டெக்டானிக் தட்டுக்கள், கண்டங்களை ஒன்றாய் இணைத்திருந்த காலம் தொட்டு மனிதன் நடந்து நடந்து, இந்த நடைபயண கலாச்சாரம் நம் பரிணாமத்தின் முக்கிய அங்கமாய் இருந்து வந்துள்ளது...
ஆனால் இன்றோ, பக்கத்து கடைக்கு சென்று நூடுல்ஸ் வாங்குவதாய் இருந்தாலும், பைக்கிலோ அல்லது காரிலோ சென்று வாங்கி வருமளவிற்கு விஞ்ஞானம் உச்சம் கண்டுள்ளது. விளைவு..? நடப்பதற்கும் ஒரு நேரம் ஒதுக்கி, நடப்பது போல் செயற்கையாய் பரபரப்படைந்தபடி நடக்கிறோம்.
சென்ற வாரம் ஞாயிறன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும்போது வழியெங்கிலும் இடதுமபக்கமாய் மஞ்சள் உடையணிந்த பாதசாரி பக்தர்கள் கூட்டம் பங்குனி உத்திரத்தன்று திருத்தணிகை கோவிலில் இருப்பதற்காய் நடந்துக் கொண்டிருந்ததை கண்டேன்.
முன்பெல்லாம், இது போன்ற நடைபயணம் தேவைதானா என்று நான் எண்ணியதுண்டு... ஆனால், அதிலிருக்கும் ஒரு மன ரீதியான ரிஃப்ரெஷ்மெண்ட்-ஐ பற்றி அறிந்துக் கொள்ள சமீபத்தில் நான் படித்த இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் 'என் யாத்திரை அனுபவங்கள்' என்ற புத்தகத்தகம் வழிவகுத்தது...
நமது இயந்திர வாழ்விலிருந்து நம்மை நாமே விடுவித்து மீண்டும் புதிய தெம்புடன் இணைத்துக் கொள்ள இதுபோன்ற நடைபயணங்கள் வழிவகுக்கும் என்று அவரது அனுபவ எழுத்து மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது.
யாத்திரை எம்மாதிரியான உணர்வை ஏற்படுத்தும், எப்போது சோர்வு தட்டும், எப்போது சொர்க்கம் கிட்டும், அந்நியர் நட்பின் மேன்மைகள். பயணத்தின்போது உடல்ரீதியான விளைவுகள், இதனால் வாழ்வில் ஏற்படக்கூடிய மனரீதியான மாறுதல்கள்... நம்பிக்கைகள்... வழியில் ஏற்படக்கூடிய எதிர்பாரா திருப்பங்களின் த்ரில்... இப்படி வெறும் நடைபயண அனுபவத்தின் அற்புதத்தை, ஆன்மீக ரீதியாய் சொல்லி உணர வைக்கிறார் இந்திராஜி.
அவர் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல் சில மனிதநேய காட்சிகளை அந்த பங்குனி உத்திர பக்தர்களின் பயணத்தில் பார்க்க முடிந்தது...
அந்த பக்தர்கள் நடக்கும் பாதையில் வெயிலின் வீச்சு அதிகம் இருப்பதால் சிலர் தத்தம் வாசலில் (பக்தர்கள் கடந்து போகும் தடத்தில்) நிழலுக்காக பந்தல் போட்டிருந்தனர்.. சிலர் வீட்டு வாசலில் இலவச மோர் மற்றும் ஐஸ் வாட்டர் விநியோகம் செய்தனர். சில கடைவியாரிகள் வாழைப்பழத்தை விநியோகம் செய்தனர். இதற்கெல்லாம் வசதியில்லா சிறுவீட்டவர்களும் தன் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கடந்து செல்லும் பாதசாரிகளின் பாதத்தை குளிர்வித்தனர்... இப்படி அவரவர் வசதிக்கேற்ப மனதிநேயத்தை கடம்பிடிப்பதை பார்க்க அந்த வெயிலிலும் குளிர்ச்சியாய் உணர முடிந்தது...
இது அந்த காலத்து ஷேத்திராடனம் போல்தான் என்றாலும் கோவிலுக்குத்தான் போக வேண்டுமென்றில்லை... அவரவர்க்கு சற்றே தூரத்திலிருக்கும் கேளிக்கை இடத்திற்கும் நடைபயணமாய் நண்பரகளுடன் சென்று வந்தால் நலம்.
வருடம் ஒருமுறையாவது, கேமிரா துணையுடன் நண்பர்களின் குழுமத்தோடு சேர்ந்து நல்ல அரட்டை அடித்துக் கொண்டு Bag-Pack மாட்டிக்கொண்டு வழியில் தோன்றும் இடத்தில் தங்கிக் கொண்டு மீண்டும் எழுந்து நடந்து போய்க்கொண்டேயிருந்து இலக்கை அடைவது நிச்சயம் நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும் என்றே தோன்றுகிறது...
சமீபத்தில் அதிகமாகி வரும் பைக் ட்ரிப்... ஜீப் ட்ரெக்கிங் என்று அவரவர் வசதிக்கேற்ப சில பயணங்களை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்... இதே போல் நிச்சயம் எதிர்காலத்தில் எல்லா வர்க்கத்தினரும் மேற்கொள்ளக் கூடிய 'வாக் ட்ரிப்'கள் துவங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.. என் நண்பர்களிடமும் இது பற்றி விசாரிக்கவிருக்கிறேன்...
மேலும் விவரங்களுக்கு இதுதான் அந்த புத்தகத்தகம்
பெயர் : என் யாத்திரை அனுபவங்கள்
எழுத்தாளர் | : | இந்திரா சௌந்தர்ராஜன் |
பதிப்பகம் | : | திருமகள் நிலையம் |
ஒரு குட்டி கோ-இன்சிடென்ஸ்... இந்த புத்தகத்தை நெகிழ்ச்சியுடன் படித்து முடித்துவிட்டு டிவியை ஆன் செய்தால் அதில் சிவாஜி சார்.. 'ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..' என்று பாடுகிறார்... நடந்துக் கொண்டே...
13 comments:
நீங்கள் சொல்வது சரிதான்...இப்போதெல்லாம் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே சரி என்றாகி விட்டது....அப்புறம் நம்ம வைகோ கூட அடிக்கடி நடைபயணம் போறது அவர உற்சாக படுத்திக்க தான் ன்னு நினைக்கிறேன்...
நாடோடி பயணம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் என்பது உண்மைதான்,,,
பக்கத்து கடைக்கு பைக் எடுத்து போகும் புண்ணியவான்கள் இதை கண்டிப்பா படிக்க வேண்டும்
அம்புலி படம் அருமை நண்பா ...
அம்புலி படம் அருமை நண்பா ...
வணக்கம் கோவை நண்பரே,
வருகைக்கு நன்றி..! அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் நடைபயணத்தில் உலக சமாதானம் உள்ளிட்ட பெரிய பெரிய நோக்கம் இருக்கும்... நமக்கு அதெல்லாம் வேண்டாங்க... சும்மா ஜாலியா ஃப்ரெண்ட்சோட போயிட்டு வரலாம்..! இதனால அவரும் உற்சாகமடைஞ்சா... அடைஞ்சிட்டு போகட்டும்...
வணக்கம் ராஜா,
பைக் புண்ணியவான்களும் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய பயணம்தான். என் நண்பர்களே பலர் இது போல் உள்ளனர். அவர்களிடமும் வாக் ட்ரிப்-க்கு வரும்படி கேட்க போகிறேன்.
'அம்புலி 3D' படம் உங்களுக்கும் பிடித்துப் போனதில் மிக்க மகிழ்ச்சி..! இன்று 49ஆவது நாள்...
எங்கேனும் செல்லவேண்டும் என்று நானும் மூன்றரை வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் ஹரிஷ். வொர்க் பிரஷர், வீடு, அப்பா அம்மா, நண்பர்கள் என்று நிறைய ப்ரையாரிட்டிஸ் இருப்பதால், சுய விருப்பத்தை இன்னும் தள்ளி போட்டு கொண்டிருக்கிறேன். ஒரே அலைவரிசை கொண்ட நண்பர்கள் எனக்கு மிக குறைவு என்பதால், ஒரு தனிமையான டூர்தான் என்னுடைய ப்ரிஃபரன்ஸ்
நீங்கள் சொல்வது போல் ஒரு தனிமையான பயணம் மேற்கொள்ள எனக்கும் எண்ணம்தான்... அதன் சின்னதொரு சாம்பிளை நான் சமீபத்தில் ருசித்திருக்கிறேன் என்பதால் முழுப்பயணத்திற்கு இன்னும் வெயிட்டிங்... அந்த சின்ன சாம்பிள் அனுபவங்களை பற்றியும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன்... ஆனால் அந்த பதிவை நான் எழுதிய மோட்டிவ் வேறு... அதையும் விரைவில் பகிர்கிறேன்.
நமது மூதாதையர்கள் அக்காலத்தில் செய்த செயல்கள் பெரும்பாலானவற்றில் காரணம் இருக்கும். ஏதாவது வகையில், நம் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கும்.. அதனை சரியாகச் சொல்லி புரிய வைக்காததால் நாம் பலவற்றை நம் வாழ்வில் இழந்து வருகிறோம்.
This is one among them.
வணக்கம் மாதவன்,
சரியாக சொன்னீர்கள்... அக்காலத்தில் புரிந்த எல்லாவற்றையும் இன்று செய்வது ஃபேஷனாகி வருகிறது... அதை அப்படியே தொடர்ந்து செய்துவந்திருந்தால் இடைவெளி இல்லாமலிருந்திருக்கும்... எல்லாவற்றுக்கும் நேரம் வர வேண்டும் என்று சொல்வார்கள் அது இதுதானோ..!
உண்மைதான் ஹரீஷ். பணிக்காக பல நாடுகள் பறந்து திரிந்தாலும் ஊரில் வந்து ஓய்வாக இருக்கும் விடுமுறைக் காலங்களில் திருச்செந்தூர் மற்றும் பல திருக்கோயில்களுக்கு செல்லும் பாதயாத்திரைப் பயணங்களே உள்ளத்திற்கும், உடலுக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஒருங்கே தருவதாக உள்ளன என்பது என் அனுபவத்தில் நான் உணர்ந்தவை.
வணக்கம் ராஜா சார்,
நீண்ட நாளுக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திப்பநு தெம்பாக உள்ளது... உங்களுக்கு ஏற்கனவே நடைபயண அனுபவம் இருப்பது மகி்ழ்ச்சி..!
Post a Comment