Monday, April 09, 2012

அபிராமி தியேட்டிரில் அம்புலி 50வது நாள்

அம்புலியின் 50வது நாளன்று ஆஃபீசில் கேக் வெட்டி கொண்டாடினோம்... 3D படம் என்பதால் கேமிராமேன் சதீஷ்.Gயைத்தான் கேக் வெட்ட சொன்னோம்... வெட்டினார்... அன்று காலையில் USலிருந்து வந்திருந்த எனது நண்பர் திரு.வசந்தராமன் அவர்களது பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்திக்கு குழுவாய் சென்று அவர்களிடம் ஆசி பெற்று வந்தோம்.

மனதிற்கினிமையாய் மாலை திருப்போரூர் முருகர் கோவிலுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தபோது... உதவி இயக்குநர்கள் அனைவரும் குழுவாக போய் படத்தை பார்க்கலாம் என்று மாற்று யோசனை சொன்னார்கள். சரி 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று எஸ்கேப் தியேட்டரில்  4 மணியாட்டம் சென்று படத்தை பார்க்கலாம் என்று முடிவெடுத்து புக் செய்ய நினைத்தோம் 'ஹவுஸ் ஃபுல்' என்று காட்டியது.. சந்தோஷமாய் இருந்தது... அடுத்த அபிராமி தியேட்டிரில் 'P'ரோவில்தான் டிக்கெட் கிடைத்தது. 10 டிக்கட் பதிவு செய்துக்கொண்டு கிளம்பினோம்.

படத்தை 50ஆவது நாள்தான் பார்ப்பேன் என்று 'வேணி' என்ற எங்கள் குழுவின் தோழி ஒருவர் கூறியிருந்தார். ரிஸ்க் வேண்டாம் பார்த்துவிடுங்கள் என்று நாங்கள் முதல் வாரம் அழைத்ததற்கு... 'நிச்சயம் 50ஆவது நாள் படம் ஓடும் அப்போது பார்க்கிறேன்' என்று திண்ணமாக கூறியிருந்தார்... அவர் வாய் முகூர்த்தம் பலித்ததால், மறக்காமல் அவரையும் அழைத்திருந்தோம்.
அங்கும் ஹவுஸ் ஃபுல்லாக காட்சி துவங்கியது... கைதட்டல்கள்... ஜாலி கிண்டல்கள் என்று மக்கள் சந்தோஷமாக படம் பார்த்தது மனதிற்கு தெம்பாய் இருந்தது...

படம் முடிந்ததும் ரோபோ அபிராமி தியேட்டரின் ஹால் சூப்பர்வைஸர், ஹால் செக்யூரிட்டி, டிக்கெட் கிழிப்பவர், அரங்கில் டார்ச் அடித்து சீட் காட்டுபவர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் நண்பர்கள் என்று அனைவருடனும் நின்று குழுவாய் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.
ஹால் சூப்பர்வைஸருடன் பேசுகையில், 'நீங்கள் நிச்சயம் 100வது நாளுக்கும் இங்கேயே வரவேண்டும் அதுவே என் விருப்பம்' என்றார்... அவர் வாய் முகூர்த்தமும் பலிக்க வேண்டும். மேலும் அரங்கை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஹவுஸ்கீப்பிங் நண்பர்களுடன் வினவினோம்... அவர்களும் '50வது நாள் உங்கள் படம் ஹவுஸ்ஃபுல் ஆகுது.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன சார் பப்ளிக் ரெஸ்பான்ஸ் வேணும்... நாங்கதான் தினம் பாக்குறோமே கூட்டம் உங்க படத்துக்கு நல்லா வந்துட்டிருக்கு... இப்போ லீவுதானே... இன்னும் வருவாங்க பாருங்க...' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


Signature

11 comments:

Unknown said...

romba santhosama irukku...

Raghu said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு, வாழ்த்துக்கள் ஹரிஷ் :) விடுமுறையில் குழந்தைகள் கூட்டம் இன்னும் அதிகமாகும் என்று நம்புகிறேன்.

சொன்னது போல் ஐம்பது நாள் ஆகிடுச்சு. நெக்ஸ்ட், நெக்ஸ்ட், நெக்ஸ்ட்.....;)

Cable சங்கர் said...

vaazththukkal.. harish..

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள் ஹரீஷ் மிக்க சந்தோஷம்

Unknown said...

வாழ்த்துகள் ஹரீஷ். அம்புலி ரிலீஸ் ஆன துவக்கத்தில் உங்கள் வெப்சைட்டில் அவ்வப்போது தகவல்களை தந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

எல்லாரும் எப்ப க்ளீன் ஷேவ் பண்ணப்போறீங்க :)))

Madhavan Srinivasagopalan said...

Good job..

Greetings..

DREAMER said...

வணக்கம் நந்தகோபால்,
மகிழ்ச்சியை எங்களோடு சேர்ந்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..!

வணக்கம் ரகு,
நெக்ஸ்ட், நெக்ஸ்ட்-னுதான் எங்கள் இதயத்துடிப்பும் இயங்கிட்டிருக்கு... விரைவில் நெக்ஸ்ட் நியூஸ் தொலைபேசியில் முதலில் உங்களுடன் பகிர்கிறேன்...

DREAMER said...

வணக்கம் கேபிள்ஜி,
ஆரம்பம் முதல் உங்கள் அன்பும் வாழ்த்தும் கிட்டிவருவதில் மகிழ்ச்சியடைகிறேன்... மிக்க நன்றி..!

வணக்கம் தினேஷ்குமார்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே...

DREAMER said...

வணக்கம் சிவக்குமார்,
சுயவிளம்பரமாய் போய்விடக்கூடாது என்று துவக்கத்தில் தயங்கியது உண்மைதான்... பிறகு ரிசல்ட் பாஸிட்டிவ் என்று தெரிந்ததும் பகிர ஆரம்பித்தேன். 51வது நாள் காலையிலேயே முதல் வேலையாய் ஷேவ் செய்து முடித்தாயிற்று...

வணக்கம் மாதவன்,
Thanks a lot for your support and wishes...

Unknown said...

thanks for mentioning Hareesh ... neenga ellarum function kku vandhirundhadhu engalukku migavum magizhchi .... :) andha 50th day unga ellar koodavum padam pArkkum baakiyam kidaikka villai endrAlum, engal anaivarukkum ungal dayavil andru padam pArkka vaaippu kidaithamaikku parama sandhosham :) thangalukku nandriyum kooda ..... Bala Abirami yil housefull show pArtha magizchi engalukkum kittiyadhu ....

DREAMER said...

வணக்கம் Bigle Ji,
நான்தான் உங்களுக்கு நன்றிசொல்லவேண்டும் for inviting us for the great occassion, so that we got blessings on the 50th Day...

Popular Posts