Monday, April 16, 2012

MicroFilms - "துவந்த யுத்தம்"


குறும்படங்கள்... ஹைக்கூ கவிதைகளைப் போன்றது... எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கப்படும் மைக்ரோ கலைவடிவங்கள்.

அதிலும் கூடுதல் சிரத்தை, அதீத நிபுணத்துவம் எல்லாம் கலக்கும்போது திரைப்படங்களுக்கு சவால்விடும் வகையில் சில குறும்படங்கள் அமைந்துவிடுவது பேராச்சர்யம்.

அப்படிப்பட்ட குறும்படங்களில் எனது பார்வைக்குவந்த சில படங்களை உங்களுடன் "Microfilms" என்ற பெயரில் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய படம்... 'துவந்த யுத்தம்...'




Mini Profile
Written and Directed by : Ashoke Kumar
Camera : K.G. Venkatesh
Music : Karthikeya Murthy
Editing : M. Bala
Art : Rajaram
Lyrics : Subasri Priya
Running Time : 13:58

எனது நண்பரும், லஷ்மி மூவி மேக்கர்ஸ் திரு. சுவாமிநாதன் அவர்களின் மகனுமான அஷோக் குமார் இயக்கிய படம்... எனக்கும் இவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை... இவரும் என்னைப்போலவே ஐ.டி. துறையை துறந்து சினிமாவில் ஐக்கியமான துறவி...

இவர் எடுத்து முதல் குறும்படமான இந்த 'துவந்த யுத்தம்' படத்தை சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் எங்கள் குழுவினருக்கும் போட்டுக்காட்டினார்... இப்படத்தைப் பற்றிய எனது கருத்தை நீண்ட நாட்களாகவே வலைப்பதிவில் பகிர வேண்டும் என்று ஆவல் இருந்துவந்தது... தற்போது இப்படத்தை Youtubeல் இவர் வெளியிட்டிருப்பதால் இது தக்க சமயம் என்று கருதுகிறேன்.

எதைப்பற்றிய படம்..?

திரைப்படங்களில் சமுதாய பிரச்சினைக்கு தீர்வு காண விழையும் அல்லது அலசும் திரைப்படங்கள் அன்றாடம் பெருமளவில் வெற்றிப்பெறுவதுண்டு... லஞ்சம், ஊழல், அரசாங்க அலட்சியங்கள் போன்றவைகளை பேசும் அப்படிப்பட்ட படங்கள் மக்களின் மனதினுள் இருக்கும் ஆதங்கத்தை பகிர்ந்து... அதற்கான தீர்வை கதாநாயகன் வழங்குவது போல் காட்டப்படும்போது மக்களுக்கு அப்படத்தின்மீது அபிப்ராயம் ஏற்படும்.

ஆனால், 2.30 மணி நேரம் காட்டப்படும் திரைப்படத்தில் அது சாத்தியம்... ஆனால், சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்களில் அத்தகைய சமுதாய உணர்வை தொட்டு அதில் வெற்றியும் பெறுவது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம்... அப்படிப்பட்ட சவாலான முயற்சியை எடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் விருதும் குவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் அஷோக் குமார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

இவரது உணர்வை உள்வாங்கி இவருடன் இணைந்து உழைத்து வெற்றிக்கனி கண்ட இவரது குழுவினர்கள் அனைவருக்கும் இதே பாராட்டுகள் தகும்.

குறும்படம் என்பதால் இதன் கதைச்சுருக்கத்தை நான் கூறத்தேவையில்லை என்று நினைக்கிறேன். கதைப்பதைவிட கண்ணால் கண்டு தெரிந்துக் கொள்வதே சாலச்சிறந்தது...

நடிகர்கள் அனைவவரும் இயல்பாய் நடித்து உணர்வை பகிர்ந்துள்ளனர்...

இசை கார்த்திகேய மூர்த்தி... தரமான இசை.... இவரது பின்னனி இசையும், End Credits பாடலும் இப்படத்திற்கு பெரிய பலம்... குறிப்பாக கடைசியில் வரும் பாடலும், அதில இடம்பெறும் சுபஸ்ரீப்ரியாவின்  வைட்டமின் வரிகளும்...படத்தை மனதில் பதிவு செய்வது நிச்சயம்...

உப்புக்காற்று ஓவியமாய் வெங்கடேஷின் ஒளிப்பதிவு... பாலாவின் படத்தொகுப்பு, ராஜாராமின் கலை... என்று இதில் பங்குபெறும் அத்தனை டெக்னீஷியன்களும் விரைவில் வெள்ளித்திரைக்கு வரத்தகுதிபெற்ற வித்தகர்கள்... நிச்சயம் வருவார்கள்... வாழ்த்துக்களுடன் வரவேற்போம்...

ஏற்கனவே உள்ளூரிலும், வெளியூரிலும் பல்வேறு விருதுகளயும் பத்திரிகைகளின் பாராட்டுக்களையும் குவித்துள்ள இப்படம்... இன்னமும் விருதுகளையும் பார்ப்பவர்கள் நெஞ்சையும் அள்ளும் என்பது திண்ணம்...

துவந்த யுத்தம் : "கால்மணிநேர கடற்காவியம்"

----------------------------------------------------------------------------------

உங்களுக்கு இப்படம் பிடித்திருந்தால்..!

வெளிநாடுகளில் இண்டிபெண்டன்ட் படங்களுக்கு Direct to DVD என்ற விசேஷ வியாபார உத்திகள் மூலம் தயாரிப்பு செலவை ஈட்டிவிடுவார்கள் (நல்ல லாபமும் உண்டு...) ஆனால், இங்கு எடுக்கப்படும் குறும்படங்களை வியாபார ரீதியாய் வெற்றிப்பெற வைக்க நம்மூரில் வழிமுறைகள் இல்லை (அல்லது மிகக்குறைவு) என்பது வருத்தத்திற்குறிய விஷயமே..!  எனவே, இலவசமாய் நாம் கண்டுகளிக்கும் குறும்படங்களுக்கு நம்மால் முடிந்த ஒன்றை செய்யலாம்... அப்படத்தைப் பற்றி ஒரிரு நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிரலாமே..!


Signature

6 comments:

rajamelaiyur said...

அருமையாக உள்ளது .. பகிர்வுக்கு நன்றி நண்பா

DREAMER said...

வாழ்த்துக்கு நன்றி ராஜா...

KVPS said...

good review

DREAMER said...

Thanks Prabu

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல தேர்ந்த பகிர்வு. மிக்க நன்றி.

VampireVaz said...

grt film grt rviw bro!

Popular Posts