அம்புலு... (எழுத்துப்பிழையல்ல..)
அம்புலி வெளியாகி 48ஆம் நாளான இன்று, ஒரு குட்டி நற்செய்தி... 'அம்புலி' படம் தெலுங்கு பேசவிருக்கிறது... இக்கோடை விடுமுறையில் தெலுங்கு தேசத்தில் அம்புலியை டப் செய்து வெளியிடவிருக்கிறோம். டப்பிங் பணிகள் இன்னும் சில தினங்களில் துவங்குகிறது. படத்திற்கு தெலுங்கு டைட்டில் அம்மொழியில் ஸ்க்ரிப்ட் எழுதுபவர்களிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்... இருந்தாலும் சும்மா நம்ம அஸிஸ்டெண்ட்-களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டதற்கு ஒரே கோரஸாய்... இப்பத்தியின் தலைப்பைத்தான் சொன்னர்கள்... அதென்ன? தெலுங்கு என்றாலே 'லு' சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத விதி (தப்பாக) பரவிவிட்டது... அப்படியென்றால் கீழ்கண்ட ஆங்கிலப்படங்களுக்கு தெலுங்கில் என்ன டைட்டில் வரும்..? ஒரு சின்ன கற்பனை...
- SUCKER PUNCH : சக்கர் பஞ்சுலு
- KUNG FU PANDA : குங்ஃபூ பேண்டாலு
- DARK KNIGHT : டார்க் நைட்டுலு
இது போன்ற எழுதப்படா விதிகளில் "அம்புலி"க்கு மற்ற மொழிகளில் டைட்டில் வைத்தால் எப்படி வரும்...
ஆங்கிலத்தில் 'ஆம்ப்ளி'
ஹிந்தியில் 'ஹே ஹம்புலி'
கேரளாவில் 'அம்பிலியானு'
கன்னடாவில் 'அம்புஹள்ளி'
சமஸ்கிருதத்தில் 'ஹம் புஹஸ்வ ளின்ய'
சைனீஸில் 'யங்ம் புங் லீ'
ஸ்பானிஷ் 'ஆம்ப்யூளீட்டா'
ஃப்ரென்ச் 'லே ஆம்ப்லெ'
சும்மா வேடிக்கைக்காகத்தான்..!!! யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம். 'அம்புலு'வின் நிஜமான தெலுங்கு டைட்டில் என்னவென்று விரைவில் பகிர்கிறேன்.
10 comments:
நல்ல விமர்சனம்
சைனீஸில் கோகுல்நாத்தின் பெயர் 'Amp Lee'?! :)
Ambuli is a proper Malayalam name for moon:) i think u borrowed the name from Malayalam by
munnarkkaaran
நன்றி இனியதமிழ்...
நன்றி ரகு... கோகுல்நாத் ஏற்கனவே 'அம்புலி' கோகுல்னு பெயர் மாத்தி வச்சிருக்காரு... அவர் அடுத்து சைனாவுக்கு SHOWக்கு போகும்போது... AMP LEEன்னே ஸ்டேஜ்ல கூப்பிடச் சொல்லலாம்...
yes மௌனகுரு you're rite... its a pure Malayalam Word... I know some of my friends with the name AMBULI who happen to be keralites...
Nice imagination...;) Watching in my mother tongue would be exciting for sure. Wishing you success in Telugu as well
வணக்கம் அப்பாவி தங்கமணி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
4 times i saw with my family kids :)
வணக்கம் ரமேஷ்,
உண்மையிலேயே கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது... மிக்க நன்றி..!
Good luck with the re-creation of ambuli in Telugu
Thanks Bingle Ji...
Post a Comment