Saturday, April 07, 2012

எண்ணத்திரை : [சுஜாதா, மறைவாய் வாழ்கிறார்]

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை இப்போதுதான் தூசிதட்டி எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஏனோ, வழக்கம்போல் முதலில் சுஜாதாவின் '21ஆம் விளிம்பு' சிக்கியது.

சுஜாதாவின் '21ஆம் விளிம்பி'ல் அவர் தமிழக அரசாங்க நிருபரின் சார்பாய் முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களுடன் மேற்கொண்ட உலகச் சுற்றுப் பயணத்தைப் பற்றி படிக்க முடிந்தது... படித்து முடிந்ததும் நாமும் ஏதோ அந்த சுற்றுப்பயணத்தில் பங்கு பெற்றது போன்றதொரு உணர்வை மிக இயல்பாய் ஏற்படுத்தியுள்ளார்... ஒரு பகுதியில் சிங்கப்பூரை பற்றியும் மலேசியாவைப் பற்றியும் அவரது பார்வையையும், நம்மூரின் பல இயலாமைகளையும் வருத்தத்தோடு ஒப்பிட்டுள்ளார். இதிலிருக்கும் சில தகவல்களை 'அந்நியன்' பட விழிப்புணர்வு ஸ்பீச்சில் (அவரே) எழுதியிருப்பது தெரிகிறது. (உதாரணம் : 'சிங்கப்பூர்... பெங்களூரைவிட சிறிய ஊர் ஆனால்...'என்று வளரும் வசனம்.)


டி.என்.ஏ. பற்றி, கன்னடத் திரைப்படங்கள் பற்றி, தூர்தர்ஷனின் அப்போதைய (?) தரத்தைப் பற்றி, நாதஸ்வரத்தின் விலைகளும், அதை திறம்பட வாசிக்கும் வித்துவான்கள், அவர்கள் பிரயோகிக்கும் டெக்னிக்கல் வார்த்தை... ஜப்பான் பயணம், மலேசியா பயணம், சிங்கப்பூர் பயணம், பாரதியார் அரிதாய் பிரயோகித்த 'லிமரிக்' வகை கவிதைகள். இப்படி அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரமாய் தகவல்கள் தளும்புகிறது.

அறியாத அறிவியல் தகவல்களை வழக்கம்போல் வாரிக் கொடுக்கும் வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர் சந்தேகமின்றி சுஜாதான். இப்புதகத்தை படித்து முடித்ததும் ஒரு விஷயம் புரிந்தது... சுஜாதா சார் நம்மைவிட்டு மறைந்துவிடவில்லை... மறைவாய் வாழ்கிறார்... அவரைக் காண விரும்புவோர் அவரது எந்தவொரு புத்தகத்திலும் பின்னட்டையில் காணலாம்... அவரிடம் பேச நினைப்போர் கேள்வியை மனதில் நினைத்துக் கொண்டு அவரது புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து படிக்கலாம். நிச்சயம் விடை கிடைக்கும்.


பெயர் : 21ஆம் விளிம்பு
எழுத்தாளர் : சுஜாதா
வெளியீடு : திருமகள் புத்தக நிலையம்
இப்புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்கவும்---------------------


Signature

12 comments:

KVPS said...

"அறியாத அறிவியல் தகவல்களை வழக்கம்போல் வாரிக் கொடுக்கும் வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர் சந்தேகமின்றி சுஜாதான்." வழிமொழிகிறேன்! வாழ்த்துகிறேன்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நானும் இப்பொழுது சுஜாதாவின் 21 ஆம் விளிம்பு படித்துக் கொண்டு மலைத்து போய் இருக்கிறேன். 1992 இல் எழுத ஆரம்பித்து 1995 இல் முதல் பதிப்பு. "இன்னும் பத்தாண்டுகளில் தகவல்களின் படையெடுப்பில் திணறப் போகிறோம் " என எழுதி இருக்கிறார் தீர்க்கதரிசி !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தந்தது தங்கள் பதிவு.

vimalanperali said...

தங்களது எழுத்துக்களில் சுஜாதா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Raghu said...

ஒன்று கவனித்தீர்களா ஹரிஷ்? தலைவர் எப்போதும் பெங்களுரை 'பங்களூர்' என்றே குறிப்பிடுவர். ஏனென்று தெரியவில்லை.

DREAMER said...

வணக்கம் KVPS,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் ருஃபினா..,
அவர் குறிப்பிட்ட வருங்கால தகவல் திணறலைவிட அவர்தம் எழுத்தில் வழங்கிடும் தகவல் திணறலில் சிக்கி... திக்கு தெரியாமல் மகிழ்ந்திருப்பது அவரது நூல்களின் தனிச்சிறப்பு... நீங்களும் இப்போது அதே புத்தகம் படித்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி..!

வணக்கம் நிசாமுதீன்..,
நன்றி நண்பரே, என் எழுத்தை ஏற்று இப்புதகத்தை டிக்கப்போகும் உங்களுக்காய் ரொம்பவும் மகிழ்கிறேன்...

DREAMER said...

வணக்கம் விமலன்,
இன்று பலரும் புத்தகம் வாசிக்க மட்டுமின்றி எழுதுவதற்கு காரணமானது அவரது எழுத்துக்களே. அவரது ஒவ்வொரு புத்தகம் திறக்கும்போதும் மூடும்போதும் எழும்பும் இசையில் அவரது உயிர்த்துடிப்பு உள்ளதெனவே இன்னும் நிச்சயம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்... என் போல் பலரது எழுத்துக்கு ஆசான் அவர்..!

வணக்கம் ரகு,
பெரிய எழுத்தாளராகியும் அவருக்கு கொம்பு முளைத்ததேயில்லை... எனவேதான் பெங்களூரை கொம்பில்லாமல் 'பங்களூர்' என்று குறிப்பிட்டுள்ளாரோ..?

rajamelaiyur said...

உண்மையில் அவர் அருமையான எழுத்தாளர் .அவரது திசை கண்டேன் வான் கண்டேன் படித்து பாருங்கள் .. மிக அருமையான அறிவியல் புனை கதை

rajamelaiyur said...

இன்று

பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்

DREAMER said...

வணக்கம் ராஜா,
நிச்சயம் வாங்கி படிக்கிறேன். புத்தகப் பரிந்துரைக்கு நன்றி...

Cable சங்கர் said...

thalaivanukku saave kidaiyaathu.. harish.

DREAMER said...

உண்மைதான் ஜி...! ரசிக வாசகர்கள் நாமிருக்கும்வரை... அவர் அழியப்போவதேயில்லை..!

Popular Posts