என்றார்.

'ஐயா, கொஞ்சம் விளக்கமா இது உருவான கதையை சொல்லுங்களேன்..?' என்று ஆர்வமாய் கேட்டான்.

அந்த சித்தர் மெல்ல கூற ஆரம்பித்தார்...

'ஒருமுறை இதே தென்மண்டலத்தில் வீரமார்த்தாண்டன், ராஜசேகரவர்மன் என்ற இரண்டு சிற்றரசர்களிடையே கடும்போர் எழுந்தது. அதில் ராஜசேகரவர்மன் தோற்றுப் போனான். அவன் படையையும், உடைமைகளையும், இழந்து தவித்தான். அவன் இதே காட்டில் தலைமறைவாய், என் ஆசிரமத்தில் அடைக்கலமாய் தங்க நான் அனுமதித்தேன். தன் நாடும் பதவியும் போனதைக் காட்டிலும், 4000 மனித உயிர்கள் அப்போரில் மாண்டு போனதை எண்ணி அந்த மாமன்னன் வருந்தலானான்.' என்று தொடர்ந்தார்.

'நான் அப்போது மெஞ்ஞான சித்திகளை பயின்று கொண்டிருந்த காலம்,. மானுடத்திற்கு பயனளிக்கக்கூடிய மெஞ்ஞான படைப்புகளை படைக்கும் ஆவல் எண்ணிலிருந்தது. அந்த மாமன்னன், எனக்கு சீடனாய் இருந்து பணிவிடை செய்து கொண்டிருந்தான். அவன் நினைவில் கர்வமில்லை, எண்ணத்தில் எள்ளளவும் களங்கமில்லை..! எனக்கு மிகவும் உண்மையான சீடனாகவே மாறியிருந்தான்.' என்று கூற அவர் கூறுவதனைத்தும், கேமிராவில் பதிவாகிக் கொண்டிருந்தது...

'அவனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ஒருமுறை, என்னிடம், அந்த மாமன்னன், நடந்துமுடிந்த இப்போரை நிறுத்தமுடியுமா..? ஐயா என்று குழந்தையாய் கேட்டான். அப்போதுதான் எனக்கு காலத்துவாரத்தை பற்றிய நினைவு வந்தது.'

'காலத்துவாரம்-னா..?'

'காலத்துவாரமென்பது, என் அய்யன் பிரம்மாவின் கண்கள் ஆகும். இந்த கண்கள் பூமியிலிருப்பதை கண்டுபிடிப்பது சாதாரண விஷயமல்ல..! அதை கண்டுபிடித்து துவாரமமைத்தால், காலப்பயணம் மேற்கொள்ளலாம். அப்படி காலப்பயணம் மேற்கொண்டு போரை நிறுத்துவது சாத்தியமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே செயலில் இறங்கினேன். முதல் காலத்துவாரத்தின் ஓட்டம் இந்த காட்டிலிருப்பதை அரும்பாடுபட்டு கண்டுபிடித்து, இங்கு வந்து அதை உயிர்ப்பித்தேன். பிறகு, கேணியும் கோவிலும் அமைத்தேன்.' என்று கூறிமுடித்தார்.

'அதுக்கப்புறம் அந்த போர்-ஐ நிறுத்துனீங்களா..?' என்று ஆர்வமாக தாஸ் கேட்டான்.

'ராஜசேகர வர்மனை போர் நடப்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கு இந்த கேணிவனம் மூலம் அழைத்து சென்றேன். போர் நடப்பதற்கான காரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்ததால் அதை தடுத்து நிறுத்தும் சாதுர்யத்தை அந்த மாமன்னன் பெற்றிருந்ததால் போர் நிறுத்தப்பட்டது. நாட்டில் அமைதி நிலவியது. 4000 உயிர்கள் தப்பியது. இதுவரை 3 பெரும்போர்களை நிறுத்தியுள்ளேன். இனியும் நிறுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.' என்று கூறிமுடிக்க, இதை தாஸ் ஆச்சர்யமாக கேட்டபடி, தனது ஹேண்டிகேமிராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தான்.

'ஐயா..? எங்க தாத்தா அடிக்கடி ஒண்ணு சொல்லுவாரு... நீங்கதான் ஏதோ காரணத்துக்காக என்னை உங்ககிட்ட வரவச்சீங்கன்னு சொல்லுவாரு. அது உண்மையா..?' என்று கேட்டான்.
 
சித்தர் ஒரு மர்மச்சிரிப்பு சிரித்தபடி 'உன் தாத்தாவா..? ஹாஹ்ஹா... நீ சொன்னது உண்மைதான்' என்றார்.

'எதுக்கு வரவச்சீங்க..?'

'எனக்கு சொந்தமான ஒரு பொருள், உனது நூற்றாண்டில் உள்ளது. அதை கொண்டு வந்து என் நூற்றாண்டில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்'

'என்ன பொருள்..?'

'என் பிரேதம்..!' என்று அவர் கூறியதும் தாஸ் திடுக்கிட்டான்.

'ஐயா..?'

'ஆம், நான் தொண்டைமண்டலத்தில், எனது அய்யன் பிரம்மாவின் கோவிலில் சில காலம் உபாசனையில் இருந்தேன். அங்கே ஒரு சமயத்தில், என்னையே மெய்மறந்து ஜீவசமாதியாகிவிட்டேன். ஆன்மாவிற்கு, இடம் பொருள் பாதகமில்லை..! ஆனால், உடல்..? அதை உறிய இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும். அந்த உடல் 12ஆம் நூற்றாண்டிற்கு சொந்தமானது. அதை 21ஆம் நூற்றாண்டில் விட்டுவைத்தல் நியாயமன்று..! இதை செய்துமுடிக்க, எனக்கு உன் உதவி தேவை...' என்று கூற, தாஸிற்கு விஷயம் புரிந்தது...

அவர் தொடர்ந்தார்...

'இந்த கேணிவனம் ஒருவரை எந்தவொரு காலக்கட்டத்திற்கும் அழைத்து செல்லும் ஒரு அரிய காலயந்திரம்தான். அதற்காக, இயற்கைவிதியை நாம் மீறுதல் கூடாது. ஒரு காலகட்டத்திற்கு உறிய ஒரு பொருளை இன்னொரு காலக்கட்டத்தில் நிரந்தரமாக விட்டுவைத்தல் நல்லதல்ல... அந்த பொருளை அதற்குறிய காலத்தில் கொண்டு சேர்ப்பித்தலே தகும்...' என்றார்.

'ஐயா, 21ஆம் நூற்றாண்டுல உங்க உடம்பு எங்கேயிருக்கு..?' என்று தாஸ் கேட்டான்.

'இதே கேணிவனக்கோவிலில் இருக்கிறது...'

'கோபுரத்துமேலயா..?'

'இல்லை... இதோ இந்த ஓவியத்துக்கு பின்னால், கூரையின்மீது ஒரு ரகசிய அறையுள்ளது' என்று அவர்கள் அமர்ந்திருக்கும் மண்டபத்தின் மேலிருக்கும் ஓவியத்தை சுட்டிக்காட்டினார்.

'இதற்குள் எனது பூதவுடல் இருக்கிறது. அதை எடுத்து, இந்த கேணியில், நான் சொல்லும் காலத்திற்கு வந்து சேரும்படி போட்டுவிடு... இந்த உதவியை நீ எனக்கு செய்வாயா..?' என்று கூற, தாஸ் மிகவும் யோசித்தான்.

தாஸ் தயக்கத்துடன், 'ஐயா..? கண்டிப்பா செய்றேன்..! ஆனா, எனக்கு பதிலுக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்..' என்றான்.

அவர் சிரித்தபடி, 'ஹ்ம்ம்..! 21ஆம் நூற்றாண்டுக்காரனல்லவா..? பரவாய்யில்லை..! இதை நீ செய்துமுடிக்க நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் சொல்..?' என்று கேட்டார்.

'என் நண்பர்கள் சில பேர் இந்த கேணிவனக் கோவிலை கண்டுபிடிக்க வரும்போது இறந்துட்டாங்க... அவங்களை எப்படியாவது மறுபடியும் நான் சாகவிடாம காப்பாத்தனும், அதுக்கு..! நீங்க எனக்கு உதவி செய்யணும்' என்று கேட்டான்.

சித்தர் மறுத்தார்.

'இல்லை..! இது தவறு... அவர்கள் பகைமையில் சண்டையிட்டு இறந்தவர்கள். அவர்களை காப்பாற்றுவதும் இயற்கைக்கு புறம்பானது..' என்று சற்றே கோபப்பட்டார்.

'உயிரை காப்பாதனும், அமைதிய நிலைநாட்டனும்னுதானே கேணிவனத்தை படைச்சியிருக்கிறதா சொன்னீங்க..'

'ஆம்..?'

'நானும் எனது நண்பர்களும், இந்த கேணிவனக் கோவிலுக்கு வரும்போதுதான், பேராசை, பொறாமை சண்டை இதெல்லாம் வந்தது. அதுலதான் அவங்க இறந்தும் போனாங்க... இந்த கேணிவனம்-ங்கிற கோவிலே இருந்தில்லன்னா, நாங்கள்லாம் வந்திருக்கவே மாட்டோம், அவங்களும் சண்டை போட்டு இறந்திருக்கவே மாட்டாங்களே..! இதுவும் ஒரு போர்-தானே. இந்த போரை நிறுத்தி அவங்களுக்கு உயிர் கொடுக்கிறது ஒண்ணும் தப்பில்லியே ஐயா..?' என்று கூற, அவர் யோசிக்க ஆரம்பித்தார். ஒரு நீண்ட சிந்தனைக்கு பிறகு

'ஆம்..! இது என் தவறுதான். அவர்கள் உயிரிழப்பை கண்டிப்பாக ஈடுகட்ட வேண்டும்..' என்று கூறி தாஸை சற்று நேரம் உற்று நோக்கியபடி

'உன் குழுவில் சண்டைக்கு காரணமான பகைவனைச் சொல், அவனை தவிர மற்ற அனைவரையும் நான் உயிருடன் எழுப்பும்படி திட்டம் சொல்கிறேன்.' என்றார்

'இல்ல ஐயா..! வேண்டாம், இறந்தவங்க எல்லாருக்கும் உயிர் கொடுங்க... அதுல எதுக்கு இந்த வஞ்சகம்..' என்று கூற, அந்த சித்தர் சிரித்தார்.

'நீ கொஞ்சமும் மாறவில்லை... அப்படியே இருக்கிறாய்..' என்று சிரிக்க, தாஸூக்கு ஒன்றும் புரியவில்லை..!

'உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா..?' என்று கேட்க...

'முன்பே என்றால், மிகவும் முன்பிலிருந்தே தெரியும்...'

'எப்போத்திலருந்து..?'

'உனது போன ஜென்மத்திலிருந்து..' என்று கூறியதும், தாஸ் திடுக்குற்றான்.

'என்னை போன ஜென்மத்திலருந்தே தெரியுமா..? நான் யாரு..?'

'உனக்காகத்தானே நான் இந்த கேணிவனத்தை உருவாக்கிக் கொடுத்தேன்...' என்றதும் தாஸ் குழம்பினான்.

'அப்படின்னா..?'

'ஆம், நீதான் மாமன்னன் ராஜசேகரவர்மன்...' என்று அந்த சித்தர் கூறிய உண்மையை கேட்ட தாஸ் உடம்பில், (அந்த நூற்றாண்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத) மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.

(தொடரும்...)


Signature

36 comments:

Abbas said...

Excellent Harish !!

Unknown said...

அருமை!! அருமை!!..

Mohan said...

Very interesting...Waiting for next part.

Chitra said...

very nice. :-)

Ramesh said...

அருமை ஹரீஷ்.. ஆனா ரொம்ப சிரமப்பட்டு அந்த காலத்து தமிழ்ல எழுதனும்னு நடுவுல நடுவுல ட்ரை பண்ணியிருக்கீங்க.. ஆனா அது ஒட்டலை இயல்புத்தன்மையைக் கொஞ்சம் குறைக்குது..

தினேஷ்குமார் said...

சந்தனக்காடும்
சாந்தமும்கூடே
சிந்திக்கவைக்கும்
சந்தித்த உணர்வு
நித்திரைதானோ
சொப்பனமில்லா
உள்ளுனரும்
உணர்வுகள்.............

http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html

Madhavan Srinivasagopalan said...

கிளாசிக் நண்பரே.. நல்ல கற்பனை..
அனா, 'போன ஜென்மம்' சற்றி இடிக்கிறது.. அதெப்படி அடுத்தடுத்த ரெண்டு ஜென்மங்கள் நடைபெற 1000 வருஷங்களா ?

பூபேஷ் பாலன் said...

குழப்பங்கள் பல தோன்றினாலும் கதை மிகவும் விறுவிறுப்பாகவே சென்று கொண்டு இருக்கிறது. ஒரு சின்ன சந்தேகம், சித்தர் 21-ஆம் நூறாண்டுக்கு வந்து அவர் உடலை அவரே எடுத்துக்கொண்டு போகலாமே?

பிரபல பதிவர் said...

super

கவி அழகன் said...

சுப்பரா இருக்கு நல்ல திருப்தி

Gayathri said...

என்னமோ எனக்கு இவ்ளோ சந்தோஷம் இப்போ படிச்சதுலேந்து..விட்டலாச்சாரியார் படம் பார்த்த பீல்..சுப்பர்..சீக்ரம் அடுத்த பாகம் போடுங்க ப்ரோ

எஸ்.கே said...

சூப்பர்! ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க! ரொம்ப மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!!

க ரா said...

செமைய கொண்டு போறீங்க ஹரிஷ் :)

Viji said...

Hareesh
Purinjichiduchu ennaku.Supera kondu poreenga.Athuvum intha athiyayathula thooya tamil veraya,kalakareenga.

dineshar said...

மிகவும் அருமை அண்ணா. கதையை படிக்கும்பொழுது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.

Cinema Paiyyan said...

story kalakkal..!

Anisha Yunus said...

ஹரீஷ்ண்ணா,

அருமையா கொண்டு போயிருக்கீங்க. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். தாஸ்தான் ராஜசேகரவர்மன்னா, டைம் டிராவல் செஞ்சு அந்த நூற்றாண்டுக்கு வர்றப்ப அந்த மன்னனாத்தானே இருக்கணும்?? எப்படி 21ம் நூற்றாண்டு ஆளாகவே அப்புறம் வர்றார்?

உடம்பை குறிக்கும்போது சில இடங்களில், “உறிய”ன்னு எழுதியிருக்கீங்க. அது வேணும்னே நீங்க விட்டிருக்கீங்களான்னு தெரியலை. “உரிய”தானே சரி?

அதே போல எனது அய்யன், எனது அப்பன் அப்படின்னு சொல்றப்ப, ’பிரம்மா’ன்னு சொல்லாம ‘பிரம்மன்’ அப்படின்னு சொன்னாத்தானே சரி, இல்லியா? ஏதோ எனக்கு தெரிஞ்சது.. :)

மற்றபடி செம interestingஆக போயிகிட்டு இருக்குண்ணா. வாழ்த்துக்கள். :)

சிவகுமார் said...

Super wait 28!

Anonymous said...

அற்புதம்...
ரொம்ப அழகா கொஞ்சமும் சலிப்பு ஏற்படாத வகையில அழகா சொல்லி இருக்கீங்க.
எப்படி இப்படி ஒரு கரு உங்க சிந்தையில சிக்கிச்சு?

நீண்ட நாளாவே உங்க தொடர்களை படித்து வருகிறேன். இன்றுதான் முதல் முறையா கருத்து பதிகிறேன்.

இந்த பகுதியில வருகிற மறுஜென்மம் பற்றி அன்னு மாதிரி எனக்கும் சந்தேகம் இருக்கு. நீங்க தெளிவு தருவீங்கனு எதிர்பார்க்கிறேன்.

பாராட்டுகள்.. உங்க கடுமையான உழைப்புக்கு.

- விலானி உதய் ராஜ், மலேசியா.

Unknown said...

Interesting!!! Namma professor yendha kaalathukku ponaro theriyaliye?!!

Anonymous said...

kadhai Romba nalla irukku hareesh...neenga ellarum evalo talented illaya...evalo azhaga ezhudhuringa...really its god's giftnnu dhaan sollanum...Keep up the gud work hareesh.
-akshu

Raghu said...

இந்த‌ ப‌திவில்‌ நீங்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கும் வார்த்தைக‌ளைப் பார்க்கும்போதே தெரியுது ஹ‌ரீஷ், நீங்க‌ எந்த‌ள‌வுக்கு மென‌க்கெட்டிருக்கீங்க‌ன்னு...ஹாட்ஸ் ஆஃப் டூ யுவ‌ர் ஹார்ட் வொர்க்

ஒரு சின்ன‌ சஜஷ‌ன்..சித்த‌ர் பேசுவ‌தை ம‌ட்டும் கொஞ்ச‌ம் க‌டின‌ த‌மிழில் கொடுத்து, வாசிப்ப‌வ‌ர்க‌ளை கொஞ்ச‌ம் யோசிக்க‌வைத்திருக்க‌லாம், இ.செள‌. க‌தைக‌ளில் வ‌ரும் பாட‌ல்க‌ளைப்போல‌.

ராஜ‌சேக‌ர‌வ‌ர்ம‌ன் ட்விஸ்ட் செம்ம்ம‌...ச‌த்திய‌மா எதிர்பார்க்க‌ல‌!

VampireVaz said...

Miga arumaiyana tamil nadai..

சைவகொத்துப்பரோட்டா said...

சபாஷ் ஹரீஷ்! 12 ஆம் நூற்றாண்டுக்கே நானும் போன மாதிரி இருக்கு, உங்கள் எழுத்து நடை அபாரம்.
வாழ்த்துக்கள்.

DREAMER said...

வணக்கம் அப்பாஸ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் பதிவுலகில் பாபு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் மோகன்,
வாழ்த்துக்கு நன்றி! அடுத்த பாகம் திங்களன்று போட்டுவிடுகிறேன்.

வணக்கம் சித்ரா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
இதுபற்றி நாம் சேட்டிங்-ல் பேசியதில் மகிழ்ச்சி.

வணக்கம் தினேஷ்குமார்,
கவிதை நடையில் பாராட்டு மிக்க அருமை நண்பரே..! நன்றி!

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்கள் சந்தேகத்தை வரவிருக்கும் பாகங்களில் கண்டிப்பாக தீர்த்து வைக்கிறேன்.

வணக்கம் Bhupesh Balan,
வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்கள் சந்தேகத்தையும் வரவிருக்கும் பாகங்களில் கண்டிப்பாக தீர்த்து வைக்கிறேன்.

வ ணக்கம் சிவகாசி மாப்பிள்ளை,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் யாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் காயத்ரி,
விட்டலாச்சார்யா படம் பாத்தா மாதிரியிருந்ததா..! மிக்க சந்தோஷம். அடுத்த பாகம் திங்களன்று மாலை போட்டுவிடுறேன்.

வணக்கம் எஸ்.கே.,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் இராமசாமி கண்ணன்,
ரொம்ப நன்றிங்க...

வணக்கம் விஜி,
ஹப்பா..! உங்களுக்கு புரிந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி..!

வணக்கம் தினேஷா,
/இனம் புரியாத மகிழ்ச்சி/ வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் கோபி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

DREAMER said...

வணக்கம் அன்னு,
அது 'உறிய'தான், மாற்றிவிடுகிறேன். வழக்கமாக 3 அல்லது 4 முறை spellcheck பாப்பேன். ஆனா, இப்போ அலுவல் சற்று அதிகமா இருக்கிறதால, இந்த பாகத்தை ரொம்பவும் சிரமத்துடன்தான் எழுத முடிஞ்சுது. அதான் இந்த எழுத்துப்பிழைகள். சரி, உங்களைப் போன்ற சகோதரிகள் எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்ட இருக்கும்போது, இனி எனக்கென்ன கவலை..!
கதைகளைக்குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு வரவிருக்கும் பாகங்களில் கண்டிப்பாக விளக்கமளிக்கிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் சிவகுமார்,
28ஆம் பாகம் திங்களனறு போட்டுவிடுகிறேன்.

DREAMER said...

வணக்கம் விலானி உதய்ராஜ்,
//நீண்ட நாளாவே உங்க தொடர்களை படித்து வருகிறேன். இன்றுதான் முதல் முறையா கருத்து பதிகிறேன்.//
உலகளாவிலும், தமிழ் நண்பர்கள் இக்கதையை படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி! 3 மாதங்களுக்கு முன்னால், கோடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது மலைப்பாதையில் பேருந்து ஏறும் போது, மனம் மிகவும் குதூகலித்திருந்தது. அப்போது, தோன்றிய கதையிது.
கதையை குறித்த உங்களது சந்தேகங்களையும், வரவிருக்கும் பாகங்களில் கண்டிப்பாக தீர்த்து வைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள். மிக்க நன்றி!

வணக்கம் Gomy,
நம்ம ப்ரொஃபஸர் Lost in Time..!

வணக்கம் Akshu,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க..!

வணக்கம் ரகு,
மெனக்கெட்டது உண்மைதாங்க... இதற்காக, மதனகாமராஜன் கதைகள், பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் மாதிரி சில புத்தகங்களை படிச்சிப் பார்த்து எழுதினேன். ஆனால், பயிற்சியை மறக்கடித்து, அந்த கதைகள், அக்காலத்திலேயே அவ்வளவு சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறார்கள்.
சித்தர்பாடல்கள் போல் எழுதியிருக்கலாம். ஆனால், அவர்கள் பேசும்போதும் அப்படியே பேசினால், கஷ்டமாக போய்விடும். இ.சௌ-கூட, சித்தர் கான்வர்சேஷன்களில் ஈடுபடும்போது, புரியும் மொழியில் பேசுவது போல்தான் பெரும்பாலும் எழுதியிருப்பார். ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஒரு சித்தர் பாடல் இனி வரும் பாகங்களில் ஓரிடத்தில் வரும்.

வணக்கம் Vampire Vaz,
தமிழ்நடையை பாராட்டியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
உங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!

-
DREAMER

பாலாஜி சங்கர் said...

nice

ஷக்தி said...

இன்றுதான் கதையை ஆரம்பத்தில் இருந்து படித்தேன்.ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யமு்ம் சேர்ந்தே பயணிக்கிறது.தொடர வாழ்த்துக்கள்.

DREAMER said...

வணக்கம் பாலாஜி சங்கர்,
வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் ஷக்தி,
கேணிவனத்திற்கு புதுப்பயணியாய் வந்து எங்களுடன் பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! தொடர்ந்து பயணிப்போம்.

-
DREAMER

BalHanuman said...

அட்டகாசமாக செல்கிறது கதை. தேர்ந்த நடை. வாழ்த்துக்கள் ஹரீஷ்.

--ஸ்ரீனிவாசன், U.S.A

DREAMER said...

வணக்கம் ஸ்ரீநிவாசன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

Anonymous said...

அருமை..அருமை..மிகவும் அருமை நண்பா..

DREAMER said...

வணக்கம் படைப்பாளி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே..!

-
DREAMER

குறையொன்றுமில்லை. said...

ஆரம்பத்திலிருந்து கேணிவனம் படித்து வருகிரேன்.
மிகவும் நன்றாக இருக்கிரது.

DREAMER said...

வணக்கம் லஷ்மி மேடம்,
'கேணிவனம்' குறித்து தங்கள் வருகையும் வாழ்த்தையும் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்..!

-
DREAMER

Popular Posts