இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் சைவகொத்துப்பரோட்டா
அவர்களுக்கு எனது நன்றி.
எனக்கு பிடித்த 10 பெண்களை மட்டுமே (தலைப்பின் காரணமாக) இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தலைப்பை 'எனக்கு பிடித்த 100 பெண்கள்' என்று மாற்றினால் ஒரு தொடரே எழுதலாம். பரவாயில்லை..! வருஷாவருஷம் பத்துபத்தா சொல்லலாம்.

பூங்குழலி
எனது ஆஃபீஸ் நண்பர் ஒருவர் இந்த புக்கை படிச்சிபாருய்யா நல்லாருக்கும்னு ஒரு பைண்டிங் புத்தகத்தை கொடுத்துட்டாரு. புக் சைஸைப் பாத்து என்னடாதுன்னு மலைச்சிப் போய் படிக்க ஆரம்பிச்சா... அட சூப்பரு..! "பொன்னியின் செல்வன்"ங்கிற அந்த புக்குல வர்ற பூங்குழலிங்கிற கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போனது. என்னடா உயிரில்லா கதாபாத்திரத்தை இந்த லிஸ்டுல போட்டிருக்கேனேன்னு நினைக்காதீங்க... இந்த பூங்குழலி விஷயத்தில் எனக்கு சக்காளத்தர்கள் நிறைய உண்டு, பல பேரு இந்த பூங்குழலி மேல காதல் மயக்கத்துல சுத்திக்கிட்டிருக்காங்க...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஷீலா மிஸ் (என் முதல் குரு)
நான் முதன்முதலில் எல்.கே.ஜி.யில் அழுதுக்கொண்டே சேர்க்கப்பட்டபோது பிஸ்கட் கொடுத்து என் அழுகையை நிறுத்தியவர். எல்லாக் குழந்தைகளையும் எளிதில் ஃப்ரெண்ட் செய்துக்கொள்வார். இவரது ஸ்பெஷாலிட்டி, எல்லா அம்மாக்களின் ஜாடையையும் குழந்தைகளுக்கு காட்டும் இவரின் சிரித்தமுகம். நான் +2 வரை ஒரே ஸ்கூலில் படித்தேன். என் ஸ்கூல் நினைவுவரும்போதெல்லாம் இவரைப் பற்றி எண்ணாமலிருந்ததில்லை... 2000ஆம் ஆண்டு என் ஸ்கூல் லைஃப் முடிந்தது. 2 வருடம் முன்புகூட இவர்களை ஒரு பஸ் ஸ்டாண்டில் சந்தித்தேன். இன்னும் ரிடையர்ட் ஆகாமல், அதே ஸ்கூலில் வேலை செய்கிறாராம். எனக்கு மீண்டும் ஸ்கூலில் போய் சேர வேண்டும்போல் இருந்தது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆச்சி மனோரமா
சிறுவயதில் எனது பள்ளிவிடுமுறையில் நான் பார்த்த 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தில்தான் முதன்முதலில் நான் இவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். இந்த படத்திற்கு பிறகு நான் இவரை என் சொந்த பாட்டியாகவே கருத ஆரம்பித்தேன். எல்லா சிறுவர்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதன்பிறகு பெரும்பாலான முன்னனி நடிகர்கள் இருக்கும் படங்களிலும், டிவியில் பார்க்கும் பழைய கருப்பு வெள்ளை படங்களிலும் இவர்களது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் என்னை பெரிதும் ஈர்த்தன. 'சகல கலா வல்லி' என்று நடிகர் திலகத்தால் இவர் அழைக்கப்பட்டது மிகவும் பொருந்தும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ப்ரியா (என் டீம் லீடர் - வெல்விஷர்)
நான் வேலை செய்த (B.P.O.) ஆஃபீசில் இவர் எனக்கு டீம் லீடர். இளவயதில் நிறுவனப் பொறுப்பை பயங்கரமாக நடத்திய இவரைப் பார்த்து அனைவரும் மிரளுவார்கள் (நானும்தான்..!)... ஆனால், இவரிடம் பிடித்த விஷயம், ஒருவரின் Extra Curricular Activitiesஐ மிகவும் ஆதரித்தது. நான் முதன்முதலில் டைரக்ட் செய்த மேடை நாடகம் இவரின் உதவியால் Taj Connimerahவில் அரங்கேறியது. அதன்பிறகு ஆண்டிற்கொருமுறை வெள்ளைக்கார முதலாளிகள் முன்னிலையில் பலமுறை நட்சத்திர ஹோட்டல்களில் மேடைநாடகம் நடத்தும் வாய்ப்பு இவரால் எனக்கு ஏற்பட்டது. நல்ல வெல்விஷர், ஃப்ரெண்டு, அக்கா என்றும் சொல்லலாம்.--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இளவரசி டயானா
டயானாவின் புகைப்படம் அதில் அவள் அணிந்திருக்கும் புன்னகை.. ச்சோ ச்வீட்... முதுமை தொடாமல் மாண்ட இளவரசி டயானா..! ஏனோ ரொம்ப பிடிக்கும்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீரா ஜாஸ்மின்
மன்னிக்கவும், ஒரே துறையை சார்ந்த இரு பெண்கள் பற்றி எழுதக்கூடாது என்று ரூல் போட்டிருந்தார்கள். மீராவுக்காக Rules மீறிவிட்டேன். எல்லோரும் காதலியின் முகத்தில் ஒரு நடிகையின் சாயலைத் தேடுவார்கள். ஆனால், இந்த நடிகையின் முகத்தில் என் காதலியின் சாயல் தெரிந்தத்தால் எனக்கு இந்த நடிகையை மிகவும் பிடித்துப்போனது. ஆச்சர்யம் என்னவென்றால் இவர் நடிக்கவும் செய்தார். நீண்ட நாட்கள் என் டெஸ்க்டாப் வால்பேப்பரில் இருந்த நடிகை. ரன் படத்தை மட்டும் மீரா ஜாஸ்மினுக்காக எத்தனைமுறை பார்த்தேன் என்று தெரியவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குந்தவை நாச்சியார்
மீண்டும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரமா என்று நினைக்க வேண்டாம்.
இவர்கள் கற்பனைப்பாத்திரமல்ல, உண்மையில் வாழ்ந்தவர்... இவரது Management Skillsஐப் பற்றி பலபேர் வியந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் Intellectual Womenஆக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இன்றும் இவரது நினைவாக இவரது பெயரில் ஒரு மகளிர் கல்லூரி தஞ்சையில் இருக்கிறது. அந்தளவிற்கு மரியாதை செலுத்தபட்டவர். ராஜராஜ சோழனின் வரலாற்று வெற்றிக்குப் பின்னால் இவரது பெரும்பங்கு உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இவர்கள் கற்பனைப்பாத்திரமல்ல, உண்மையில் வாழ்ந்தவர்... இவரது Management Skillsஐப் பற்றி பலபேர் வியந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் Intellectual Womenஆக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இன்றும் இவரது நினைவாக இவரது பெயரில் ஒரு மகளிர் கல்லூரி தஞ்சையில் இருக்கிறது. அந்தளவிற்கு மரியாதை செலுத்தபட்டவர். ராஜராஜ சோழனின் வரலாற்று வெற்றிக்குப் பின்னால் இவரது பெரும்பங்கு உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் தாமரை
இவர்களின் பாடல் வரிகள் சமீபத்தில் மிகவும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆங்கில வார்த்தைகள் உபயோகிக்காமல் எழுதும் இவர்களது புலமை அருமை. 'கலாபக் காதலா', 'வசீகரா', என்று ஆண்களை செல்லமாய் தமிழ் வார்த்தைகளில் கொஞ்சலாக அழைக்கும் விதத்திலும் 'உனக்குள் நானே உருகும் இரவில்..' போன்ற பாடல்களிலும் காதல் வடியும். பெண்ணின் லவ்வில் Devotion & Dedication இருக்கும் என்று சொல்வார்களே, அதை இவர்களது பாடலில் உணர முடிகிறது. Lovely..!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரேயா கோஷல்
'முன்பே வா... என் அன்பே வா..' என்ற இவரது பாடலில் ஒலிக்கும் குரலில் என்னமோ இருந்தது. இந்த பாடலை முதல் தடவை கேட்கும்போதே பச்சக் என்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. 3 நாட்கள் இந்த பாடலின் ஹம்மிங் மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருந்தது. இவர் குரல் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் ஸ்டார் சூப்பர் சிங்கர்-ல் குழந்தைகளுக்கு ஜட்ஜாக வந்தபோது இவர் தொகுத்து வழங்கியவிதத்தை குழந்தையாகவே மாறி ரசித்தேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒளவை பாட்டி & K.B.Sundarambal
'அறம் செய்ய விரும்பு' என்று சிறுவயதிலிருந்து இவரைப் பற்றி நாம் படித்திருப்போம். பிறகு சினிமாவில் 'பழம் நீயப்பா' என்று கம்பீரமாக பாடும் KBS அவர்கள் மேலும் இந்த ஔவை என்ற கதாபாத்திரத்துக்கு அழகு சேர்த்தார். இருவரும் ஒருவரே என்ற எண்ணம் நீண்ட நாள் எனக்குள் இருந்தது. அந்தளவிற்கு பொருத்தம். ஔவை பாட்டியைப் பற்றி 2 வருடத்திற்கு முன், சில விசேஷ தகவல்களை, அவரைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் திரு. வேம்பத்தூர் கிருஷ்ணன் என்ற எழுத்தாளரிடம் பேசும்போது தெரிந்துக் கொண்டேன். அன்றிலிருந்து ஔவையின் மேல் மதிப்பும் மரியாதையும் எனக்கு இன்னும் அதிகமானது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் வாழ்வில் நான் ரசித்த, மலைத்த பெண்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறேன். இந்த பதிவைத் தொடருமாறு கீழ்காணும் நண்பர்களை அழைக்கிறேன்.
நாய்குட்டி மனசு - ராஜ்குமார்
தேவன் மாயம்
கிருலா - பிரபு (இவர் வலைப்பதிவிற்கு புதியவர், ஆரம்பமே தொடர்பதிவா..!)
சீமான் கனி
இந்த தொடர் பதிவுக்கான விதிமுறைகள்
1. உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது., வரிசை முக்கியம் இல்லை.,
2. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.
30 comments:
சூப்பர்..:)
நன்றி ஷங்கர்...
டச்சிங்.......... நல்ல தெரிவுகள்தான்....... நன்றி ஹரீஷ்.
காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத நல்ல தேர்வு...
பதிவு அருமை. வாழ்த்துகள் நண்பரே
Dreamer என்பதை உறுதி படுத்திவிட்டீர்கள்..குறிப்பாக குந்தவை தேவி மற்றும் பூங்குழலி கதாபாத்திரங்கள் அருமை... வானதி தேவியை விட்டு விட்டீர்களே?..
சில காலமே வாசிப்பில் பழக்கம் இருந்தும் எனக்கு உங்கள் கதைகளின் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். உங்கள் தொடர் அழைப்பிற்கு நானா? கிள்ளிக் கொண்டேன், ஆஆஆஆஆஆ ம்ம்ம் வலிக்கிறது. கண்டிப்பாக தொடருகிறேன், நன்றி.
அவ்வையைப் பற்றின்னு சொல்லி விஷயத்தை சொல்லாம விட்டுடீங்களே. எனக்கு அவ்வையின் நட்பு (அந்தக் காலத்திலேயே சிறந்த ஆண் நண்பரைக் கொண்டவர்) மிகவும் pidikkum
வாங்க சைவகொத்துப்பரோட்டா
//டச்சிங்...//
நண்பா... இதுதான் என் முதல் தொடர்பதிவு...
அழைத்து ஊக்கப்படுத்தியதற்கும், வாசித்து வாழ்த்தியதற்கும்
மிக்க நன்றி...
----------------------------------------------------------------------
வாங்க ஜீவன்சிவம்
வருகைக்கும் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நண்பரே..! தொடர்ந்து வாருங்கள்..!
----------------------------------------------------------------------
வாங்க நாடோடி
//Dreamer என்பதை உறுதி படுத்திவிட்டீர்கள்..//
மிக்க நன்றி..! வானதி பாத்திரமும் ரொம்ப பிடிக்கும்..!
ஆனா தலைப்புல '10 பெண்கள்'னு சொல்லியிருந்தாங்க...
அதான்..! இதே 100ன்னா... லிஸ்டுல நிறைய்ய்ய்ய்ய்ய உண்டு
ஃபாலோவரா சேர்ந்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்.
----------------------------------------------------------------------
ராஜ்குமார் (நாய்க்குட்டி மனசு)
//சில காலமே வாசிப்பில் பழக்கம் இருந்தும் எனக்கு உங்கள் கதைகளின் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். //
நீங்கள்லாம் படிக்கிறீங்க என்ற நம்பிக்கையில்தான் நிறைய எழுதத் தோணுது...
//அவ்வையைப் பற்றின்னு சொல்லி விஷயத்தை சொல்லாம விட்டுடீங்களே//
கண்டிப்பா சீக்கிரம் சொல்றேன்...
//எனக்கு அவ்வையின் நட்பு (அந்தக் காலத்திலேயே சிறந்த ஆண் நண்பரைக் கொண்டவர்) மிகவும் pidikkum//
நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கும் இந்த பாய்ண்ட் தோணுது...
உண்மையிலேயே அவங்க ஒரு அதிசய பெண்மணி...
----------------------------------------------------------------------
perfect!!!
மிக நல்ல தேர்வு....
அருமை.
வாங்க வெள்ளிநிலா ஷர்புதீன்,
//perfect!!!//
மிக்க நன்றி..!
வாங்க கருணாகரசு,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!
//அக்கா என்றும் சொல்லலாம்//
யாரு, ப்ரியாவையா? ஹி..ஹி...
மீரா ஜாஸ்மின் - ஹும்ம்ம்!
"உனக்குள் நானே" பாடல் நடிகை ரோகிணி எழுதினதுன்னு நினைக்கிறேன். But I'm not sure
ஸ்ரேயா கோஷல் - ஆமா, வெரி நைஸ்...நான் பாடுறதைதான் சொல்றேன் ;)
வாங்க ரகு,
நியூ டிஸ்ப்ளே ஃபோட்டோ nostalgicஆ இருக்கு...
'உனக்குள் நானே' பாடல் lyricist தேடிப்பார்த்தேன். ரோகிணி என்றுதான் வருகிறது. நம்ம ரோகிணியா இப்படி எழுதினது... அப்போ 'எனக்கு பிடித்த 11 பெண்மணிகள்'னு தலைப்பை மாத்த வேண்டியதுதான்.
//மீரா ஜாஸ்மின் - ஹும்ம்ம்!//
ஹூம்ம்ம்ம்ம்ம்...
//ஸ்ரேயா கோஷல் - ஆமா, வெரி நைஸ்...நான் பாடுறதைதான் சொல்றேன்//
தெரியும் ரகு, எனக்கு உங்களைப் பத்தி தெரியாதா..(?!)
-
DREAMER
நல்லா பகிர்வு நண்பரே...கதாபத்திரங்களையும் இணைத்திருப்பது அருமை...என்னையும் மாட்டி விட்டுடீங்களா....கண்டிப்பாய் எழுதுகிறேன்... நன்றி...
வாங்க சீமான்கனி,
நன்றி..! எழுதும்போது ஒரு ஆர்வம் தானா வந்துடுது... தலைப்பு அப்படி..! யாம் பெற்ற இன்பம் சீமான்கனியும் பெறுகன்னு அழைப்பு விடுத்துட்டேன்!
-
DREAMER
யதார்த்த பிடித்தங்கள் !
நன்றி அனானிமஸ் நண்பரே..!
//டச்சிங்.......... நல்ல தெரிவுகள்தான்....... //
ரிப்பீபீபீபீபீபீபீபீபீபீபீ......................ட்டு
//இந்த நடிகையின் முகத்தில் என் காதலியின் சாயல்//
ஹரிஷ் Okay Okay.............
நல்ல பதிவு ... சிறு கதை யும் தொடர் கதையா எழுதுங்க ஹரிஷ்
அதுக்காக சிறு கதைய விட்டுறாதிங்க
தொடர்ந்து பதிவு எழுதுங்கள்
வாங்க அமைச்சரே..!
ரிப்பீட்டியதற்கு நன்றி..!
வாங்க வேங்கை...
நீங்கள்லாம் படிக்கிறீங்க என்கிற நம்பிக்கையில்தான், தொடர்கதை ஒண்ணு எழுதிட்டிருக்கேன்... சீக்கிரம் போஸ்ட் பண்றேன்.
-
DREAMER
உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!
நன்றி ஹுசைன்னம்மா,
தகவல் பகிர்வுதானே இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது..? எனக்கு பிடித்ததை, உங்கள் நட்பு வட்டத்துடன் பகிர்ந்து கொண்டதில் உண்மையில் எனக்கும் மகிழ்ச்சி...
-
DREAMER
//எனக்கு பிடித்த 10 பெண்களை மட்டுமே (தலைப்பின் காரணமாக) இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தலைப்பை 'எனக்கு பிடித்த 100 பெண்கள்' என்று மாற்றினால் ஒரு தொடரே எழுதலாம். பரவாயில்லை..! வருஷாவருஷம் பத்துபத்தா சொல்லலாம்//.
அடப்பாவி அவனவன் 10 எழுதறதுக்கே தெனரறான் நீங்க 100 பெண்கள் தலைப்பு கேக்கறீங்களா?
Dreamer ங்கற பேரு ரெம்ப பொருத்தம் தான்
ஹா ஹா... நன்றி தங்கமணி...
இட் ஈஸ் டிபரண்ட்
நன்றி ரிஷபன்
சூப்பர்
பிடித்த 10 பெண்களைஅருமை
நன்றி நண்பரே..!
ROJA
நன்றி ரோஜா...
Post a Comment