Monday, March 29, 2010

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் - 4 [தொடர்கதை]




பாகம் - 4
இறுதி பாகம்

ONE MESSAGE(S) RECIEVEDக்கு அருகிலிருக்கும் ரீட் பட்டனை டச் செய்தான்.

நெ. 23, ட்ரீம்வே நகர்,
புறவழிச்சாலை,
ஸ்ரீபெரும்பத்தூர் ஹைவே

என்றிருந்தது. ரகு ஒன்றும் புரியாமல் அதையேப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று செல்ஃபோன் ஒலித்து.

நிரூபா காலிங்....

பயமாக இருந்தாலும், விடிந்துவிட்ட ஒரு தைரியத்தில் ஃபோனை எடுத்தான்.

மறுபக்கம் அழுகுரல் கேட்டது.

'..லோ..' என்றான்.

அழுகுரல் நின்று, திடீரென்று ஒரு மாதிரியான பயமுறுத்தும் குரல் கேட்டது.

'டேய், ஏண்டா ஃபோனை எடுக்கலை... என்னை அதுக்குள்ள பிடிக்காம போயிடுச்சா உனக்கு..?'

'நீ...நீ... செத்துட்டே..'

'அதனால என்ன..? உனக்கு உண்மையிலேயே என்னைப் பிடிச்சிருந்தா, நாம ஒண்ணு சேரலாம்..'

'...தென்ன... முட்டாள்தனம்..'

'எதுடா முட்டாள்தனம், நீதானே முதல்லே எங்கிட்ட லவ் யூன்னு சொன்னே..?'

'..மா..'

'அப்ப நீ என்கிட்ட வந்துதான் ஆகணும்..'

'மு..முடியாது..'

'நீ வரலைன்னா, நான் உன்னை விடவே மாட்டேன். தினம் தினம் இரவு நேரத்துல உனக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருப்பேன்'

'.....' ரகு என்னென்னமோ முணகிக்கொண்டிருந்தான்.

'உனக்குத்தான் இரவுநேரத்துல பேய்படம் பாத்து பயப்படுறது ரொம்ப பிடிக்கும்னு சொன்னியே... இனிமே என்னைப் பாத்து பயப்படு..'

'வேணா...'

'அப்போன்னா, நான் சொல்ற மாதிரி செய்... என் மொபைல்ல உனக்கு ஒரு SMS வந்திருக்கு.. அதுல இருக்கிற இடத்துக்கு ஒரே ஒரு தடவை வா...'

'........இல்லைன்னா..?'

'இல்லன்னா..! நான் வருவேன்..' என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பயந்துப்போய் அழுதபடி கட்டிலில் உட்கார்ந்தான்.

செல்ஃபோன் மீண்டும் ஒலித்தது. பயந்துப்போய் நடுங்கினான். இந்த முறை ஒலித்தது. அவனது செல்ஃபோன். தினேஷ் காலிங் என்றிருந்தது.

'ஹலோ..'

'என்னடா ரகு, ஜிம்முக்க வரலியா..?'

'.........'

'என்னடா, என்னாச்சு, உடம்பு சரியில்லியா..?' என்று கேட்க.. ரகு அழ ஆரம்பித்தான்.

'ஹே ரகு, அழாதடா... என்னாச்சு சொல்லு....' என்று கேட்டுக் கொண்டேயிருக்க, ரகு பதிலேதும் கூறாமல் அழுதுக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு...

ரகு கட்டிலில் ஒரமாக சாய்ந்தபடி அழுதுவடிந்த முகத்துடன் சுருண்டு உட்கர்ந்திருக்க, கட்டிலில் மறுபக்கம், தினேஷ் அமர்ந்திருந்தான்.

'டேய், என்னால நம்பவே முடியலடா' என்றான்.

ரகு அவனையே பார்த்தான். மெதுவாக மூக்கை உறிஞ்சிக்கொண்டே எழுந்தான்.

அந்த நிரூபாவின் செல்ஃபோனை எடுத்து கையை தூக்கிப்போடுவது போல் மேலே ஓங்கினான்.

'டேய்... டேய்... என்னடா பண்றே... டேய் நிறுத்துடா..'  என்று தினேஷ் கத்திக்கொண்டிருந்ததை கேட்காமல் சூறத்தேங்காய் உடைப்பது போல் ரகு அந்த செல்ஃபோனை உடைத்தான்.

'என்னாச்சுடா உனக்கு, ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பண்றே..?' என்று தலையில் அடித்துக் கொண்டான்.

'மூஞ்சில்லாம் எப்படியிருக்குப்பாரு... பொம்பளைப்புள்ள மாதிரி அழுதிருக்கே... இரு வரேன்' என்று எழுந்து ஹாலுக்கு வந்த தினேஷ் ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் ரூமுக்குள் நுழைய, தரையில் அந்த செல்ஃபோன் துகள்களெல்லாம் ஒன்று சேர்ந்து, முழுதாக இருந்தது.

தண்ணீர் பாட்டில் தினேஷ் கையிலிருந்து பயத்தில் தானாக கீழே விழுந்தது. ரகு தினேஷைப் பார்த்து மௌனமாய் சிரித்தான். தினேஷ் கண்களை பயம் கவ்வியிருக்க, ரகுவை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு....

இருவரும் பைக்கில் போய்க்கொண்டிருந்தார்கள்...

'நீ பயப்படாதே... இந்த விஷயத்துல ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம். எனக்கு தெரிஞ்ச சாமியாரு ஒருத்தரு இருக்காரு..'

ரகு பைக்கில் பின்னாலமர்ந்த நிலையில் சிரித்தான்...

'ஏண்டா சிரிக்கிறே..! இந்தாளு எந்த நடிகையோடும் படுக்காத சாமியாரு.. ஒரிஜினல்... அவருகிட்டப் போனா இந்த விஷயமெல்லாம் சப்பை மேட்டரு..'

சற்று நேரத்தில் அந்த சாமியார் என்பவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர் பேண்ட் ஷர்ட்டெல்லாம் போட்டிருந்தார்... கண்ணாடியும் அணிந்திருந்தார்.
'உன்னை யாரு தம்பி ரோட்டுல கிடக்குற ஃபோனை எடுக்க சொன்னது. இப்படியா போய் மாட்டுவே...! செத்திருக்கிறது கன்னிப்பொண்ணு, ஆன்ம பலம் அதிகம்அவ்வளவு சீக்கிரத்துல ஆசையை விட்டுக்கொடுக்காது. ப்ச்..! சரி, நான் பாத்துக்குறேன். இப்ப அந்த செல்ஃபோனை வச்சிருக்கியா..' என்று அந்த சாமியார் கேட்க, ரகு அந்த செல்ஃபோனை எடுத்துக் காட்டினான்.

அதை அவர் ஒரு சிகப்புத் துணியில் வாங்கி கைரேகை படாதவாறு பார்த்துக்விட்டுதிருப்பிக் கொடுத்தார். இருவரும் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, எதையோ இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டு பேசினார்.

'நான் மந்திரவாதியில்ல... ஆன்மீகவாதி... அவ்வளவுதான். சாதாரண குடும்பஸ்தன். கவர்மெண்ட் எம்ப்ளாயி, எந்த சூப்பர் பவரும் எங்கிட்ட கிடையாது. எங்கிட்ட மேஜிக்கெல்லாம் எதிர்ப்பாக்காதீங்க. நான் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி, புத்தக அறிவாலயும், சில நல்லவங்க சந்திப்பாலயும், சில விஷயங்களை எப்படி செய்யனும்னு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தெரியும் அவ்வளவுதான். மத்தபடி, எல்லாம் உங்க கையிலதான் இருக்கு. பெருசா எதையும் எங்கிட்ட எதிர்ப்பாக்காதீங்க.. கிளம்புங்க' என்று கூறியவர் எழுந்துக் கொண்டார். ஒரு மஞ்சப்பையில் சில எழுமிச்சம்பழங்களையும், பூக்களையும், கற்பூரங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார்.

தினேஷ் கேட்டான், 'சாமி, இப்ப நாம எங்கே போறோம்?'

'அந்த SMS குறிப்பிட்டிருக்கிற இடத்துக்கு...'

ஆட்டோவில் மூவரும் சென்றார்கள். வழியில் தினேஷ் ATMல் CASH எடுத்துக் கொண்டான்.

SMSல் குறிப்பிட்டிருந்த அட்ரசுக்கு வந்தடைந்தார்கள். அந்த அட்ரஸிருந்த இடம், ஒரு ரியல் எஸ்டேட் ஏரியாவில், முள் கம்பி போடப்பட்டு, முன்பக்கம் மட்டும் காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்த ஒரு காலி மனை. உள்ளே 2 கிரவுண்டு பரப்பளவில், நடுவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டிருத்து. அந்த மண்டபத்தில் ஒரு கல்லறை மார்பிளில் கட்டப்பட்டிருந்தது.

ஆட்டோக்காரன் மூவரையும் ஒருமாதிரிப் பார்த்தான்காசு கொடுத்ததும் உடனே அங்கிருந்து பறந்து சென்றான். மூவரும் உள்ளே வந்தார்கள். சுற்றிலும், எந்த வீடும் இன்னும் கட்டப்படவில்லை. கல்லறையில் பூக்கள் அறைகுறையாய் வாடியும் வாடாமலும் ஒருமாதிரி மணம் வீசிக்கொண்டிருந்தது.

ரகுவிற்கு வயத்தை புரட்டியது.

என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தான். அந்த ஆன்மீகவாதி, சட்டென்று அவன் தோள்களில் கைவைக்க பதறியவனாய் திரும்பினான்.

'தம்பி, பயப்படாதே... முதல்லே தைரியமாயிரு... இது ஒரு கல்லறை அவ்வளவுதான். நீ செய்யவேண்டியதெல்லாம் இந்த கல்லறைக்கு பக்கத்துலியே ஒரு சின்ன பள்ளம் தோண்டு 3 அடிக்கு கம்மியில்லாம இருக்கணும். அதுல இந்த செல்ஃபோனையும், இந்த எலுமிச்சம்பழத்தையும் போட்டுட்டு, பள்ளைத்தை நல்லா மூடிடு. அப்புறம் திரும்பிப் பாக்காம வந்துக்கிட்டேயிரு..' என்றார்.

ரகு திரும்பி தினேஷைப் பார்த்தான். அவனும் தோளில் கைவைத்து தைரியம் கொடுத்தான்.

'நாங்க இங்கேயேதான் இருப்போம். பயப்படாதே... ஒரு பத்தடி தள்ளி உக்காந்துக்கிட்டு உன்னோட நன்மைக்காக நான் சில விஷயங்களை ஜபிச்சிட்டிருப்பேன், நீ இதை தனியா செய்யணும்பா. என்ன? புரியுதா..?' என்று கூறியவர் காலம் தாமதிக்காமல், விலகிக்கொள்ள, தினேஷூம் அவருடன் நகர்ந்து கொண்டான்.

அருகிலிருந்து ஒரு கல்-யும் மரக்கிளையையும் எடுத்துக் கொண்ட ரகு, அந்த கல்லறைக்கு அருகே பள்ளம் தோண்ட ஆரம்பித்தான்.


காற்று கொஞ்சம் அதிகாக வீசிகொண்டிருந்தது. சுற்றிலும் யாருமில்லாமல், ஊமை வெயில் வீசிக்கொண்டிருந்தது.

டம்... டம்... டம்....

ரகுவின் காதில் ஏதேதோ குரல்கள் கேட்டது.

'ஹே ரகு, என்னை உனக்கு உண்மையிலேயே பிடிச்சிருக்கா..'

'அதுலென்ன டியர் டவுட் உனக்கு, லவ் யூ..'

'வ்வ்வ்வாஆஆஆஆஆவ்... லவ் யு டூ..'

டம்... டம்... டம்....

சற்றுத் தொலைவில் அந்த ஆன்மீகவாதி தரையில் சப்பனமிட்டு அமர்ந்து கண்களை மூடி ஜபித்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் காதில் குரல்கள்...

'ஹே, உன்னைப் பாக்கணும்போல இருக்குடா..'

'டோண்ட் வர்ரி, நான் ரொம்ப குட்லுக்கிங், கண்டிப்பா உனக்கு பிடிக்கும் டியர்..'

டம்... டம்... டம்....

பள்ளம் தோண்டிமுடித்து உள்ளே அந்த செல்ஃபோனை எடுத்து ஒருமுறை அதன் வால்பேப்பரில் தெரிந்த நிரூபாவைப் பார்த்தான். திடீரென்று அது ஒலிக்கத் துவங்கியது.

'NIRUPA CALLING..... DON't DO THIS.." என்று தெரிந்தது.

'ரகு... சீக்கிரம் போட்டுட்டு வா..' என்று தினேஷ் பின்னாலிருந்து குரல் கொடுத்தான்.

ரகு தீர்மானமாக, அந்த செல்ஃபோனை உள்ளே பள்ளத்தில் போட்டான். அடுத்ததாக எலுமிச்சம்பழத்தையும் போட்டான். குழியை அவசர அவசரமாக மூடினான். மேலே எறி நின்று மெதித்தான். சட்டென்று திரும்பி நின்றுக்கொண்டான். மூச்சு வாங்கியது. அப்படியே ரோபோட் போல நண்பனை நோக்கி நடந்துவந்தான்.

ஆன்மீகவாதி தெம்புடன் எழுந்து நின்றார்.

'இனிமே பிரச்சினையில்ல, திரும்பி பாக்காம போயிட்டேயிருக்க வேண்டியதுதான்' என்று அவனை அழைத்து சென்றார்கள்.

வீட்டு கேட்டைவிட்டு வெளியில் செம்மண் ரோட்டில் வந்து நின்றார்கள்.

'மெயின் ரோடு வரைக்கும் நடந்துத்தான் போகணும்போலிருக்கு..' என்று ஆன்மீகவாதி கூறிக்கொண்டிருக்க, ரகு மட்டும் ஏதோ யோசனையுடன் இருந்தான். தினேஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.

'அதோ அங்க, ஒரு ஆட்டோ போயிட்டிருக்கு, நான் போய் கூட்டிக்கிட்டி வர்றேன்' என்று அங்கிருந்து ஓடினான்.

ஆன்மீகவாதி ரகுவை நெருங்கினார், 'தம்பி! அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே..! அப்புறம் ஏன் பயப்படுறே..! வா போலாம்..' என்று நடக்க முயலும்போது, அவரது செல்ஃபோன் சிணுங்கியது.

'ஹலோ..' மறுமுனையில் ஆன்மீகவாதியின் மனைவி பேசினாள்.


'இதோ வந்துட்டேம்மா... மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுவேன். நானா.. இங்கே ஸ்ரீபெரும்பத்தூர் கிட்ட இருக்கேன்..' என்று அவரது மனைவியுடன் பேசிக்கொண்டே ஒரு 2 அடி முன் நகர்ந்தார்.

ரகு அவரை தொடர்ந்து நடக்க காலை எடுத்தான், அவனது செல்ஃபோன் ஒலித்தது.

'தினேஷ் காலிங்' என்று வந்தது.

'ஹலோ..'

'டேய், ஆட்டோ பிடிச்சிட்டேன்... ரூட் சரியா நினைவில்லை... அப்படியே கொஞ்சம் நடந்து வர்றீங்களா..?' என்றான்.

'எங்க வரணும்..'

'அப்படியே நீ நிக்கிற ரோட்டுக்கு பின்னாடி ஒரு ரோடு இருக்கு பாரு..' என்றான்.

ரகு திரும்பி பார்த்தான். அந்த கல்லறை தெரிந்தது...

* * * * * *
ஆட்டோவில் தினேஷும், ஆன்மீகவாதியும் போய்கொண்டிருந்தார்கள்.

தினேஷ் அழுதுக்கொண்டிருந்தான்.

'தம்பி, விடுப்பா, அவன் விதி அவ்வளவுதான்... படுபாவிப்பய எவ்வளவு சொல்லியும் அஜாக்கிரதையா திரும்பிப் பாத்துட்டான்.' என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

'அதெப்படி சார் திடீர்னு ஆள் காணாம போயிட்டான். எங்கேதான் சார் போயிருப்பான் அவன்?' என்று மெதுவாக அழுதபடி கேட்டான்.

'அந்த கன்னிப்பொண்ணோட ஆன்மா, பயங்கர வலிமையா இருக்கு... அவனை ஸ்தூலமாவே கொண்டு போயிடுச்சி... அங்க நாம நிக்கிறது நம்ம உயிருக்கேக் கூட ஆபத்தா போயிடும். அதான் உன்னை சீக்கிரம் அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுப்பா..' என்றார்

* * * * * *
நெ. 23, ட்ரீம்வே நகர்,
புறவழிச்சாலை,
ஸ்ரீபெரும்பத்தூர் ஹைவே

என்ற அட்ரஸிலிருந்த அந்த கல்லறை ஆள் அரவமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. அந்த கல்லறைக்குள்ளிருந்து ஒரு புல்லாங்குழல் ரிங்டோன் மண்ணுக்குள் அமுங்கியபடி கேட்டுக்கொண்டிருக்க, அருகிலிருந்து கல்லைறைக்குள்ளிருந்து வேறொரு குரல் கேட்டது.

'நோ.. நோ.. என்னை விட்டுடு... நான் போகணும்.. ப்ளீஸ்... நோ... நான் சாகமாட்டேன்... எனக்கு பயமாயிருக்கு... ப்ளீஸ்.. நிரூபா... நோஓஓஓஓஓஓஓ'

- முடிந்தது -


Signature

37 comments:

ரிஷபன் said...

கதை பயங்கர த்ரில். இதை ஏன் பத்திரிகைகளுக்கு முயற்சிக்கவில்லை?

Ashok D said...

எக்ஸ்பிரஸ் & interesting :)

DREAMER said...

வாங்க ரிஷபன்,
//கதை பயங்கர த்ரில்.//
பாராட்டுக்கு மிக்க நன்றி!
//இதை ஏன் பத்திரிகைகளுக்கு முயற்சிக்கவில்லை?//
இந்த கதையை வேறு வடிவத்தில் மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் முயற்சிகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.

------------------------------------------------

வாங்க அஷோக்,
//எக்ஸ்பிரஸ் & interesting :)//
ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

-
DREAMER

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஆவி பேய், பிசாசு எல்லாம் பொய்ன்னு முடித்திருந்தா நல்லா இருந்திருக்கும். still superb story. மந்திரவாதி தான் வேணும்னு செயராரோனு நினைத்தேன் .

சீமான்கனி said...

ஆஹா...ஒரு திகில் படம் பார்த்த எபெக்ட்...
நல்ல ரசிக்கும் படியா எழுதி இருக்கீங்க கண்ணுல படம் புல்லா ஓடுற மாதிரி இருக்கு கூடவே நானும் ஓடினேன்...நானும் இரவில் சில நேரம் பேய் படம் பார்த்து உறங்குவதுண்டு...!!!ஐயோ என் செல்போன் ஒலிக்குது...!!!
:)))
இது ஒரு குறும் படமா வந்தா நல்ல இருக்கும் விரைவில் இதை வேறொரு கோணத்தில் பார்க்க ஆவல்......பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்..

Raghu said...

//எந்த நடிகையோடும் படுக்காத சாமியாரு//

இதை த‌விர்த்திருக்க‌லாம் ஹ‌ரீஷ்.

ரொமான்ஸ், த்ரில், ஹார‌ர்னு எல்லாமே க‌ல‌ந்து க‌ட்டி எக்ஸ‌ல‌ன்டா ப‌ண்ணியிருக்கீங்க‌, நான் நேத்துல‌ருந்தே, அடுத்த‌ பாக‌ம் வ‌ந்தாச்சான்னு ப்ளாக் ப‌க்க‌ம் வ‌ந்து வ‌ந்து போய்கிட்டிருந்தேன். க‌டைசியில‌ முடிவு கொஞ்ச‌ம் யூகிக்க‌ முடிஞ்சாலும் (ர‌கு திரும்பிபார்ப்ப‌து), ப‌ய‌ங்க‌ர‌ ஃப்ளோ!

ந‌ல்ல‌வேளை 'நிரூபா'ங்க‌ற‌ பெய‌ர்ல‌ யாரும் என‌க்கு ஃப்ரெண்ட் இல்ல‌...;))

நாடோடி said...

க‌தை ரெம்ப‌ திரிலிங்க‌ போச்சுங்க‌.. சூப்ப‌ர் ஹ‌ரீஷ் ரிஷ‌ப‌ன் நினைத்த‌தை தான் நானும் நினைத்தேன்.

ப.கந்தசாமி said...

என்னங்க இப்பிடி பண்ணிட்டீங்க, இப்பவே சரியாத்தூக்கம் வரமாட்டேங்குது. உங்க பதிவ வேற படிச்சாச்சு. இனி எப்படீங்க தூங்கறது?

DREAMER said...

வாங்க நாய்க்குட்டி மனசு,
திகிலாவே இருக்கட்டுமேன்னுதான் அப்படி முடிச்சேன்..! வாழ்த்துக்கு நன்றி!!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

வாங்க சீமான்கனி,
நானும் அப்படி இரவு வேளைகளில் பேய் படம் பார்த்து ஜூரம் வந்து தூங்கிய அனுபவங்கள் உண்டு. கண்டிப்பாக விரைவில் இதை வேறுகோணத்தில் எதிர்ப்பாருங்கள். உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

DREAMER said...

வாங்க ரகு,
நேத்து காலையிலேயே போஸ்ட் பண்ண வேண்டியது..! கொஞ்சம் வேலை அதிகமாக இருந்த காரணத்தினால், இரவுதான் போஸ்ட் செய்ய முடிந்தது! தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்க பேரை யூஸ் பண்ணி எழுதுன முதல் ஹாரர் கதை ஹிட்..(நினைக்கிறேன்!)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

வாங்க நாடோடி,
வாழ்த்துக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றிங்க! நண்பர் ரிஷபனிடம் கூறியதைப் போல் விரைவில் இதை வேறு வடிவில் விரைவில் கொண்டு வருகிறேன்!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

வாங்க Dr. P. Kandasamy,
தூக்கம் வரும் சார், செல்ஃபோனை ஆஃப் பண்ணிடுங்க, எந்த நிரூபாவும் நம்மளை பயமுறுத்த மாட்டாங்க..!

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

சைவகொத்துப்பரோட்டா said...

அட்டகாசம் ஹரீஷ்!!!!
திக்....திக்....கதை
அருமை, வாழ்த்துக்கள்.

DREAMER said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நன்றி நண்பா..!

-
DREAMER

KVPS said...

!!YOU'RE BACK !!dadam damdadam

Anonymous said...

kalakkal sir. nan en frnds kku ellam itha blog address ha send pani padika sonnen. superb..

DREAMER said...

வாங்க பிரபு,
இந்த கதைக்கு டெர்மினேட்டர் தீம் மியூஸிக்கெல்லாம் வாசிச்சிட்டீங்க! சரி, நானும் ஆர்னால்டு ஸ்டைலில் 'ஆஸ்டலவிஸ்டாபேபி'ன்னு ஒரு கதை எழுதிடுறேன்!

வாங்க 'நான்ரசித்த' நண்பரே,
கதையைப் படித்து ரசித்ததோடு மட்டுமில்லாமல், உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து வாருங்கள் நண்பரே! நன்ற!

-
DREAMER

Raghu said...

//உங்க பேரை யூஸ் பண்ணி எழுதுன முதல் ஹாரர் கதை ஹிட்//

அதான் ஹ‌ரீஷ் என‌க்கும் ஆச்ச‌ரிய‌மா இருக்கு! ஆனாலும் உங்க‌ளுக்கு ரொம்ப‌த்தான் தைரிய‌ம்...:))

DREAMER said...

ரகு,
இந்த கதைக்கு உங்க பேரை யூஸ் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணிச்சு..! காரணம், உங்க பேச்சுலர் லைஃப்-தான்... மத்தபடி இதுல பயப்பட என்ன இருக்கு ரகு! இப்போ, you are a lucky icon to me இல்லியா..!

-
DREAMER

Anonymous said...

ஹரீஷ், சான்சே இல்ல....!
கதை கலக்கல். ஒவ்வொரு காட்ச்சியும் அப்படியே கண்முன்னாடி தத்ரூபமா விரியுற மாதிரி இருக்கு. எழுத்துலயே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம்....என்னன்னு சொல்ல? சும்மா பின்னி பெடலெடுக்குறீங்க!
எல்லாத்தையும் விட இது.....
//'ஏண்டா சிரிக்கிறே..! இந்தாளு எந்த நடிகையோடும் படுக்காத சாமியாரு.. ஒரிஜினல்... அவருகிட்டப் போனா இந்த விஷயமெல்லாம் சப்பை மேட்டரு..'//
எப்படிங்க.....சொல்லவே இல்ல?!
உங்க திகில் படங்கள் (கதைகள்) நான்-ஸ்டாப்பா போக வாழ்த்துக்கள்!

DREAMER said...

வாங்க ஹரிஜி,
அதென்னமோ திகில் கதைன்னா ஈஸியா வருது..! வந்திருந்து 4 பாகத்தையும் பொறுமையா படிச்சு ஊக்குவிக்கிற உங்களே மாதிரி நண்பர்களின் ஆதரவால், தொடர்ந்து எழுத முடியுதுஜி! தொடர்ந்து வாருங்கள்..! நன்றி!

-
DREAMER

துபாய் ராஜா said...

அனைத்து பாகங்களும் அருமை நண்பரே...

மீட்டிங், அவசர வேலைகளுக்கிடையே கொஞ்சம், கொஞ்சமாக படித்தேன். மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதை படித்தவுடன் நான் எழுதின திகில் கதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

கதைகள் தொடரட்டும்.

தொடர்ந்து கிளப்புங்கள் பீதியை...

sundar............................. said...

Sir neenga aavi illaiyea...
Superb thril...kalakringa....

Anonymous said...

Hi Dreamer, Daily ethavathu interesting blog padikirathu en vazhakkam. mostly differenta irukkum blogsa thaniya en laptopla save panirukken, athematri than unga intha kathayayum padichen, wowwwwwwwwww, romba nalla ezhuthirukinga, oru unmaya sollunga, intha kathaikku enna inspiration???? nichayama muzhu karpanainu sollidathinga... infact, enakkum romba naala ethavathu kathai ezhutha aasai, unga intha kathaya padichathum, ipadi ellam kuda simple tamilla kathai ezhutha mudiyumnu, padikirappo, ennalum ezhutha mudiyum enra nambikkai varugirathu, kudiya seekiram nanum ezhutha try pana pogiren... thanks...

my mail id is gautam.sathish@gmail.com, we will be in touch take care, innum neraya kathai ezhuthunga.... expecting so much like this from u...

google.com said...

திக்....திக்....கதை பயங்கர த்ரில்

பயமாயிருக்கு.

Roja

DREAMER said...

வாங்க துபாய் ராஜா சார்,
என்ன இப்படி சொல்லிட்டீங்க, உங்க குட்டிச்சாத்தான் கதையை இன்னிக்கித்தான் படிச்சேன்! நானே உங்ககூட அந்த பைக்ல டிராவல் பண்ண மாதிரி அருமையா ஃபீல் ஆச்சு! மீட்டிங் வேலைக்கு மத்தியிலும் கதையை படித்ததற்கு மிக்க நன்றி!
உங்கள் சொற்படி தொடர்ந்து பீதி கிளப்புகிறேன்! தொடர்ந்து வாருங்கள்! ஊக்கத்திற்கு மிக்க நன்றி!


வாங்க சுந்தர்,
//neenga aavi illaiyea...//
என்னங்க கடைசியில என்னையே ஆவியாக்கிட்டீங்க! எனக்கு ரெண்டு காலும் இருக்கு! வாசிப்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

DREAMER said...

வாங்க இமை,
கதையை படித்து ரசித்ததற்கு மிக்க நன்றி! இந்த கதைக்கு இன்ஸ்பரேஷன் என்று சொல்லவேண்டுமென்றால், நான் BPOவில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது, என் நண்பர் ஒருவருக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது, அப்போது, அவர் தனது வருங்கால மனைவியுடன், ஃபோனில் மணிக்கணக்கில் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர் பேசுவதுபோல் கதையின்நாயகன், வழியில் கிடைக்கும் ஃபோனில் இறந்த பெண்ணுடன் அவள் இறந்ததும் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பது போல் எழுதினேன்.

//ipadi ellam kuda simple tamilla kathai ezhutha mudiyumnu, padikirappo, ennalum ezhutha mudiyum enra nambikkai varugirathu//
என் எழுத்தும் ஒருவரை எழுத வைக்கிறது என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி

//kudiya seekiram nanum ezhutha try pana pogiren...//
எழுதிவிட்டு தெரிவியுங்கள்..! உங்கள் கதையை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

//expecting so much like this from u...//
ThanX a lot for your appreciation...

DREAMER said...

வாங்க ரோஜா,
//பயமாயிருக்கு.//
கதை படித்த்தில், உங்களுக்கு த்ரில் முழுமையாக கிடைத்ததில் மகிழ்ச்சி! நன்றி!

-
DREAMER

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐயோ...சூப்பர் thriller . நல்லா விறுவிறுப்பா கொண்டு போய் இருக்கீங்க. Guess பண்ண முடியாத படி இருக்கு உங்க எழுத்து. சூப்பர். வாழ்த்துக்கள்

DREAMER said...

வாங்க அப்பாவி தங்கமணி,
கதையை ரசித்து படித்து, எழுத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

http://maidenpost.wordpress.com/ said...

இது சூப்பர் கதை, இதுவே திரைக்கதையாக,
ஹரீரீஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் (ஆவி கூப்பிடும் எஃபெக்ட் வருதா???)

உங்களுக்கு கதை எழுதுவது ஈஸினு நினைக்கிறேன், திரைக் கதை, வசனத்துடன் எப்படி தரப் போறீங்கனு ஆவலாக உள்ளது???

wow ! ! Super Thrillllllllllllll..........

try varieties also :) I see more detective and horror contents in ur blog..... (இதுவரைப் படித்தது எல்லாம் பயம் தொற்றிக் கொள்ளும் கதைகளாகவே இருக்கிறது)

தமிழ் சினிமாவே இங்கே ஒரு பாரதிராஜாவும், பாலசந்தரும் கலந்த ஒரு இயக்குனர் காத்துக் கொண்டு இருக்கிறார், உன் அழைப்புக்காக....

குட் லக் ஹரீஷ் ! !

DREAMER said...

வாழ்த்துக்கும் அன்புக்கும் எதிர்ப்பார்ப்புக்கும் மிக்க நன்றி Maidenpost..! கண்டிப்பாக Varietyக்கு முயற்சி செய்கிறேன். சிகரத்தோடும், இமயத்தோடும் ஒப்பிட்டு மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்..! அன்புக்கு நன்றி! சீக்கிரமே வெள்ளித்திரையில் கதை சொல்கிறேன்.

-
DREAMER

Anonymous said...

Marvelous story.. You are Amazing Mr.Hareessh..

Ragu
ragupathygj@gmail.com

Kiruthigan said...

சூப்பர் சார்...

VampireVaz said...

I have a colleague named Nirupa.. Ini epadi avala pakrathu Hareesh..... :) nice one though

DREAMER said...

ஹாய் Vas,
I too have a friend called Nirupa... but she doesn't read stories... தப்பிச்சேன்..! இல்லண்ணா, என்னை திட்டி தீர்த்திருப்பா...

-
DREAMER

Swe said...

Hareesh
Extraordinary....eppadiyum oru 20 times mela padichu irupen intha storya...sema sema.....

my best wishes.......

Swetha

DREAMER said...

வணக்கம் ஸ்வேதா,
நானும் இக்கதைகளை பலமுறை படித்து பயப்பட முயற்சித்திருக்கிறேன். நீங்களும் அதேபோல முயற்சித்ததில் மிக்க மகிழ்ச்சி..! வாழ்த்துக்கு நன்றி..!

-
DREAMER

gopal said...

nalla thril kathai

Popular Posts