Saturday, March 27, 2010

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் - 2 [தொடர்கதை]




பாகம் 2

மறுநாள் காலை ரகு ஜிம்மில் ட்ரெட்மில்லரில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தான். அருகில் அவனது நண்பன் தினேஷ் நடந்துக்கொண்டிருந்தான்.

'ஹே தினேஷ்...'

'ஹே ரகு... மார்னிங்டா..'

'ம்ம்..அப்புறம் ஹவ் வாஸ் யெஸ்டர்டே..?'

'என்ன டே.. எல்லாம் ஒரே மாதிரிதான். ப்ரீத்திக்கு செலவு பண்ணவே சரியாயிருக்கு... அவ என்னமோ ஐநாக்ஸ்லதான் படம் பாப்பேன்னு அடம்புடிக்கிறா.. இல்லமா, வேற எங்கேயாவது போலாம்னா, நான் வரவேமாட்டேங்கிறா..?'

'ஓ..'

'உனக்கென்னடா கவலை..? நீ ஜாலியா பேச்சுலர் லைஃப்-பை தனியா என்ஜாய் பண்ணிக்கிட்டிருக்கே..!'

'சாரி பாஸ், அது பாஸ்ட்டென்ஸ்...' என்று ரகு கூற, ஜாக் செய்துக்கொண்டிருந்த தினேஷ் நின்றுவிட்டான்.

'என்னடா சொல்றே..?' என்று ஆச்சர்யம் காட்டினான்.

'ஆமாண்டா, நானும் டன்...டனாட்டன்..' என்றான்.

தினேஷ் சிரித்தான். பிறகு யார்? என்ன? என்று கேட்க, இருவரும் ட்ரெட்மில்லரில் ஒரே இடத்தில் நடந்தபடி, ரகு நடந்தவற்றைக் கூறி முடித்தான்.

'டேய் ரகு, சொல்றேன்னு கோவிச்சுக்காத, இது ஏதாவது நூதன திருட்டு டெக்னிக்கா இருக்க போது எதுக்கும் உஷாராயிரு..' என்றான்.

'போடா, அதெல்லாம் நான் நிறைய பேசிப்பாத்துட்டேன். She is crazy about me'

'அப்படியா.. ஓகே... எனிவே, குட்லக்..' என்றான்.

அவனிடமிருந்து விடைபெற்று மீண்டும், தனது அபார்ட்மெண்டுக்கு வந்து பைக்கை பார்க் செய்யும்போது, மீண்டும் செல்ஃபோன் ஒலித்தது. நிரூபாதான்.

'ஹே.. டியர் குட்மார்னிங்..'

'ஹாய்டா, குட் மார்னிங்..'

'என்ன ஃப்ரெண்ட் நம்பர்ல பேலன்சு கம்மியாயிருக்கன்னே..?'

'அவ பிரதர் ரீஜார்ஜ் பண்ணிட்டானாம். எனக்குத்தான் அது தெரியவேயில்ல..!'

'வெரிகுட்..!' என்றான்

'அதுக்குள்ள எழுந்துட்டியா..? நைட் லேட்டா தூங்கினோமே எழுந்திருப்போயோன்னு டவுட்டாத்தான் ஃபோன் பண்ணேன்.' என்றாள்.

'நான் எப்பவோ எழுந்து ஜிம்முக்கு போயிட்டு இப்போத்தான் ரிட்டர்ன் வந்தேன்.' என்று கூறியபடி லிஃப்டில் 3வது மாடிக்கு வந்து கதவைத்திறந்தான்.

'ம்ம்ம்.. ஜிம்முக்கெல்லாம் போவியா... ஹே, உன்னைப் பாக்கணும்டா...'

'டோன்ட் வர்ரி டார்லிங், நான் குட்லுக்கிங்தான்.'

'நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லடா..'

'எப்படியிருந்தாலும் ஐ லவ் யூ-ங்கிறியா..?' என்று பட்டென்று கேட்டுவிட, அவள் சற்று மௌனமாயிருந்தாள்.

'ஹே.. நிரூ.. என்னாச்சுடி..'

'இல்ல, நீ ஏதோ சொன்னியே..'

'ஐ லவ் யூவான்னு கேட்டேன்'

'நிஜமாவா..?'

'என்னது?'

'உனக்கு என்ன பிடிச்சிருக்கா..?'

'ஹே நிரூ... கமான். இதென்ன கேள்வி, உன்னை பிடிக்காமத்தான் நேத்து நைட் விடிய விடிய உங்கூட பேசிட்டிருந்தேனா... ஐ ரியலி லவ் யூ நிரூ டியர்' என்றான். அவள் குதூகலப்படுவதை ரகுவால் உணர முடிந்தது.

'வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆவ்... தேங்க்யூடா... தேங்கயூ சோஓஓஓஓஓஓ மச்.. ஐ லவ் யு டூஊஊ....' என்று மீண்டும் அவர்களது பேச்சு ஒரு அரைமணி நேரம் தொடர்ந்தது.

ரகு ஆஃபிசுக்கு கிளம்ப வேண்டிய அவசரத்திலிருந்ததால், 'ஹே டியர், ரொம்ப சாரிடி, இப்போ நான் போயாகணும்..'

'போவணுமா..?'

'ஆமா, லீவெல்லாம் முடிஞ்சிடிச்சி, இனியும் லீவ் போட்டா, LOPதான்...'

'சரிடா, நீ கிளம்பு, அப்புறம் பேசுவோம்'

'ஹே நீ எப்ப ரிட்டர்ன் வருவே...?'

'அதான் சொன்னேனே..! ஒரு 2 நாள் ஆகும்னு..'

'அது நேத்து சொன்னே.. இன்னும் ஒரு நாள்ல வந்துடுவேல்ல..?'

'கண்டிப்பா வந்துடுவேன்'

'ஓகே... Take Care...' என்று ஃபோனை துண்டித்தான்.

தனது ஃப்ளாட் வாசலில் வீசப்பட்டிருந்த தந்தி பேப்பரை எடுத்து வந்து டைனிங் டேபிளில் போட்டான், ஃபிரிட்ஜைத் திறந்து இரண்டு முட்டைகளை உடைத்துக் குடித்தான். கிச்சனுக்குள்ளிருந்து சூடான பாலை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து வந்து பேப்பரைப் படித்தபடி உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தான்.

தலைப்புச் செய்தி அரசியல் பேசியது... பிடிக்காதென்பதால் புரட்டினான்.

கன்னித்தீவு... சிந்துபாத் மந்திரவாதிக் குகையில் நின்றிருக்க, சிங்கம் சீறியது... உர்ர்ர்ரர் (தொடரும்)

சாணக்கியன் புத்திமதி சொன்னார்... ஆண்டியார் பாடினார்...

திடீரென்று கவனித்தான். அந்த தனியார் விளம்பரம், அவன் கண்ணை உறுத்தியது. அவன் குடித்த பாலும், உள்ளிருக்கும் முட்டையின் கருவும் கலைந்துவிடுவது போல் தோன்றியது.

அந்த விளம்பரம்... கண்ணீர் அஞ்சலி...

பெயர் - நிரூபா
வயது - 24

வானில் பறந்து சென்ற
உன்னை எட்டிப் பிடிக்க
சிறகுகளின்றி வாடும்
பெற்றோர்கள்.'

விளம்பரத்தி, ரகு அதிக நேரம் செல்ஃபோனில் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த அதே புகைப்படம் இருந்தது...

(தொடரும்...)

இந்தக் கதையின் அடுத்த பாகம் 3ஐப் படிக்க இங்கே சொடுக்கவும்

Signature

11 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்....ஒரே மூச்சில் இரு பாகத்தையும் படித்து விட்டேன், அடுத்த
பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்!!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஆஹா ! நான் சொன்னது போலவே திசை திரும்பியாச்சு. ஆரம்ப கால ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகை நான். அந்த ஸ்டைல் உங்களிடம் தெரிகிறது

DREAMER said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நன்றி நண்பா, அடுத்த பாகத்தை விரைவில் போஸ்ட் செய்கிறேன்.

வாங்க நாய்க்குட்டி மனசு,
ஜாம்பவனோடு என் எழுத்தையும் சேர்த்து வைத்து பேசியதற்கு, மிக்க நன்றி. ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களை நானும் கல்லூரி நாட்களில் நிறைய படித்திருக்கிறேன்.

நாடோடி said...

நல்லா இருக்கு ஹரீஸ்..அடுத்த பாகத்திற்கு வெயிடிங்..

DREAMER said...

வாங்க நாடோடி நண்பரே,
நன்றி! சீக்கிரமா போஸ்ட் பண்ணிடுறேன்..!

அன்புடன் அருணா said...

கதை சூப்பரா போகுது...அப்புறம்?

எல் கே said...

nalla nadai nanbare

LK
http://vezham.co.cc

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வலைச்சரம் மூலமாக வந்தேன்

DREAMER said...

வாங்க அன்புடன் அருணா,
கதையை ரசித்ததற்கு மிக்க நன்றி..! இதோ அடுத்த பாகம் போஸ்ட் செய்யப்போகிறேன்..!

வாங்க LK நண்பரே,
வாழ்த்துக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

வாருங்கள் SUREஷ் நண்பரே,
வலைச்சரத்தில் என்னைப் பற்றி எழுதியதை உங்கள் மூலமாகத்தான் அறிந்தேன். மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்..! நன்றி!

சீமான்கனி said...

எதார்த்தங்களை மீறினாலும் கதை சுவாரசியமா போகுது நண்பரே...
மிஸ்டர் ஹாமாம் அடுத்து.....(தொடரும்...)அவசரமாய் தொடருங்கள்...

DREAMER said...

வாங்க சீமான்கனி,
நன்றி நண்பரே, அடுத்த பாகம் இடுகையிட்டுவிட்டேன். கடைசி பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்..! விரைவில் போஸ்ட் செய்கிறேன்! வருகைக்கும் வாசிக்கும் நன்றி நண்பா...

-
DREAMER

Popular Posts