Thursday, January 14, 2010

தை பொறந்தா ப்ளாக் பொறக்கும்...

நானும் அடிக்கடி ஒரு ப்ளாக் க்ரியேட் பண்ணி ஆனா, தொடர்ந்து எழுத முடியாம போயிடுது... Anywayz. Past is Past... பழைய(ன) ப்ளாகுகளை கழிந்துவிட்டு புதிய(ன) இந்த ப்ளாக்கையாவது தொடர்ந்து எழுதலாம்னுருக்கேன்...



ப்ளாக் டைட்டிலைப் ('நானும் ஒரு...' என்ற டைட்டில்) பார்த்தால் கொஞ்சம் கவித்துமா (ஒரு வேளை) தோணலாம். அதென்னமோ ஒரு வார்த்தைக்கப்புறம் மூணு புள்ளி வச்சாவே ஒரு கவிதை ஃபீல் வந்துறுது... என்ன ஃப்ப்ப்பீலிங்-னு தெரியில... ஆனா, அந்த டைட்டிலுக்கு காரணம், நானும் ஒரு ப்ளாக் எழுதலாமே தோணியதால வச்ச டைட்டில்தானே தவிர வேறொன்னும் ஸ்பெஷலா இல்ல...

இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல் டே, தைத்திருநாள், உழவர் திருநாள், தமிழ் புத்தாண்டு இப்படி கொண்டாட நிறைய பெயர்கள் இருந்தாலும் எனக்கு பிடிச்ச பெயர் பொங்கல்தான். ஏன்னா,

பொங்கல்னதும் எனக்கு ஞாபகம் வர்றது
இதுதான்...



அனைவருக்கு ஹேப்பி பொங்கல்...

Signature

2 comments:

Raghu said...

டைர‌க்ட‌ர்ர்ர்ர்ர்ர்ர், ஆர‌ம்ப‌மே க‌ளை க‌ட்டுது போங்க!

//ஒரு வார்த்தைக்கப்புறம் மூணு புள்ளி வச்சாவே ஒரு கவிதை ஃபீல் வந்துறுது//

அன்று
ப‌டித்தேன்
க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டித்தேன்
ரேங்க் வாங்க‌முடிய‌வில்லை
இன்று
உங்க‌ள் வ‌லைப்பூவில்
ஃபாலோவ‌ராக‌வும்
பின்னூட்ட‌மிடுவ‌திலும்
வ‌ந்தேன் முத‌லாக‌!

ஹி..ஹி..இப்ப‌ல்லாம் எண்ட‌ர் த‌ட்டினாகூட‌ க‌விதைன்னு சொல்லிக்க‌லாம். ஆனா ந‌ம்ம‌ள‌ த‌விர‌ வேற‌ யாரும் சொல்ல‌மாட்டாங்க‌:(


அதென்ன‌ Categoryல‌ தூக்க‌ மாத்திரை! செம‌ குசும்பு புடிச்ச‌வ‌ர் நீங்க‌:)

என்னை கேட்டீங்க‌ன்னா, அம்மா தாலாட்டு, ஆசிரிய‌ர் பாட‌ம் எடுக்க‌ற‌து...அதுக்க‌ப்புற‌ம் ந‌ம்ம‌ பொங்க‌ல்தான்:)

DREAMER said...

வாங்க ரகு,

நாம ரெண்டு பேரும் சேர்ந்து 'மூணு புள்ளியும், எண்டர் கீயும்' அப்படின்னு ஒரு புத்தகத்தை எழுதலாமா... அடுத்த புத்தகக் கண்காட்சியில ஒரு ஸ்டால் வெச்சிட்டு ஒரே புத்தகத்தை பரப்பி வச்சிக்கிட்டு உக்காந்திரலாம். பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு உபயோகமா இருக்கும். என்ன சொல்றீங்க...

அப்புறம், ஃபாலோவரா வேற ஜாய்ன் பண்ணிட்டீங்க... நன்றி... ரெகுலரா எழுத கண்டிப்பா முறயற்சி பண்றேன்...

Popular Posts