Tuesday, April 06, 2010

'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 02


தாவீது கூறவிருக்கும் விஷயங்களை கேட்கும் ஆவலுடன், ப்ரொடக்ஷன் வண்டியில் படப்பிடிப்பு சாதனங்களுடன் சென்னையை அடுத்துள்ள பட்டாபிராமில், மாடர்ன் சிட்டி என்ற ஏரியாவில் தாவீதின் வீட்டிற்கு சென்றடைந்தோம்.

தாவீதுவின் குடும்பத்தினர் எங்களை அன்புடன் வரவேற்றனர். தாவீத், மிக இயல்பாகத்தான் இருந்தான். பேட்டியைத் தொடங்கினோம். அதில் நாங்கள் பேசிக் கொண்ட சில முக்கியமான விஷயங்களை மட்டும் ஒரு லைவ் ஃபீலுக்காக வசன நடையில் எழுதியிருக்கிறேன்.

'சொல்லுங்க தாவீது, உங்களுக்கு என்ன நடந்தது..?'

'நான் 2005ஆம் ஆண்டு, செப்டம்பர் மாசம் 2ஆம் தேதி காலையில, கும்மிடிப்பூண்டியில என் ஃப்ரெண்டை பாக்குறதுக்காக கிளம்பினேன். கவரப்பேட்டை ஏரியாவை க்ராஸ் பண்ணிட்டிருக்கும்போது, ஒரு லாரி என் பைக்மேல வந்து மோதி, என் மண்டையில் பயங்கர அடிப்பட்டு நான் அப்படியே மயக்கமாயிட்டேன்..! கண்முழிச்சி பாக்கும்போது, நான் ஒரு இருட்டான இடத்துல இருக்கிற மாதிரியிருந்தது. எந்த சத்தமுமில்லாத ஒரு அமைதி பிரதேசம் அது..!'

'எவ்வளவு நேரம் அந்த இடத்துல நீங்க இருந்தீங்க..?'

'சரியா சொல்லத் தெரியில..! ஆனா ரொம்ப நேரம் அங்கேயே இருந்த மாதிரி அலுப்பா இருந்திச்சி..!'

'சரி..?'

'அப்புறம் தூரத்துல ஒரு வெளிச்சம் தெரிஞ்சுது..! அந்த வெளிச்சம் கண்ணைக் கூசாம நல்ல தெளிவா தெரிஞ்சுது..'

'ஓ..'

'அப்புறம் அந்த வெளிச்சத்துலருந்து ஏதோ விஷயம் எனக்குள்ள சொன்ன மாதிரி இருந்தது..'

'என்ன சொன்ன மாதிரி இருந்தது..?'

'நீ பூமிக்க வந்த வேலை இன்னும் நிறைய பாக்கியிருக்கு, அதுக்குள்ள இங்க வந்தா எப்படி.. திரும்பி போயிடுன்னு அந்த வெளிச்சம் எங்கிட்ட சொன்ன மாதிரி இருந்திச்சு..'

'என்ன மொழியில சொல்லிச்சு..?'
'மொழியெல்லாம் ஞாபகமில்ல, ஆனா விஷயம் மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சுது..'

'அப்புறம் என்ன ஆச்சு..?'

'அப்புறம், அந்த வெளிச்சம் மறைஞ்சி போயி, மறுபடியும் நான் ரொம்ப நேரம் இருட்டிலியே இருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு வலி தெரிய ஆரம்பிச்சுது..! அந்த வலி வரவர அதிகமாகிக்கிட்டே போச்சு.. கொஞ்சம் கொஞ்சமா குரலகளும் கேட்க ஆரம்பிச்சுது..!'

'என்ன மாதிரி குரல்கள்..?'

'இந்த வாட்டி மனுஷங்க பேசுற குரல்கள்தான்..'

'என்ன பேசிக்கிட்டாங்க..'

'அழுதாங்க.. அதுல அம்மாவோட குரலும் கேட்டுச்சு.. அப்புறம் என் ஃப்ரெண்ட்சுங்க பேசுற குரல்... என்ன பேசினாங்கன்னு ஞாபகம் இல்லை..'

இப்படி தாவீது மேற்சொன்ன விஷயங்களை பேசிமுடிக்கும்போது அவன் முகபாவனை ஒரு குழந்தையைப் போல் இருந்தது. கண்ணோரம் அவனுக்கும் தெரியாமல் மெல்லிதாய் கசிந்துக் கொண்டிருந்த கண்ணீரும், அந்த குழந்தைத்தனமான முகபாவனையும் அவன் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று எங்களுக்கு உணர்த்திக்கொண்டிருந்தது.

அடுத்ததாக தாவீதின் அம்மாவை பேட்டி கண்டோம்.

தன் மகனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆவதற்கு ரெண்டு நாளைக்கு முன்பு, அவன் தாயாருக்கு ஒரு விநோத கனவு வந்திருக்கிறது. அதில், யாரோ அவர் வீட்டு கதவைத் தட்ட, அதை சென்று திறந்து பார்த்தார்களாம், அங்கே ஒரு சவப்பெட்டி இருந்திருக்கிறது. அதை உற்றுப் பார்க்க, அதில் அவர் மகனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாம். கனவு கலைந்து பதறி எழுந்திருக்கிறார். 

இந்த கனவைக் கண்டபிறகு இருப்புக் கொள்ளாத தாவீதின் தாயார், அடிக்கடி மகனுக்காக பிரார்தித்திருக்கிறார். அப்படியும் வருத்தம் குறைந்தபாடில்லை. சரியாக கனவு கண்ட இரண்டாம் நாள் மகனுக்கு ஆக்ஸிடெண்ட் என்று தெரியவந்ததும், அனைவரும் பதறிப்போக, இவர் பிரமை பிடித்தது போல் இருந்திருக்கிறார். ஆட்டோவில் ஒவ்வொரு ஜி.எச். ஆஸ்பத்திரிக்கும் தாவீதுவின் தாயும், தந்தையும் அலைந்து திரிந்து, மாலை 6 மணிக்குமேல்தான் கொளத்தூர் ஆஸ்பத்திரியில் பிரேத குவியலில், ப்ளூ கலர் ப்ளாஸ்டிக் கவர் போர்த்தியபடி மகனின் பிரேதத்தை பார்த்திருக்கிறார்கள்.

விபத்தை நேரில் பார்வையிட்ட ஒரு ஆட்டோக்காரர், தரையில் சிதறிக்கிடந்த தாவீதுவின் மூளையை அவன் மண்டைக்குள் அள்ளிப்போட்டு, ஆட்டோ துடைக்கும் ஒரு துணியால் தலையை மூடி வைத்திருந்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

போஸ்ட் மார்ட்டம் முடித்துவிட்டு பாடியை கொடுக்க எப்படியும் அடுத்த நாள் காலைவேளை ஆகிவிடும் என்று ஆஸ்பத்திரியில் முரண்டு பிடித்திருக்கின்றனர்.

பிறகு, நண்பர்களும், உறவினர்களும், கதறி அழுதுக்கொண்டிருக்க, தாவீதுவின் தாயார் மட்டும் பிரமை பிடித்தவர் போல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி ஏதோ முணக ஆரம்பித்திருக்கிறார்.

அனைவரும் அவரை கவனிக்க, அவர் முணகியது இதுதான்...

'என் புள்ள சாகலை, அவன் எழுந்து வருவான், எங்கூட வீட்டுக்கு வருவான்... என் வீட்டுக்கு நான் அவனை கூட்டிக்கிட்டு போவேன்..' என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

சரிதான் புள்ளைய இழந்த சோகத்துல இந்தம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு..! என்று சுற்றியிருந்த மக்கள் அனுதாபப்பட்டிருக்கின்றனர். ஆனால் அந்த தாயின் முணகல் மட்டும் நிற்கவேயில்லை..!

மறுநாள், காலை ஒரு நண்பர் மூலம் கிடைத்த ஒரு அரசியல் பிரமுகரின் சிபாரிசுக் கடிதத்தின் பலனால், ஒரு டாக்டர் நல்லமுறையில்(!?) சீக்கிரம் பிரேத பரிசோதனை செய்து பிரேதத்தை சீக்கிரம் ஒப்படைப்பதாக கூறி மார்ச்சுவரி அறைக்குள் நுழைந்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை செய்ய தேவையான ஆயத்தங்களோடு பிணத்தை வெட்ட முயலும்போது, அந்த பிணத்தின் கால்விரல் அசைந்திருக்கிறது. இதை நம்பமுடியாமல், டாக்டர் பதறிப்போய் இரண்டு விநாடிகள் அந்த பிணத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு நிற்க, மீண்டும் அந்த விரல் அசைந்திருக்கிறது...!

(தொடரும்...)


Signature

25 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

படு சுவராசியமாய் இருக்கிறது!!!
தொடருங்கள்.

யூர்கன் க்ருகியர் said...

INTERESTING !!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நானும் சின்ன வயசில இறந்து போன ஒருவர் உயிர் வந்து மீண்டதாக கேட்டிருக்கிறேன். அவருக்கும் சுண்டு விரல் தான் முதலில் அசைந்ததாக கூறி இருக்கிறார்கள். மாண்டவர் மீளும் போது விரல் அசைய ஏதேனும் காரணம் உண்டா என் தேட வேண்டும்.

Prathap Kumar S. said...

எப்படிங்க முளையே வெளிய வந்தப்புறமும் பிழைச்சிருக்காரு....நம்ப கஷ்டாமாயிருக்கு...முழுசா எழுதுங்க...

துபாய் ராஜா said...

நாஞ்சில் பிரதாப் சொல்லியிருப்பது போல் மூளை வெளியே வந்த பின்னும் பிழைத்தார் என்பது நம்பமுடியாததாகவே உள்ளது. தகுந்த ஆதாரங்கள் தருவீர்கள் என்ற எண்ணத்தில் காத்திருக்கிறோம் அடுத்த பாகத்திற்கு....

DREAMER said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நன்றி நண்பா..!

வாங்க யூர்கன் க்ருகியர்,
ThanX

வாங்க நாய்க்குட்டிமனசு,
நீங்கள் சொல்வது உண்மைதான், விரல் அசைவில் விஷயம் இருக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன். இதே நிகழ்ச்சிக்காக ஒரு மாந்த்ரீகரை சந்தித்தபோது அவரும் கால்கட்டைவிரல் பற்றி ஒரு விளக்கம் தந்தார்... அதை அவரது சந்திப்பு பற்றி கூறும் பகதியில் எழுதுகிறேன்..!

வாங்க நாஞ்சில் பிரதாப்,
நீங்கள் கூறுவது உண்மைதான், நாங்களும் முழுமனதுடன் ஒப்புக்கொள்ள முடியாமல்தான் இந்த நிகழ்ச்சியை ஷூட் செய்தோம், ஆனாலும், முடிந்தவரை எல்லாத் தரப்பிலும் விசாரித்துக் கொண்டுதான் இருந்தோம்.

வாங்க ராஜா சார் (துபாய் ராஜா),
நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களின் மனநிலையில்தான் நானும் இன்றுவரை இந்த நிகழ்வை பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன். அடுத்த இடுகையிலிருந்து இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களை இணைக்கிறேன்.

நாடோடி said...

ந‌ல்ல‌ போகுது... "ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள்" ச‌ரியான‌ த‌லைப்பு தான்... தொட‌ருங்க‌ள்.

சீமான்கனி said...

படு சுவராசியமாய் இருக்கிறது!!!
நாஞ்சில் பிரதாப் சொல்லியிருப்பது போல் மூளை வெளியே வந்த பின்னும் பிழைத்தார் என்பது நம்பமுடியாததாகவே உள்ளது. தகுந்த ஆதாரங்கள் தருவீர்கள் என்ற எண்ணத்தில் காத்திருக்கிறோம் அடுத்த பாகத்திற்கு....

வழிமொழிகிறேன்....

DREAMER said...

வாங்க நாடோடி நண்பரே,
வாசிப்புக்கு நன்றி..!

வாங்க சீமான்கனி,
தொடர்வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..!

param said...

எனக்கும் ஏறக்குறைய இதேப் போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது நண்பர்களே!

param said...

எனக்கும் ஏறக்குறைய இதேப் போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது நண்பர்களே!

param said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

தலைவரே.. இண்ட்ரஸ்டிங்

DREAMER said...

வாங்க பரமேஸ்வரி மேடம்,
உங்களது Near Death Experience அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்..?! உங்களுக்கு விருப்பம் இருந்தால்..!

DREAMER said...

வாங்க கேபிள் சார்,
வருகைதந்து ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி சார்..! நேரம் கிடைக்கும்போது நம்ம பளாகுக்கு ஒரு எட்டு வந்து போனீங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன். நன்றி!

DREAMER said...

வாங்கே பரமேஸவரி மேடம்,
உங்கள் N.D.E. அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே..!? உங்களுக்கு விருப்பமிருந்தால்..!

DREAMER said...

நன்றி..!

Anonymous said...

இதை என்னால் நம்பவே முடியவில்லை, அவனுடைய தலையில் இப்போதும் அடிபட்ட ஏதேனும் அடையாளங்கள் காணப்படுகின்றனவா? வைத்தியசாலையில் அனுமதித்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் வைத்தியரை நீங்கள் சந்தித்தீர்களா? அவர்களின் தரவுகளையும் இட்டுச் சென்றால் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள்...

Raghu said...
This comment has been removed by the author.
Raghu said...

மூளை மேட்ட‌ர் - கொஞ்ச‌ம் மிகைப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ளோ என்றே தோன்றுகிற‌து ஹ‌ரீஷ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பிரேதப் பரிசோதனை செய்ய தேவையான ஆயத்தங்களோடு பிணத்தை வெட்ட முயலும்போது, அந்த பிணத்தின் கால்விரல் அசைந்திருக்கிறது//

ஆஹா... இன்னிக்கி ராத்திரி தூங்கினாப்ல தான். இப்படி மிரட்டறீங்களே. சூப்பர்ஆ போகுது. ஆனா இன்னும் கொஞ்சம் நீளமா எழுதினா நல்லா இருக்கும்

DREAMER said...

வாங்க Thiurs,
நம்பமுடியாத விஷயம்தான்... அவனுடைய தலையில் நீங்கள் கேட்டதுபோல் ஒரு அடையாளம் இன்றும் இருக்கிறது. அதை இந்த மறுமொழி பகுதியில் எழுதினால் பல பேர்கள் மிஸ் பண்ண வாய்ப்பிருப்பதால், அதை அடுத்த இடுகையில் விவரமாக குறிப்பிடுகிறேன். ஆட்டோ ஒட்டுனர் அகப்படவில்லை, ஆனால் அந்த டாக்டரை தொடர்பு கொண்ட போது, அவர் அரசாங்க பணியில் இருந்துக் கொண்டு டிவியில் பேசுவதற்கு வருப்பமில்லை என்று காரணமே இல்லாமல் பேட்டியளிக்க மறுத்துவிட்டார்.

வாங்க ரகு,
மிகைப்படுத்தி கூறப்பட்டதாகத்தான் எனக்கும் முதலில் தோன்றியது, ஆனால், அவனது தலையை நானே எனது கைகளால் தொட்டுப் பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தை அடுத்த இடுகையில் எழுதியிருக்கிறேன். சீக்கிரம் போஸ்ட் செய்துவிடுகிறேன்.

வாங்க அப்பாவி தங்கமணி,
பிணத்தின் கால்விரல் அசைந்ததைப் படிக்கும்போதே இப்படியிருக்க, அந்த டாக்டருக்கு எப்படி இருந்திருக்கும்..! யோசித்து பாருங்கள்..!

படிப்பவருக்கு எங்கே போர் அடித்துவிடுமோ என்ற பயத்தில் சுருக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்க சொல்லிட்டீங்கள்ல!, அடுத்த இடுகை கண்டிப்பா கொஞ்சம் நீளமா எழுதிறேன்.

Unknown said...

very interesting!

DREAMER said...

Hello Gomy,
ThanX for the visit..!

Anonymous said...

ஹரீஷ், உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள். ஆவலுடன் அடுத்த இடுகையை எதிர் பார்க்கின்றோம்.

Popular Posts