சென்னையை சுட்டெரித்துக்கொண்டிருந்த வெயிலின் தாக்கம் தெரியாதபடி அந்த காருக்குள் குளிர்ச்சியாக அமர்ந்திருந்தாள் சமீரா..! கார் கண்ணாடிகளை இறக்கியபடி, ECR சாலையில் கடலுக்கு முதுகு காட்டியபடி மாட்டப்பட்டிருந்த அந்த போர்டை ஒருமுறை உற்றுப்பார்த்தாள்.
‘SEASIDE MOTEL’
எப்போதாவது சீறிப்பாய்ந்து கடக்கும் வண்டிகள் சத்தத்தை தவிர சுற்றும் முற்றும் வேறெந்த சத்தமும் கேட்காமல் அந்த இடம் அமைதியாகவே இருந்தது.
'இங்கேதானே! வரச்சொன்னான்' என்று முணுமுணுத்துக் கொண்டே தனது கருப்பு கலர் காரை அந்த மோட்டலுக்குள் செலுத்தினாள்.
பார்க்கிங் ஏரியா காலியாக இருந்தது. ஆள் நடமாட்டமில்லாத அந்த மதிய வேளையில் தனது காரை ஓரமாக பார்க் செய்துவிட்டு, இறங்கினாள். கண்களில் கருப்புக்கண்ணாடி அம்சமாக அணிதிருக்க, அதை கழற்றியதும், அவள் கண்களிரண்டும் வெயிலின் வெப்பம் தாளாமல் செல்லமாக சுருங்கியது.
சமீரா மோனாலிசா ஓவியம் போல் இருந்தாள். ஒரு மர்மப் புன்னகை முகத்தில் இருப்பது தெரியாதபடி நோட்டம் விட்டாள். பார்க்கிங் ஏரியாவின் இடதுபுறம் பயணிகள் தங்கும், ஒரே மாதிரி சீரான அறைகள், வரிசையாக இருந்தது. வலதுபுறம் குழந்தைகள் விளையாடும் குட்டி பார்க் ஒன்றும், எதிரில் ஒரு ரெஸ்டாரெண்டும் சமீராவின் கண்களுக்கு தெரிந்தது.
ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தாள். அந்த இடமே, செட் போட்டு, ஷீட்டிங் முடிந்துவிட்டதுபோல் ஆள் அரவமில்லாமல் காலியாக இருந்தது. நல்லவேளையாக ரெஸ்டாரெண்டுக்குள் ரிசப்ஷென் மேஜையில் ஒருவன் இருந்தான்.
'எக்ஸ்யூஸ்மீ..' என்றாள். சமீரா ஆள்தான் ரொம்ப அழகு, அவள் குரல் கொஞ்சம் கட்டையாகத்தான் இருந்தது.
கண்ணங்கரேல் என்று வாட்டசாட்டமான உடல்வாகுடன் அவன் நிமிர்ந்து பார்த்தான்..கண்களாலேயே ஏடாகூடமாக அவளை அளந்தபடி பார்த்துக்கொண்டிருக்க
'லன்ச் இருக்கா..?' என்று கேட்டாள்
'இருக்கு மேடம்..! போய் உக்காருங்க..?' என்றான். அவன் குரலும் ஒன்றும் சளைத்ததல்ல, கட்டைக்குரல்தான்.
போய் அமர்ந்தாள். அவன் தொடர்ந்துவந்தான்.
'மேடம் உள்ளே ஏசி ரூம் இருக்கு..! வேணும்னா அங்கே போய்..'
'இல்ல பரவாயில்ல..! நான் இங்கேயே வெயிட் பண்றேன்..' என்று கூறியவளிடம் அருகிலிருந்த மேஜையிலிருந்து மெனு கார்டை எடுத்து அவன் நீட்டினான்.
'ஆங்..! என் ஃப்ரெண்டு ஒருத்தர் வரணும், வந்ததும் லன்ச் ஆர்டர் பண்றேனே..!' என்று சிரித்தாள்.
அவனும் பதிலுக்கு சிரித்தபடி, 'நோ ப்ராப்ளம் மேடம்' என்று கூறி சிரிப்பை கள்ளமாய் மாற்றினான். மனசேயில்லாமல் அவளைப் பிரிந்து சென்று ரிசப்ஷன் மேஜையில் அமர்ந்தான். ஆனால் பார்வை மட்டும் அவள் மீதிருந்து விலக்கவேயில்லை.
சமீராவுக்கு அவன் பார்வை என்னவோ போலிருந்தது.
'எங்கே போனான் இந்த ரமேஷ்..?' என்று சற்றே கோபமாய் முணுமுணுத்தபடி தனது செல்ஃபோனை எடுத்து டயல் செய்தாள். ரிங் போய்க்கொண்டே இருந்தது. இணைப்பு கிடைக்கவில்லை.
'சே!' என்று அலுத்துக்கொண்டு எதேச்சையாக ரிசப்ஷன் மேஜை பக்கம் திரும்ப, அந்த ஆள் சமீராவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு பெரிய ஹோட்டலில் இவன் ஒருவன்தானா இருக்கிறான். வேறு யாருமே இல்லையா..! என்று யோசித்தபடி பார்வையை வெளியே செலுத்த, அங்கே குழந்தைகள் விளையாடும் குட்டி பார்க்கில் ஒரு ஊஞ்சல் மெல்லிய காற்றுக்கு ஏற்றபடி அசைந்து கொண்டிருந்தது.
'மேடம்?'
சட்டென்று குரல் வர, திடுக்கிட்டு திரும்பினாள். மீண்டும் அவன் அருகில் இருந்தான்.
சலிப்புடன் 'என்ன..?' என்றாள்
'உங்க ஃப்ரெண்டு வர்ற வரைக்கும் கூல்டிரிங்க்ஸ் ஏதாவது..?' என்றான்
'ஓகே..! ஒரு பெப்ஸி கொண்டுவாங்க..'
'பெப்ஸி இல்லை கோக்தான் இருக்கு..'
'சரி ஏதோ ஒண்ணு, கொண்டு வாங்க..' என்றாள்
இந்த ரமேஷை நம்பி இப்படி வந்திருக்க கூடாது. இண்டர்நெட் ஃப்ரெண்டு, 3 மாதப் பழக்கம், ஆளை நேரில் பார்க்காமலே அவனது வலைப்பதிவில் கவிதைகள் படித்து ஈர்க்கப்பட்டவள், சேட்டிங்கில் கருத்து பறிமாறி, இருவரும் இன்று எப்படியும் நேரில் சந்திப்போம் என்று தேதி குறித்து, என்னதான் ECR ரோடு ரமேஷூக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தாலும், போயும் போயும் இந்த ஹோட்டலையா கூகிள் மேப்பில் தேடிப்பிடிக்க வேண்டும்.
இந்த இடமே சரியாக படவில்லை..! இதை நடத்தும் இந்த ஆளும் சரியில்லை..! இது ஏதோ ஆங்கிலப் படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர்கள் நடத்தும் மோட்டலைப் போலிருக்கிறது என்று என்னென்னவோ எண்ணங்கள் அவளுக்குள் போய்க்கொண்டிருக்க, அவன் கோக் பாட்டிலை அவளுக்கு மிக அருகில் வைத்தான். தர்ம சங்கடமாக நிமிர்ந்து பார்த்து, 'தேங்க்ஸ்' என்றாள்.
வெளியில் ஒரு சிகப்பு கலர் கார் வந்து நின்றது..!
அப்பாடா..! ரமேஷ்தான் வந்துவிட்டான் என்று ஆவலாய் வெளியே பார்த்துக் கொண்டிருக்க, காரிலிருந்து ஒரு ஹேண்ட்ஸம் இளைஞன் இறங்கினான். அவனை பார்த்த மகிழ்ச்சியில் சமீரா தனது சேரிலிருந்து எழுந்து நிற்க, காரின் மறுபக்கத்தில் சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி, கையில் குழந்தையுடன் இறங்கினாள். சமீராவின் முகம் மாறியது. இவனில்லை என்று கூறிக்கொண்டே சேரில் சோர்வாக அமர்ந்தாள்...
ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் அவர்களிடம் சென்று ஏதோ பேசினான். என்னவென்று சரியாக சமீராவின் காதில் விழவில்லை..! அவர்கள் வந்த வேகத்தில் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
கோக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். கடிகாரம் பார்த்தாள். 2.15. ரமேஷ்..! நீ எங்கேயிருக்க..! என்று எண்ணும்போது, செல்ஃபோனில் SMS வந்தது.
'On the way... Sorry Samee..' என்றிருந்தது.
இன்னும் எவ்வளவு நேரம்தான் வருவானோ..! என்று புலம்பிக்கொண்டே எழுந்து ஹேண்ட் வாஷ் ஏரியாவிற்கு சென்றாள். அருகில் டாய்லெட் என்று போர்டு மாட்டப்பட்ட அறை ஒன்றிருந்தது. கதவைத் திறந்து உள்ளே போக முயன்றாள். ஒரே இருட்டு..! தனக்கு பின்னால் ஏதோ உருவம் நிற்பதுபோல் தோன்றவே திரும்பிப் பார்க்க.. ரிசப்ஷனிஸ்ட் நின்றிருந்தான்.
'ஓஓஓவ்...! இங்கே என்ன பண்றே..?' என்று கோபம் காட்டினாள்.
'மேடம் இந்த ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணாதீங்க..! தண்ணி வராது. எங்கூட வாங்க காட்றேன்..!' என்று அவள் பதிலுக்கு காத்திராமல் திரும்பி நடந்தான்.
சலிப்புடன் தொடர்ந்தாள்.
எதிரில் காலியாக இருந்த பிரயாணிகள் தங்கும் மோட்டல் அறைகளில் ஒரு அறைக்குள் நுழைந்து, உள்ளே இருந்த பாத்ரூமில் லைட் போட்டு கதவு திறந்தான். அவள் தயக்கத்துடன் உள்ளே நுழைந்துக் கொண்டு திரும்பிப் பார்க்க, அவன் சிரித்துக்கொண்டே வெளியிலிருந்த கதவை தாழிட்டுக் கொண்டான்.
சிறிது நேரத்தில்... மீண்டும் சமீரா டேபிளில் அமர்ந்திருக்க..
'5 மினிட்ஸ்...' என்று மீண்டும் ஒரு SMS வந்தது.
சமீரா, தனது bagஐ திறந்த அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள். Bagஐ மூடியதும் தனது டேபிளின் எதிரில் இருந்த சேரில், ரிசப்ஷனிஸ்ட் அமர்ந்திருந்தான்.
'இப்ப என்ன..?' என்று சலித்துக் கொள்ள
'சமீரா..? என்னைத் தெரியலியா..?' என்றான்
'ஹேய்..! என் பேரு உனக்கெப்படி தெரியும்..?'
'3 மாசமா உங்கூட சேட் பண்ணிட்டிருக்கேன்..! உன் பேருகூட எனக்கு தெரியாதா என்ன..?'
'நி...நீங்..கதான்.. ரமேஷா..' என்று கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டாள்.
'ஆமா சமீரா..? சேட்டிங்ல நான் அழகாயிருப்பேன்னு பொய் சொன்னேன். அதுக்காக என்னை மன்னிச்சிடு..! கவிதை எழுதுறவங்கள்லாம் அழகா இருக்கணும்னு சட்டமா என்ன..?' என்று கேட்டான்.
'இல்லை..! உங்க இங்கிலீஷ், உங்க தமிழ் கவிதை இதெல்லாம்... நான் உங்களை... வேற மாதிரி நினைச்சேன்..' என்று மீண்டும் தயக்கம் காட்டினாள்.
'என்ன சமீரா.. சேட்டிங்ல அவ்வளவு இனிமையா பேசிட்டு, இன்னிக்கி முகத்துல இவ்வளவு கடுப்பு காட்டுறே..! இதோ இந்த மோட்டெல்-தான் என் உலகம். ஃபாரின் முதலாளி மொத்தமா என்னை நம்பி விட்டுட்டு போயிருக்கான். இதுதான் என் சாம்ராஜ்யம். இங்க என்னை மீறி எதுவும் நடக்காது. இதோ இங்க ரிசப்ஷன்ல இருக்கிற கம்ப்யூட்டர்லருந்துதான் கவிதையெல்லாம் டைப் பண்ணினேன்..! எனக்கு கவிதை மட்டுமில்ல பெண்களையும் பிடிக்கும். அதுவும் உன்னைமாதிரி இப்படி தனியா வந்து சந்திக்கிற பெண்கள்' என்று மேஜையிலிருந்த சமீராவின் கைகளின்மேல் தனது கையை வைத்தான்.
சமீரா கைகளை சட்டென விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.
'ரமேஷ்...நான் கொஞ்சம் அர்ஜெண்ட்டா போகணும்..!'
'இரு சமீரா..! ஃப்ரெண்டு வருவான்னுதானே இவ்வளவு நேரம் வெயிட் பண்ணே! இப்போ நான் வந்துட்டதும் கிளம்புறேன்னா என்ன அர்த்தம்...! என்னை பிடிக்கலியா..?'
'உங்க கவிதைகள் பிடிக்கும்..!'
'கவிதையை விடு... என்னை உனக்கு பிடிச்சிருக்கா..?' தீர்மானமாகவே கேட்டான்
'நா..நான்.. கிளம்புறேன்..' என்று போக எத்தணித்தவளை தடுத்து நிறுத்தினான்.
'என்ன சமீ..! நீ வந்திருக்கேன்னு நான் கஸ்டம்ரஸையெல்லாம் திருப்பி அனுப்பியிருக்கேன்! கொஞ்ச நேரம் விளையாடலாம்னா இப்படி அலட்டிக்கிறே..!' என்றான்
'இல்லை ரமேஷ்... நீங்க என்னைத் தப்பா புரிஞ்சசிக்கிட்டீங்க..'
'என்ன சமீ.. டயலாக்கெல்லாம் பேசிக்கிட்டு..! வா..' என்று அவள் கைகளைப் பிடிக்க.. 'விடு..' என்று திமிறிக் கொண்டு ஓடினாள்.
'சரிதான், நீ ஓடி விளையாடும் பாப்பாவா..' என்று அவளை துரத்தினான். ஓடும்போது மறக்காமல், தனது கம்ப்யூட்டரில் ஏதோ ஒரு பட்டனை அழுத்த, அது அந்த ஹோட்டலின் மெயின் கேட்டை மூடியது.
ஒருவிதமான சங்கு சத்தத்துடன் அந்த கேட் மூடப்படும் காட்சியை மிரட்சியுடன் சமீரா பார்த்தாள்.
காரில் தப்பமுடியாது என்று தெரிந்துக் கொண்டு, ஹோட்டலின் பின்பக்கம் குழந்தைகள் பார்க் ஏரியாவை தாண்ட ஒரு சின்ன கதவு காம்பவுண்டு சுவருக்கு மத்தியில் தெரிந்தது. அதை தள்ளினாள். நல்ல வேளை திறந்துக்கொண்டது. பின்னால், சவுக்குத்தோப்பும் தூரத்தில் கடலும் தெரிந்தது. சவுக்குத்தோப்புக்குள் ஓடினாள்.
ரமேஷ் அவளை வெறியுடன் பின்தொடர்ந்தான். ஒரு இடத்தில் அவள் தடுக்கி விழ, ரமேஷ் அவளை சுலபமாக பிடித்துக் கொண்டான்.
'ர..மேஷ்... இது நல்லதுக்கில்ல... சொன்னாக் கேளூங்க... நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல..'
'ஏ..! எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரிதான், எல்லாம் முதல் தடவை அப்படித்தான் இருக்கும். இந்த ECR ஏரியா ரொம்ப ராசி... இனிமே எல்லாம் பழகிடும்.. பயப்படாத..' என்று அவளைக் கீழே தள்ளினான்.
அவள் எழ முயல்வதற்குள் அவளை பிடித்துக் கொண்டு, அவள் ஆடைகளை கொஞ்சம் கொஞ்சமாக களைந்தான்.
'ர..மே..ஷ்.. வேண்டாம்..'
அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் ஆடைகளை மொத்தமாக களைந்தவன், ஏதோ பார்த்துவிட்டு, திடீரென்று பயங்கர அதிர்ச்சியில் பின்வாங்கினான்.
அவள்... சொன்னது உண்மைதான்.
சமீரா பெண்ணல்ல... திருநங்கை..
சுதாரித்து எழுந்த சமீரா.. காரித்துப்பினாள்(ன்).
'த்தூ..! நாயே! நான்தான் சொல்றேன்ல... நான் நீ நினைக்கிற மாதிரியில்லன்னு..! நான் உன் கவிதையை தீவிரமா ரசிச்சேன். ஆனா, அழகு உன் கவிதையில மட்டும்தான்டா இருக்கு..! உன் மனசுல இல்ல..! உன்னையும் நண்பன்னு நினைச்சி பாக்கணும் வந்தேன் பாரு.. என்னைச் சொல்லனும். தூ... ஏன்டா இப்படி அலையிறே..! உனக்கெல்லாம் கவிதை ஒரு கேடா..!' என்று கட்டைக்குரலில் திட்டிவிட்டு, ஆடைகளை சரிசெய்துக்கொண்டு, உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை உதறிக்கொண்டு வேகமாக ஹோட்டலை நோக்கி நடைபோட்டாள்(ன்).

- முடிந்தது -
32 comments:
அப்படிபோடு!!!!
முடிவ முன்னரே யூகித்து விட்டேன்....
அப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்............:))
அருமை ஹரீஷ், வாழ்த்துக்கள்.
கதை நல்ல சஸ்பென்ஸ்.விறுவிறு.இவன்தான் "_______"என்பது கதைக்கு புதுசு.நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்!
ஆனா முடிவு?ஒரளவுக்கு யூகிக்க முடிந்தது.வேறு முடிவு யோசித்திருக்கலாம்.அவள் ஏன் சொல்லாம்ல் விட்டால் சேட்டில்.அடுத்து ...கடைசி பாரா வசனம்?
receptionist தான் நெட் நண்பன் னு ஊகிச்சேன், அழகான பெண்கள் நிறைய பேருக்கு கட்டைக் குரலாத்தானே இருக்கு, அதனால சந்தேகம் வரல. good story,
ஏப்ரல் ஒண்ணான்தேதிக்கு ஏத்த கதைதான்...
//சமீரா பெண்ணல்ல... திருநங்கை..//
இனி வருபவர்கள் ஏமாற வேண்டாம்...
நான் வேற மாதிரி யோசிச்சேன் கதை வேறமாதிரி முடிஞ்சு போச்சு...நல்லாஇருக்கு...
நண்பரே...தொடரவும்..வாழ்த்துகள்...
அந்த ரிசப்ஷனிஸ்ட்டை யூகிக்க முடிஞ்சது. ஆனா முடிவு??? சத்தியமா இல்ல...... நைஸ் ஒன் ஹரீஷ் :)
வாங்க சைவகொத்துப்பரோட்டா,
இந்த முடிவை நீங்க யூகிச்சியிருப்பீங்கன்னுதான் நினைச்சேன்...
அப்படின்னு நானும் பொய் சொல்லமாட்டேன். வாழ்த்துக்கு நன்றி!
வாங்க ரவிஷங்கர்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! வேற மூன்று முடிவுகள் யோசிச்சேன் சார்..! ஆனா, ஏப்ரல் முதல் தேதி அதுவுமா இப்படி ஒரு முடிவே வைக்கலாம்னு தோனிச்சு..! அதான்...!
வாங்க நாய்க்குட்டி மனசு,
முதல் ட்விஸ்ட் நீங்கள் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி, இரண்டாம் ட்விஸ்ட் யூகிப்பதற்கு நிறைய இடங்களில் க்ளூ கொடுத்திருந்தேன். மோனாலிசா, கட்டைக்குரல், 'நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல..' என்ற டைலாக் இப்படி ஆங்காங்கே சொல்லியிருந்தேன். இருப்பினும் சுவாரஸ்யமாய் படித்ததற்கு நன்றி!
வாங்க பிரபு (KVPS)
உண்மையிலேயே இந்த முடிவு ஏப்ரல் ஒண்ணாம்தேதிக்கென்றேதான் பிரத்யேகமாக வைத்தேன்..!
வாங்க சீமான்கனி,
சும்மா ஒரு ட்விஸ்டுதான்..! கதையை இரசித்து படித்ததற்கு மிக்க நன்றி நண்பரே..!
வாங்க ரகு,
25வது போஸ்டு என்ன பண்ணலாம் ஏது பண்ணலாம்னு யோசிச்சி பாத்து, நமக்கு கதை எழுத(விட)த்தான் வருது, சரி அதையே செய்வோம்னு எழுதிட்டேன். படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி..!
-
DREAMER
நல்ல எழுதி இருக்கீங்க. முடிவ நான் வேற மாதிரி நெனச்சேன்....யூகிக்க முடியல.... சூப்பர் நடந்துங்க பிரதர்
இதுதான் விதியின் விளையாட்டு... அருமை கதை பிரம்மரே:))
திருப்பங்களுடன் விருவிருப்பா போச்சு!! :-) யூகிக்க முடியல....
Appadiya shock ayitayn... nice one
keep it up boss
நல்லா இருக்கு ...நிறைய எழுதுங்க
நல்ல எழுதி இருக்கீங்க.
வாங்க அப்பாவி தங்கமணி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!
வாங்க துபாய் ராஜா சார்,
ரமேஷின் இந்த நிலைமைக்கு காரணம், ஏப்ரல் 1ஆம் தேதி எழுதப்பட்ட விதி...ன்னு கரெக்டா சொன்னீங்க..! என்ன சார், என்னைப்போயி 'பிரம்ம்ரே'ன்னுலாம் சொல்லிட்டீங்க..!
வாங்க செந்தில்நாதன்,
திருப்பங்களை ரசித்து படித்ததற்கு நன்றி நண்பரே..!
வாங்க அனானிமஸ்,
ஷாக் ஆகி படித்து வாழ்த்தியதற்கு நன்றி!
வாங்க பத்மா,
வாழ்த்துக்கு நன்றி! கண்டிப்பா நிறைய எழுதுறேன்..!
வாங்க T.V.ராதாகிருஷணன் சார்,
வாழ்த்துக்கு நன்றி..!
அருமை
நல்ல திருப்பங்கள் சார்
வாங்க அமைச்சரே..!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!
கதை நல்லா இருக்கு... முடிவை எதிர்பார்க்கவில்லை...
வாங்க நாடோடி நண்பரே,
எங்க உங்க கமெண்ட் காணுமேன்னுதான் பார்த்தேன்..! வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி நண்பரே..! தொடர்ந்து வாருங்கள்..!
-
DREAMER
உங்க கதையின் கிளைமாக்ஸ் சூப்பர்
வாங்க மின்னல்,
உங்களுக்கு க்ளைமேக்ஸ் பிடித்துப்போனதில் மகிழ்ச்சி... தொடர்ந்து வாருங்கள்..!
//'எக்ஸ்யூஸ்மீ..' என்றாள். சமீரா ஆள்தான் ரொம்ப அழகு, அவள் குரல் கொஞ்சம் கட்டையாகத்தான் இருந்தது.//
இப்போ இது ஒன்னும் பெருசா தெரியலை
//அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் ஆடைகளை மொத்தமாக களைந்தவன், ஏதோ பார்த்துவிட்டு, திடீரென்று பயங்கர அதிர்ச்சியில் பின்வாங்கினான்.
அவள்... சொன்னது உண்மைதான்.
சமீரா பெண்ணல்ல... திருநங்கை..//
இப்பத்தானே புரியுது.....என்ன, நீ இன்னும் வளரனும் தம்பீன்றீங்களா....?! ;-)
ஹரீஷ்....தொடர்ந்து கலக்குங்க! கதை ரொம்ப நல்லாயிருந்தது! வாழ்த்துக்கள்.
உங்களுக்கு விருது கொடுத்து
உள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி.
நல்லாருக்கு.. ஆனா..
"என்று கட்டைக்குரலில் திட்டிவிட்டு.." --
முன்னமே பேசிய (கூல் ட்ரிங்க்ஸ் கேட்ட) பொது இந்தக் குரலை அவனுக்கு அடையாளம் தெரியலையா..
வாங்க ஹரிஜி,
ஏதோ க்ளைமேக்ஸ்ல ஒரு ட்விஸ்டு வைக்கலாமேன்னு இப்படி எழுதினேன். மத்தபடி மருத்துவக் குறிப்புகள் பற்றி தெரிஞ்சிக்க உங்க வலைப்பதிவுக்குத்தான் வந்து டவுட்டு க்ளியர் பண்ணிப்பேன்.
------------------
வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நண்பா என்ன இது, அவார்டெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க... நன்றி!
------------------
வாங்க மாதவன்,
அந்தளவுக்கு ஆண்குரல் இல்லீங்க... அழகான பெண்கள் சிலருக்கு கட்டைக்குரல் இருக்கும் என்பது ஒரு பொதுவிதி என்பதால் அப்படி எழுதினேன். இதை 'நாய்க்குட்டி மனசு' அவர்களும் தங்களது மறுமொழியில் குறிப்பிட்டிருப்பதில் மகிழ்ச்சி.
------------------
Hai Nice
நான் உன் கவிதையை தீவிரமா ரசிச்சேன். ஆனா, அழகு உன் கவிதையில மட்டும்தான்டா இருக்கு..! உன் மனசுல இல்ல..!
உங்க கதையின் கிளைமாக்ஸ் சூப்பர்
Thanku
Roja
வாங்க ரோஜா,
கதையையும், க்ளைமேக்ஸ் வசனத்தையும் ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!
apart from te twists, it also says wat a difficulty a girl might face wen she gets prepared to a new person just based on cyber frndship,
all that shines may not be gold ,
good posting, keep blogging
இதுதான் கதை என்று யூகிக்க முடியாமல் எழுதியதற்கு ஒரு பெரிய சபாஷ்.
சான்ஸே இல்லை ! ! ஃப்ண்டஸ்டிக் ! ! !
ஆரம்பத்தில் கதை சொல்லும்போது சமீராவை வர்ணித்த விதத்திலும் சரி, தான் அப்படிப் பட்டவள் இல்லை என்று சொல்லும்போதும் எதிர்பார்க்கவில்லை அங்கு தங்கள் கதையின் நாயகி ஒரு திருநங்கை என்று ! !
அதிலும் அந்த ரிசப்ஷனிஸ்ட் ஒரு வில்லன் என எதிர்பார்த்தாலும், ரமேஷ் தான் அவன் என்று சத்தியமா யோசிக்கமுடியவில்லை....
நல்ல கற்பனை....
வாங்க ரோகிணிசிவா,
thanX for reading & appreciating the story...
வாங்க Uma,
கதையின் ட்விஸ்ட்டை ரசித்து படிச்சிருக்கீங்க.. ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து வாருங்கள்!
Post a Comment