ஒரு முழு புத்தகமாய் நாவல்....
சில பக்கங்களில் சிறுகதை
ஒரு பக்கத்தில் ஒரு கதை...
இப்படி எத்தனையோ விதமாக கதைகளை நாம் படித்து ரசித்து வருகிறோம்... 'சில விநாடிக்கதை' என்று ஒரு வடிவம் இருந்தால் எப்படி இருக்கும்... இதை யோசித்துப் பார்க்கும்போது சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு வார இதழில் 'போஸ்ட் கார்டு கதைகள்' என்று ஒரு போட்டி வைத்திருந்தார்கள். அதில் வெற்றிபெற்ற கதைகள் பிரசுரமாகியிருந்தது... இன்று போஸ்ட் கார்டு செய்யும் வேலையை SMSகள் செய்து வருவதால்... SMS கதைகள் என்று ஒரு வடிவம் இருந்தால் எப்படி இருக்கும்... என்று தோன்றியது...
இன்று SMSகளில் எத்தனையோ வகையான விஷயங்கள் பகிரப்படுகிறது... சேட்டிங்... டேட்டிங், க்ரீட்டிங்ஸ்... ரெயில்வே, சினிமா, ஃப்ளைட் டிக்கெட் இப்படி பல... இதில் கதையும் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றவே... இணையத்தில் உள்ள பிரபல SMS சிலவற்றை தேடிப்பார்த்தேன்... அதில் ஏற்கனவே SMSகளில் சில குறுங்கதைகள் நகைச்சுவையுணர்வுடன் வந்துள்ளதை தெரிந்துக் கொண்டேன்... அவைகளை கீழே பகிர்ந்துள்ளேன்...
ஒரு கட்டுரையில் சுஜாதா அவர்கள் உலகின் மிகச்சிறிய திகில் கதை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்... அது Fredric Brown என்பவரால் எழுதப்பட்ட 'Knock' என்ற சிறுகதை(?)
-----------------------
Knock
The last man on Earth sat alone in a room. There was a knock on the door...
'உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் அமர்ந்திருக்க... யாரோ கதவை தட்டினார்கள்...'
-----------------------
இந்தளவுக்கு சிறிய வடிவில் போதுமான கதை விவரங்களை கூற முடியாததால்... இதற்கு அடுத்த கட்டமான Flash Fiction என்ற categoryக்கு வருவோம்... இதற்கு ஏகப்பட்ட விதிமுறைகளை கூறுகிறார்கள்... சரியாக 55 வார்த்தைகள்... 300 வார்த்தைகள் என்று நிறைய விதிகள் உள்ளது... நாம் விதிகளை சற்றே புறந்தள்ளி... முடிந்தவரை சுருக்கி... முடிந்தவரை நீட்டி கதை சொல்லி முயற்சித்து பார்த்தோமானால்... இது போன்ற கதைகள் ஒரு SMSல் கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக உள்ளது... நான் இண்டர்நெட்டில் தேடியபோது கிடைத்த ஒரு சில குட்டிக்கதைகள்...
---------------
தூதன்...
மரணப்படுக்கையிலிருக்கும் சைனீஸ் நண்பரை பார்க்க இந்திய தூதுவர் மருத்துவமனைக்கு வருகிறார்...
அவரிடம் சைனீஸில் ஏதோ உரக்க சொல்ல பிரயத்தனப்பட்டு அந்த சைனீஸ் இறந்துவிடுகிறார்.
இறுதி ஊர்வலத்தில் அவர் சொன்ன சைனீஸ் வாக்கியத்தை அருகிலிருப்பவரிடம் மொழிப்பெயர்த்து சொல்லுமாறு இந்திய தூதுவர் விசாரிக்க...
அதன் அர்த்தம்...
'நீ என் ஆக்ஸிஜன் குழாய்ல நின்னுட்டிருக்கே...'
--------------
டெடி
காதலன் காதலிக்கு ஒரு 'டெட்டி பொம்மை' பரிசளித்தான்
'நான் கேட்டது வெட்டிங் ரிங்தானே... இது எதற்கு..' என்று அந்த பொம்மையை தூக்கியெறிந்தாள்.
அதை எடுக்க போகும்போது சாலையில் அடிப்பட்டு காதலன் இறக்கிறான்
அந்த பொம்மையை கட்டிக்கொண்டு காதலி அழ... பொம்மையிலிருந்து ரெக்கார்ட் செய்யப்பட்ட பாட்டு ஒலித்தது...
I LOVE YOU... HERE IS THE WEDDING RING IN MY POCKET என்று திரும்ப திரும்ப பாடியது
--------------
கண்ணம்மா...
ஒரு இளைஞனும் ஒரு குருட்டுப் பெண்ணும் இணைபிரியா காதலர்கள்...
பெண்ணுக்கு யாரோ கண்தானம் செய்ய... பார்வை பெறுகிறாள்
அடுத்த நாள் காதலனைப் பார்க்க... அவன் குருடன் என்று தெரிய வருகிறது...
அவனது காதலை மறுக்கிறாள். கடிதம் எழுதிவைத்துவிட்டு காதலன் சென்றுவிடுகிறான்.
கடிதத்தில் 'என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்' என்று கிறுக்கலாய்...
--------------
இது போன்ற குறுங்கதைகளை, கதை என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் ஒரு குட்டி சீக்வென்ஸ்-க்கு உண்டான அத்தனை தகுதிகளும் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இது போல் ரெகுலராக எழுதிப் பழகினால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது... இதன் முக்கிய அம்சம்... கடைசி வரியில்தான் கதை முழுதாய் புரிய வேண்டும்... கிட்டத்தட்ட ஹைக்கூ கவிதையைப் போல்..
ஃபிலிம் மேக்கிங் ஆர்வமுள்ளவர்கள்... இப்படிப்பட்ட குட்டி கதைகைள மொபைலிலோ... அல்லது ஹேண்டிகேமிராவிலோ படம் பிடித்தும் பழகலாம்...
நான் எனது முதல் படமான 'ஓர் இரவு'-ன் விளம்பரத்திற்கு இப்படி ஒரு சின்ன SMS முயற்சி செய்திருந்தேன்... அதன் குறுங்கதை வடிவங்கள் இதோ...
--------------
திகில் புத்தகம்
மழையிரவில் ஒரு பழைய புத்தக கடையில் ஒருவர் நுழைந்தார்...
'நல்ல திகில் புத்தகம் இருக்கா..?' என்று கேட்க, கடைகாரர் ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தார்...
'இது நல்லா திகிலா இருக்குமா..?'
கடைகாரர் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு
'நானே பல தடவ படிச்சிருக்கேன் சார்..' என்றார். ஆனால் வாடிக்கையாளர் இன்னும் நம்பிக்கை வராதவராய்... 'அப்படியா..? எத்தனை தடவை படிச்சிருக்கீங்க..?' என்று கேட்க
'சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை... செத்ததுக்கப்புறம் 7 தடவை...'
--------------
ராசியான டாக்டர்
ஒருவர் : நீங்கதான் எங்க கழக விழாவுக்கு இந்தமுறை சீஃப் கெஸ்ட்-ஆ வரணும்
டாக்டர் : அப்படியா.. நல்லது...
ஒருவர் : ஆமா சார்... எங்க கழக உறுப்பினர்களில் அதிகம் பேர் உங்களால வந்து சேர்ந்தவங்கதான் சார்.
டாக்டர் : அப்படியா...? ரொம்ப மகிழ்ச்சி.. உங்க கழகத்தின் பெயர்..?
ஒருவர் : ஆவிகள் முன்னேற்ற கழகம்...
--------------
எனது நண்பர் சொன்ன ஒரு சம்பவத்தை குறுங்கதையாக எழுதிப்பார்த்தேன்
பெஞ்சுமார்க்
ஜனரஞ்சகமான அந்த புறநகர் ஸ்டேஷனில் கூட்டம் வழிந்துக் கொண்டிருந்தது. ரயில் வர நேரமிருந்ததால் கால்கடுக்க நடந்து வந்த நான்... உட்கார இடம் தேடினேன்... எல்லா பெஞ்சும் ஹவுஸ் ஃபுல்
ஒரு பெஞ்சில் மட்டும் ஒரு நாய் தனியே படுத்திருந்தது... அருகில் நிறைய இடம் இருந்தது... உட்காரலாம் என்று சென்றால் மேலே ஒரு பலகை...
'இந்த பெஞ்சு... ரெயில்வே எம்ப்ளாயிசுக்கு மட்டும்'
நாய் என்னை முறைத்தது...
--------------
சிறுவயதில் நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தின் இன்னொரு குறுங்கதை வடிவம்...
வேடிக்கை
ரயிலுக்கு காத்திருந்தேன்.
எதிர் ஃபளாட்ஃபாரத்தில் ரயில் நுழைந்துக் கொண்டிருந்தது...
ஒரு ஆட்டுக்குட்டி தண்டவாளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க... காப்பாற்ற நினைப்பதற்குள் அந்த ரயில் ஆட்டுக்குட்டியை பதம் பார்த்து நின்றது.
வெண்டார்ஸ் கம்பார்ட்மெண்டிலிருந்து ஒருவர் வெளியே தண்டவாளத்தில் குதித்தார்...
ஆட்டுக்குட்டியின் ஈரல் பாகம் தனியே விழுந்திருக்க அதை எடுத்து தனது பைக்குள் இருக்கும் டிஃபன் பாக்ஸில் வைத்துக் கொண்டு மீண்டும் ரயிலேறினார்...
ரயில் சங்கூதிக்கொண்டே கிளம்பியது...
--------------
அடுத்த ஒரு தொகுதியில் இன்னும் சில குறுங்கதைகளுடன் சந்திக்கிறேன்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
Image Courtesy : http://www.ipernity.com
12 comments:
இளம் கதாசிரியர்களுக்கு ஒரு ஊக்கச்சத்து கொடுக்கறீங்க நல்லது ஹரீஸ்....
நிழல் மட்டும் இணைய அவள் விளகியே செல்கிறாள் ...
புதுசா கதை எழுத நினைப்பவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் பகிர்வு. நன்றி.
வணக்கம் தினேஷ்குமார்,
குறுங்கவிதையுடனான உங்கள் கமெண்ட் அற்புதம்...
வணக்கம் லஷ்மி மேடம்,
பதிவை படித்து ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி...!
superlative mini short stories as usual bro!
superlative mini short stories as usual bro!
பின்னூட்டமா எழுத ஒரு சின்ன கதை ட்ரை பண்ணேன் ஹரிஷ்......கொஞ்சம் மொக்கையா இருக்கோன்னு தோணுச்சு...விட்டுட்டேன் :(
உங்கள் தொகுப்பு ரொம்ப அருமையாக
உள்ளது. மிகுந்த ஊக்கம் அளிப்பதாக
உள்ளது. வாழ்த்துக்கள் ஹரிஷ்.
Hello Vaz,
Thanks for your wishes...
வணக்கம் ரகு,
மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை... எனக்கு உங்க எழுத்தில்
நம்பிக்கையிருக்கு... So pls post it...
வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன்,
பதிவை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!
அன்பின் ஹரீஷ்.. உங்கள் பதிவுக்கு நான் வருவது முதல்முறை... அருமையான பதிவு சகா... அத்தனை கதைகளுமே சுவாரஸ்யம்... வாத்தியார் செய்து பார்த்த பரீட்ச்சார்த்த முயற்சிகள்தான் எத்தனை எத்தனை..
உங்கள் நம்பிக்கைக்காக ஹரிஷ்.
**********
அவனும் சுஜாதா ரசிகன்தான். இரண்டு நாட்கள் முன்பு அவனுக்கு 'எதையும் ஒரு முறை' புத்தகத்தை கொடுத்திருந்தேன். நேற்றுதான் வாசித்து முடித்திருந்தான். நேற்றிரவிலிருந்தே, இதுவரை செய்யாத ஏதாவது ஒன்றை முயற்சி பண்ணி பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தான்.
பாவி! இப்படி பண்ணி தொலைப்பான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். அவன் கையில் கத்தி. சட்டையில் ரத்தம்! வயிற்றில் இரண்டு முறை மாறி மாறி குத்தியிருக்கிறான். முதல் முறை இரண்டு செண்டிமீட்டர் இருந்திருக்கலாம். கத்தியில் இருக்கும் ரதத்தின் அளவை பார்க்கும்போதுதான், இரண்டாம் முறை குத்தியதில் குறைந்தபட்சம் ஐந்து செண்டிமீட்டர் வயிற்றினுள் கத்தி எட்டி பார்த்திருக்கிறது என்பது உரைக்கிறது.
போலீசுக்கு சொல்லலாமா? அதுவரை உயிர் இருக்குமா? தெரியவில்லை. எப்படியானாலும் நாளை தினத்தந்தி வாங்க மறந்து விடாதீர்கள். கண்டிப்பாக இந்த சம்பவத்தை பற்றி செய்தி வரும். 'ஐயோ பாவம்' என்றோ 'ச்சுச்சூ' என்றோ உச் கொட்டி அடுத்த பக்கத்திற்கு போய்விடுங்கள். நானும் இவ்வளவு நாளாக அதைத்தான் செய்துகொண்டிருந்தேன்.
போதும். இதற்கு மேல் என்னால் சொல்லமுடியவில்லை. அவன் குத்தியதில், இப்போது எனக்கு ரத்தம் இன்னும் அதிகமாக வெளியேற ஆரம்பித்திருக்கிறது....லேசாக மயக்கமாகவும் இருக்.........
**********
"மரண" மொக்கை என்றால் சாரி ஹரிஷ் :)
இன்னும் கொஞ்சம் ஷார்ட்டா இருந்திருக்கலாம் :(
சூப்பர் குறுங்கதை அண்ணா நன்றாகவும் சுவரிசமாகவும் உள்ளது அண்ணா
Post a Comment