Wednesday, April 14, 2010

'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 04



ருவழியாக தாவீதின் மரண அனுபவங்களை முழுமையாக ரெக்கார்ட் செய்துக் கொண்டு, இந்த மரண அனுபவம் பற்றிய எபிசோட்-ஐ சுவாரஸ்யப்படுத்துவதற்காக, மக்களிடையே ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம். அதில் கேட்கப்பட்ட கேள்வி

'மரணத்துக்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான்?'

இந்த கேள்வியைக் கேட்டதும், கொஞ்சம் ஏற இறங்க பார்த்துவிட்டுத்தான் மக்கள் பதிலளித்தார்கள். அதில் சுவாரஸ்யமாக வந்த பதில்கள் இதோ...

'அதென்ன டவுன் பஸ்ஸா..! எங்கே போவாங்கன்னு சொல்றதுக்கு'

'மண்ணோட மண்ணா மக்கிப்போகவேண்டியதுதான்'

'புண்ணியம் செஞ்சவன் சொர்க்கத்துக்கு போவான்... பாவம் செஞ்சவன் நரகத்துக்குப் போவான்..'

இந்த மரணம் தழுவிய அனுபவங்களைப் பற்றி யாராவது, மருத்துவ உலகின் சார்பாக பேட்டி வழங்கினால் நன்றாக இருக்குமே என்று தோன்றவே, தி-நகரில், திரு.ரவி சாமுவேல் என்ற மனோதத்துவ ஆலோசகரிடம் சென்று பேட்டி கண்டோம். அவர் சிறந்த முறையில் இந்த N.D.E.யைப் பற்றி விளக்கியதோடு, இது மருத்துவ உலகை குழப்பத்திற்குள்ளாக்கும் ஒரு அபூர்வமான விஷயம் என்றும் தெரிவித்தார்.

பிறகு எனது நண்பர் ஒருவரிடம் காரில் இந்த எபிசோட்-ஐப் பற்றி விளக்கிக் கொண்டு சென்றபோது, அந்த காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர், அவரது ஊரில் நடந்த விநோதமான ஒரு சம்பவத்தை பற்றிக் கூறினார். அது..!

அவரது ஊரில், ஒரு சின்ன பெண் விஷக்காய்ச்சலால் இறந்துப் போனாளாம், சொந்தபந்தங்கள் கூட, அவளது பிணத்தை ஊர்வலமாக கொண்டு போய் சுடுகாட்டில் கிடத்தி எறிக்க முயலும்போது, திடீரென்று உயிர்வந்து எழுந்து அமர்ந்துவிட்டாளாம். அனைவரும் பேய் பேய்..! என்று அலறிஅடித்து ஓடியிருக்கின்றனர்.  பிறகு அந்த சுடுகாட்டு வெட்டியான் அந்த பெண்ணை பத்திரமாக அவளது வீட்டிற்கு அழைத்து செல்ல, வீட்டில் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லையாம். கேட்டதற்கு, இறந்துப் பிழைத்த யாரும் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் அது அந்த குடும்பத்திற்கு ஆகாது என்றும் கூறி அவளை திருப்பியனுப்பிவிட்டார்களாம்.

கேட்கவே கொடூரமாக இருந்தது. பாவம்..!

இதே போன்ற இன்னொரு பெண் செத்துப்பிழைத்த சம்பவம், ஒரு தினசரியில் பிரசுரமானது. அதையும் குறித்து எடுத்துக் கொண்டோம்.

 தினகரனில், ஜனவரி 4, 2009 அன்று வெளியானது

ஆன்மீக சிந்தனையாளர் வேதாத்ரி மகரிஷியின் அவர்களின் கொள்கைகளை பின்பற்றும் திரு.கமலகணேஷ் என்ற பேராசிரியரிடம், இந்த மரண அனுபவத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி பேட்டி கண்டோம். அவர் 'கறந்தபால் முலைப்புகா' என்ற சிவவாக்கியரின் சொல்லை மேற்கோளாகக் காட்டி, இறந்தவர்கள் மீண்டும் பிழைப்பது என்பது நடவாத ஒரு காரியம் என்றும் இந்த அனுபவங்கள் உண்மையாயிருக்க சாத்தியமில்லை என்றும்  திட்டவட்டமாக மறுத்தார்.

இப்படியாக எல்லோரது கருத்துக்களையும் பதிவு செய்துக் கொண்டு அந்த எபிசோடை செய்து முடித்தோம். 'தாவீதின் மரண அனுபவம்' என்ற நம்பினால் நம்புங்களின் இரண்டாம் எபிசோடு 2009, பிப்ரவி மாதர் 3ஆம் தேதி ZEE TAMIL தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. (முதல் எபிசோடாக எனது நண்பர் திரு.மாதவன் என்ற இயக்குனர் 'அருவியில் சுற்றும் ஆவிகள்' என்ற ஒரு எபிசோடை சிறந்த முறையில் இயக்கியிருந்தார்).

இது போன்ற நிகழ்ச்சியில், மக்களுக்காக நாம் ஷூட் செய்து காட்டுவதுபோக, நாம் தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்களையும், நிறைய சந்திப்புகளையும், அனுபவப்படுவது மிக சுவாரஸ்யமாய் இருந்தது. அந்த வகையில், இந்த எபிசோடை நான் இயக்கிமுடித்தபின்பும், இந்த Near Death Experience என்ற விஷயத்தில் இருந்து மீண்டு வர சில நாட்கள் பிடித்தது. அந்நேரத்தில் வடிகாலாய் இருக்கட்டுமே என்று, இந்த N.D.E.யை அடிப்படையாக் கொண்டு பற்றி ஒரு கதையை எழுதினேன். 'பயணம் 12 நிமிடம்' என்ற அந்த கதையை  விரைவில் இந்த வலைப்பதிவில் உங்கள் பார்வைக்காக பதிப்பிக்கிறேன்.

அடுத்த எபிசோடுக்காக என்ன எடுக்கலாம் என்று மும்முரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் மூலம், திரு.சந்திரசேகர் என்கிற ரயில்வே எம்ப்ளாயி ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ரெயில்வேயில் வேலை செய்பவர் என்ன பெரிதாய் சொல்லிவிடப் போகிறார் என்று எண்ணியபடி அவரை சந்திக்க அவரது வீட்டுக்குள் சென்ற நான், அடுத்து 2 மணிநேரம் அவருடன் கலந்துரையாடிய போது, அவர் கூறிய விஷயங்களைக் கேட்டு 'கற்றது கையளவு' என்ற பழமொழியை நினைத்துக் கொண்டேன். அவ்வளவு விஷயங்களைப் பற்றி அந்த மனிதர் பேசினார். அதைப்பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்..!

(தொடரும்...)


Signature

14 comments:

மதுரை சரவணன் said...

அதிசயக்க வைக்கும் உண்மை. நம்ப முடிய வில்லை. தகவலுக்கு நன்றி.

DREAMER said...

நன்றி மதுரை சரவணன்..! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

-
DREAMER

துபாய் ராஜா said...

பரபரப்பான பகிர்வுகள் அருமை.

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

Friend, your posts are interesting. I think M.S.Udayamoorthy also dealt with these aspects in one of his books. BTW, where can i get the book "Death and after" by Justice Krishnaiyyar. I have searched all the book shops in Chennai. Its not available. Any idea..

-Ramesh.

சீமான்கனி said...

உங்கள் தொடர் திக் திக்க பதிவுகளும் விளக்கங்களும் அருமை தொடருங்கள்...திகில் கலந்த வாழ்த்துகள்

சைவகொத்துப்பரோட்டா said...

விரைவில் எழுதுங்கள்,
ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இறந்த பின் உயிர்ப்பது சாத்தியமில்லை.
நான் நினைக்கிறேன் முழுமையாக சாகுமுன் செத்ததாக முடிவெடுத்து விடுகிறார்களோ?
பதினாறு வயதில் தந்தையை இழந்த நான் இப்படி திடீரென்று வந்து விட மாட்டார்களா என்று ரொம்ப நாள் நினைத்தது உண்டு.
சித்திரை திரு நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க !

நாடோடி said...

சில‌ விச‌ய‌ங்க‌ள் ம‌னித‌ மூளைக்கு புல‌ப்ப‌டாத‌தாக‌வே இருக்கின்ற‌து... தொட‌ருங்க‌ள்..

Raghu said...

இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு/சித்திரைத் திருநாள்/ச‌ன்டிவி பிற‌ந்த‌நாள் வாழ்த்துக‌ள் ஹ‌ரீஷ்!

வ‌ழ‌க்க‌ம் போல் இன்ட்ர‌ஸ்டிங், ஆனா சீக்கிர‌ம் முடிச்சுட்ட‌ மாதிரி இருக்கு....அந்த‌ க‌தைக்கு வெயிட்டிங் :)

DREAMER said...

வாங்க ராஜா சார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி..! உங்களுக்கும் தமிழ் புத்தாண்தடு வாழ்த்துக்கள்!

Hello Ramesh,
ThanX a lot for your reference about the author. I'll enquire to my friends about the book you said and will get back to this page.

வாங்க சீமான்கனி,
//திகல் கலந்த வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பரே..! நானும், நல்லநாள் அதுவுமா இந்த மாதிரி ஒரு திகில் தொடர் போஸ்ட் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணிட்டிருந்தேன். ஆனால் உங்கள் வாழ்த்து என்னை உற்சாகப்படுத்தியது.

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
அடுத்த தொடரை விரைவில் எழுதுகிறேன்.

-
DREAMER

DREAMER said...

வாங்க நாய்குட்டி மனசு,
சித்திரை வாழ்த்துக்கு நன்றி..! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..!

வாங்க நாடோடி நண்பரே,
நீங்கள் கூறுவது உண்மைதான். அதுமட்டுமல்ல, மனித மூளையே இன்னும் ஒரு மர்மமான விஷயமாகத்தான் இருக்கிறது.

வாங்க ரகு,
//இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு/சித்திரைத் திருநாள்/ச‌ன்டிவி பிற‌ந்த‌நாள் வாழ்த்துக‌ள் ஹ‌ரீஷ்!//
சன்டிவிக்கு பர்த்டே கொண்டாடிய விதம் அருமை... ஆதாரங்களைத் தேடி போடுறதுக்கே டைம் ஆயிடுது. அது மட்டுமில்லா, பட ரிலீஸ் வேலைகளுக்காக ரொம்பவும் அலைஞ்சு திரிஞ்சிட்டு வந்து எழுதினதால, சீக்கிரம் முடிச்சிட்டேன். அடுத்த பகுதி கொஞ்சம் விரிவா எழுதுறேன்.

-
DREAMER

google.com said...

Welcome To DREAMER

Roja

Selvamani said...

hi harish,
I read all ur postes.
Really excellent work.
Keep up ur work.

I got to know that ur first film is ended.
When will it be in theatres???
ERA??

Anonymous said...

Oh my goodness.. I just came across your Blog and reading all your posts.. Genuinely telling, its really astonishing.. Your way of writing is so good that I have become addicted and reading all your posts from the morning.. Keep up your good work and wishing you success in all your endeavors… Maya.. Colombo, Srilanka

Popular Posts