பிறை நிலவாய் பேப்பரில் இருந்த கதையை
திரைவடிவில் கொண்டுவர
தந்தையாய் உதவிய தயாரிப்பாளரான...
திரு. கே.டி.வீ.ஆர். லோகநாதன் சாருக்கு நன்றி..!
ரேஷன் கார்டில் எங்கள் பெயரில்லையே தவிர
அவர் குடும்பத்தவர்கள் நேசம் பாராட்டிய விதத்தில்
நாங்களும் அவர் குடும்ப அங்கத்தினரானோம்
அவர்கள் அன்புக்கும் அதரவுக்கும் நன்றி..!
எண்ணத்திரையிலிருந்த அம்புலியை
வண்ணத்திரைக்கு வரைந்து கொடுத்த
தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி..!
இதயத்துடிப்பில் வடித்த கதையைப்படித்து
உணர்வுகளேற்றி உயிரைக்கொடுத்து
நடித்துக் காட்டிய நடிகர்களுக்கு நன்றி..!
இப்படத்தின் தனித்தன்மையை கண்டறிந்து
'குடும்பச்சித்திரம்' என்று சான்று வழங்கி
தணிக்கைக் குழுவிற்கு நன்றி..!
வித்தியாச விளம்பர உத்திகளை
பேப்பர், டிவி, ரேடியோ, மொபைல், இண்டர்நெட் என்று
உரிய இடங்களில் உரக்கச் சொல்லி
உச்சம் தொட வைத்த
ஊடக நண்பர்களுக்கு நன்றி..!
நிறைகுறைகளை பக்குவமாய் சொல்லி
இப்படத்தின் வெற்றியை கணித்து
ஆருடம் சொன்ன
விமர்சகர்களுக்கு நன்றி..!
வியாபாரச் சந்தையில்
வெற்றிவியூகமமைத்து
விஸ்வரூப வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்த
விநியோகஸ்தர்களுக்கு நன்றி
அம்புலியை
அனைவரிடமும் கொண்டு சேர்த்து
ஐம்பது நாளைத் தாண்டி அரங்கமளித்து உதவிவரும்
திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றி...
திருட்டு விசிடிக்கு குட்பை சொல்லி
திரையரங்குகளில், 3D கண்ணாடியணிந்து
குடும்பத்தோடு கண்டுகளித்த
பார்வையாளர்களுக்கு நன்றி..!
தான் உழைத்த பணம் கொடுத்து
படம் பார்த்து... பிடித்துப் போனதும்...
'படம் சூப்பராயிருக்கு... போய் பாருங்க..' என்று
வாய்வழி விளம்பரம் செய்து
மெய்வருத்தக் கூலி தந்த
அந்த முகமறியா ரசிகனைப் போன்ற ஒவ்வொருவருக்கும்
அம்புலி திரைப்படக்குழுவினரின் மனமார்ந்த நன்றி..!
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு அன்புடன்
ஹரீஷ் நாராயண் & "அம்புலி 3D" திரைப்படக் குழுவினர்
திரைவடிவில் கொண்டுவர
தந்தையாய் உதவிய தயாரிப்பாளரான...
திரு. கே.டி.வீ.ஆர். லோகநாதன் சாருக்கு நன்றி..!
ரேஷன் கார்டில் எங்கள் பெயரில்லையே தவிர
அவர் குடும்பத்தவர்கள் நேசம் பாராட்டிய விதத்தில்
நாங்களும் அவர் குடும்ப அங்கத்தினரானோம்
அவர்கள் அன்புக்கும் அதரவுக்கும் நன்றி..!
எண்ணத்திரையிலிருந்த அம்புலியை
வண்ணத்திரைக்கு வரைந்து கொடுத்த
தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி..!
இதயத்துடிப்பில் வடித்த கதையைப்படித்து
உணர்வுகளேற்றி உயிரைக்கொடுத்து
நடித்துக் காட்டிய நடிகர்களுக்கு நன்றி..!
இப்படத்தின் தனித்தன்மையை கண்டறிந்து
'குடும்பச்சித்திரம்' என்று சான்று வழங்கி
தணிக்கைக் குழுவிற்கு நன்றி..!
வித்தியாச விளம்பர உத்திகளை
பேப்பர், டிவி, ரேடியோ, மொபைல், இண்டர்நெட் என்று
உரிய இடங்களில் உரக்கச் சொல்லி
உச்சம் தொட வைத்த
ஊடக நண்பர்களுக்கு நன்றி..!
நிறைகுறைகளை பக்குவமாய் சொல்லி
இப்படத்தின் வெற்றியை கணித்து
ஆருடம் சொன்ன
விமர்சகர்களுக்கு நன்றி..!
வியாபாரச் சந்தையில்
வெற்றிவியூகமமைத்து
விஸ்வரூப வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்த
விநியோகஸ்தர்களுக்கு நன்றி
அம்புலியை
அனைவரிடமும் கொண்டு சேர்த்து
ஐம்பது நாளைத் தாண்டி அரங்கமளித்து உதவிவரும்
திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றி...
திருட்டு விசிடிக்கு குட்பை சொல்லி
திரையரங்குகளில், 3D கண்ணாடியணிந்து
குடும்பத்தோடு கண்டுகளித்த
பார்வையாளர்களுக்கு நன்றி..!
தான் உழைத்த பணம் கொடுத்து
படம் பார்த்து... பிடித்துப் போனதும்...
'படம் சூப்பராயிருக்கு... போய் பாருங்க..' என்று
வாய்வழி விளம்பரம் செய்து
மெய்வருத்தக் கூலி தந்த
அந்த முகமறியா ரசிகனைப் போன்ற ஒவ்வொருவருக்கும்
அம்புலி திரைப்படக்குழுவினரின் மனமார்ந்த நன்றி..!
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு அன்புடன்
ஹரீஷ் நாராயண் & "அம்புலி 3D" திரைப்படக் குழுவினர்
9 comments:
கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?
Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html
//வித்தியாச விளம்பர உத்திகளை
பேப்பர், டிவி, ரேடியோ, மொபைல், இண்டர்நெட் என்று
உரிய இடங்களில் உரக்கச் சொல்லி
உச்சம் தொட வைத்த
ஊடக நண்பர்களுக்கு நன்றி..!//
விளம்பர உத்திகளை கண்டு மகிழ்ச்சி+ஆச்சரியம் அடைந்தேன் ஹரிஷ்...இப்போதும் சொல்கிறேன், எனக்கு படம் எந்தளவுக்கு பிடித்திருந்ததோ, அதைவிட இரு மடங்கு விளம்பர உத்திகள் பிடித்திருந்தது.
50வது நாளுக்கு, தெலுங்கு டப்பிங்கிற்கும் வாழ்த்துக்கள் :)
வணக்கம் ரகு,
வாழ்த்துக்கு மிக்க நன்றி...! கரண்ட் கட் நேரங்களில் குழுவாய் உட்கார்ந்து யோசித்ததன் விளைவுதான் வித்தியாச விளம்பர உத்தி... இதில் ஒருவர் இருவர் என்றில்லாமல் எல்லோருடைய ஐடியாவும் உள்ளது... 50ஆவது நாள் வாழ்த்துக்கும் நன்றி..! அபிராமி தியேட்டரில் 4 மணி ஷோவிற்கு குழுவாய் சென்றிருந்தோம். ஹவுஸ் ஃபுல் காட்சியை கண்டு மகிழ்ந்தோம்... ஹாலில் இருந்த தியேட்டர் ஊழியர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களது கருத்தை கேட்டுவிட்டு வந்தோம். புகைப்படம் விரைவில் பதிகிறேன்....
ஐம்பதாவது தின வாழ்த்துகள் ..இன்னும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துகிறேன்
ஐம்பதாவது தின வாழ்த்துகள் ..இன்னும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துகிறேன்
நான் கோவையில் திரையிட்ட மூன்றாம் நாள் இந்த படத்தை குடும்பத்துடன் கண்டு களித்தேன்.அம்புலி ...என் குழந்தைக்கு பிடித்த நல்ல படம்..இன்னும் பார்க்க சொல்லுகிற அவளுக்கு பரீட்சை காரணமாக அழைத்து செல்ல முடியவில்லை....
வணக்கம் கோவை நண்பரே,
குடும்பத்தோடு படத்தை கண்டு களித்ததோடில்லாமல் மீண்டும் படத்தை பார்க்க ஆசைப்படும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... நிச்சயம் உங்கள் குழந்தைக்கு பரீட்சை நல்லபடியாக முடிந்தபிறகு 'அம்புலி' படத்திற்கு அழைத்து செல்லுங்கள்..!
திரைவாழ்வில் மென்மேலும் பல வெற்றிகள் பெற ஹரீஷ் நாராயண் & "அம்புலி 3D" திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி துபாய் ராஜா சார்..!
Post a Comment